Author Archives: srikaleeswarar

ஒரு எளிமையான லினக்ஸ் கட்டளையின் மூலம், உங்கள் புகைப்படத்தின் பின்னணியை நீக்கலாம் !

சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக, நாம் எடுக்கும் புகைப்படங்களில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினை! அதன் பின்னணியாக(background) தான் இருக்கும். புகைப்படங்களின் நேர்த்தியை, மோசமான பின்னணிகள் குறைத்து விடும். புகைப்படங்களின் பின்னணியை நீக்க, ஆண்ட்ராய்டு செயலிகள் குப்பை போல கொட்டி கிடக்கின்றன. ஆனால், அவற்றின் பெரும்பாலானவை விளம்பரங்களாய் நிரம்பி வழிகின்றன. சிலவற்றிற்கு, அதிகப்படியான தொகையை செலவிட வேண்டி உள்ளது. மேலும், அவை யாவும் திறந்த நிலை(open source) பயன்பாடுகள் அல்ல. ஆனால், இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமைந்திருப்பது தான்!… Read More »

OLLAMA(ஒல்லமா) என்றால் என்ன? அதில் நீங்கள் என்ன செய்ய முடியும்!

உங்களுடைய கணினியில், பல்வேறுபட்ட திறன்மிகு மொழி மாதிரிகளை(LLM) இயக்கி பார்ப்பதற்கான, ஒரு திறந்த நிலை திட்டம்(OPEN SOURCE PROJECT)தான் “OLLAMA” (ஒல்லமா). நிரல் மொழிகளை இயக்குவதற்காக, CODESTRAL அல்லது Chat gpt போன்ற அனுபவத்தை பெறுவதற்காக,LLaMa 3 போன்ற திறன்மிகு மொழி மாதிரிகளை உங்கள் கணினியில் இயக்குவதற்கு ஒரு சிறந்த வழி தான் OLLAMA(ஒல்லமா). அதை எவ்வாறு செய்வது? எங்கிருந்து தரவிறக்குவது?உள்ளிட்ட அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் விடை அளிக்கிறது இந்த கட்டுரை. ollama என்றால் என்ன? லினக்ஸ்{Linux… Read More »

ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு சிறந்த திறந்த நிலை கோப்பு மேலாளர்

கணியம் இணையதள வாசகர்களுக்கு வணக்கம்………………. உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனங்களில், பலவிதமான கோப்பு மேலாளர்களை பயன்படுத்தி இருப்பீர்கள். காலத்திற்கு ஏற்ப கோப்பு மேலாளர்களும் பலகட்ட மாறுதல்களை சந்தித்து இருக்கின்றன. பலரும் ES கோப்பு மேலாளர் (ES FILE MANAGER) ,solid explorer போன்றவற்றை பயன்படுத்தி இருப்பீர்கள். இதற்கு மிக முக்கியமான காரணம், நம்மில் பலருக்கும் கூகுள் நிறுவனம் வழங்கும் கோப்பு மேலாளர் திருப்தி அளிப்பது இல்லை. ஆனால், மேற்கூறிய தனியார் கோப்பு மேலாளர்களில், பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் அதிகப்படியான… Read More »

உங்களுக்கான பிரத்தியேகமான செயற்கை நுண்ணறிவு உதவியாளரை  தேர்ந்தெடுங்கள் – LM STUDIO

உங்களுக்கான, பிரத்தியேகமான செயற்கை நுண்ணறிவு(personalized Ai assistant) உதவியாளர்களுக்கு,  திறன்மிகு மொழி மாதிரிகளை(LLM ) கணினியில் ஏற்றுவதற்கு, ஒரு சிறந்த வாய்ப்பை LM STUDIO ஏற்படுத்தி இருக்கிறது. அது குறித்து விவரமாக காணலாம். இதன் மூலம்,உங்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு எவ்வித பாதகமும் இன்றி, மேலும் பெரு நிறுவனங்களை சார்ந்திருக்காது. அதிக தொகை கொடுத்து AI மாடல்களை வாங்காமல், உங்களால், உங்களுக்கான ஒரு AI உதவியாளரை உருவாக்க முடியும். தனிநபர் GPT மற்றும் ollama போன்றவற்றின் மூலம், இதை… Read More »