Author Archives: srikaleeswarar

ஆல் ரவுண்டர் NOR லாஜிக் கதவுகள்|  லாஜிக் கதவுகள் குறுந்தொடர் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 48

லாஜிக் கதவுகள் தொடர்பான சில அடிப்படையான கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகி வந்தன. அந்த வகையில் AND,OR,NOT,NOR,EXOR,NAND உள்ளிட்ட லாஜிக் கதவுகள் குறித்து பார்த்து விட்டோம். மேலும், லாஜிக் கதவுகளோடு தொடர்புடைய டி மார்கன் விதி குறித்தும் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் லாஜிக் கட்டுரைகள் குறுந்தொடரின் இறுதிப் பகுதியை நெருங்கி விட்டோம். NOR,NAND ஆகிய இரண்டு லாஜிக் கதவுகளும் Universal லாஜிக் கதவுகள் என அறியப்படுகிறது. இந்த இரண்டு லாஜிக் கதவுகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி, இன்ன பிற… Read More »

டி-மார்கன் விதிகள் | லாஜிக் கதவுகள் குறுந்தொடர் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 47

லாஜிக் கதவுகளில் நாம் முக்கியமாக மற்றும் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விதி தான். டிமார்கன் விதிகள். இந்த விதியானது பூலியன் இயற்கணிதத்தின் அடிப்படை விதிகளிலும் ஒன்றாக அறியப்படுகிறது. மற்றபடி உள்ள இயற்கணித செயல்பாடுகளிலும் கூட, பள்ளி அளவிலேயே டிமார்கன் விதிகளை நீங்கள் படித்திருக்க வாய்ப்பிருக்கிறது. சரி எப்படி இருந்தாலும், எளிய வகையில் இந்த விதியை உங்களுக்கு விளக்கி விடுகிறேன். இந்த விதி உங்களுக்கு தெரிந்திருந்தால் தான், அடுத்தடுத்து வரக்கூடிய ஆல்ரவுண்டர் லாஜிக் கதவுகள் உங்களுக்கு… Read More »

C மொழியில் அச்சிடுவது எப்படி ? | எளிய தமிழில் சி பகுதி 7

எளிய தமிழில் சி பகுதியில் ஆரம்பக் கட்டுரைகளிலேயே பொங்கல் வாழ்த்து சொல்வது எப்படி? என ஒரு சுவாரசிய கட்டுரையை எழுதி இருந்தேன். இருந்த போதிலும் கூட, அந்த கட்டுரையில் C மொழியில் அச்சிடுவதற்கான சில விதிமுறைகளை முறைப்படி எழுதவில்லை. எந்த ஒரு மொழியிலேயுமே அச்சிடுவது(print statement)தான் மிக முக்கியமான ஒரு பகுதி. நீங்கள் ஒரு மதிப்பை அச்சிடும்போது தான், நீங்கள் எழுதி இருக்கும் நிரலின் தேவையான பகுதிகளை பயனர்களுக்கு வழங்க முடியும். உதாரணமாக, நீங்கள் ஒரு கணிப்பானுக்கான… Read More »

உங்கள் வரவு செலவுகளை கவனிக்க ஒரு சிறந்த கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 17

உங்களுடைய வரவு செலவுகளை பார்ப்பதற்கு மற்றும் எங்கு செலவழிக்கிறோம் என்றே தெரியாமல் பணம் செலவழிகிறது? என்று வருந்துபவர்களுக்கு ஒரு கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலி இருக்கிறது இந்த ஆண்ட்ராய்டு செயலியானது முழுக்க முழுக்க கட்டற்ற முறையில் தயாரிக்கப்பட்டு இருப்பதால், உங்களுடைய தகவல்கள் மற்றும் வரவு செலவு கணக்குகள் பெரு நிறுவனங்களின் கைகளில் சென்று விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்படுமோ என்று வருந்த வேண்டாம். இந்த செயலியானது மிகவும் எளிமையான மற்றும் நுட்பமான வரவு செலவு கணக்குகளை சமாளிக்கக்கூடிய வசதிகளை வழங்குகிறது. மேலும்… Read More »

வருங்காலத்தை  ஆளப்போகும் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் – 2 | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 46

கடந்த கட்டுரையில் வருங்காலத்தில் ஆளப்போகும் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் தொடர்பாக பார்த்து இருந்தோம். அந்த கட்டுரையின் தொடர்ச்சி தான் இது. IOT & Remote Networks இணையத்தோடு இணைந்த சாதனங்கள் என அறியப்படும் IOT (Internet of things)தொழில்நுட்பமானது, கடந்த சில தசாப்தங்களில் அளப்பரிய வளர்ச்சியை சந்தித்திருக்கிறது. உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டும் மற்றும் ஒரு பகுதியில் இருக்கக்கூடிய கருவியை இணையத்தின் ஊடாக இணைப்பதே இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையை ஆகும். ஆரம்பகால மாதிரிகளில் அதிகப்படியான மின்சார தேவையும்… Read More »

வருங்காலத்தை ஆளப்போகும் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் – 1| எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 45

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் பல்வேறு விதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தொடர்பாக அடிப்படையில் இருந்தே பார்த்து வருகிறோம். ஆனால், தற்கால அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் துறையானது மிக வேகமாக வருங்காலத்தை ஆளப்போகும் தொழில்நுட்பங்களால், பதிலீடு(replace) செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரபஞ்சத்தின் காலவெளிக்கு ஏற்ப, எலக்ட்ரானிக்ஸ் துறையும் தன்னை தகவமைத்துக் கொள்ள தவறுவதில்லை. அப்படி வருங்காலத்தைக் கலக்கப்போகும், வருங்காலத்தில் நம்மை ஆளப்போகும் சில எலக்ட்ரானிக்ஸ் துறைகள் தொடர்பாகத்தான் இந்த சுவாரசிய கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம். நீங்கள் இதுவரை படித்து எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளோடு ஒப்பிடும்போது இந்த… Read More »

C மொழியின் மாறிகள் | எளிய தமிழில் C பகுதி -6

மாறி என்றால் என்ன? எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய கணித ஆசிரியர் இந்த பெயரை முதல் முதலாக சொன்னபோது, தனுஷ் நடிச்ச படம் தான் “மாரி” என பின் பெஞ்சிலிருந்த நண்பன் சத்தம் போட்டது இன்றும் நினைவிருக்கிறது. ஒருபுறம் மாறி என்பதையும், மாரி என்பதையும் குழப்பிக் கொண்டவர்கள் பலரும் இருக்கிறார்கள். மாரி என்றால் மழை என்று அர்த்தம். மாரி பொழியாது போனால், வையகம் எங்கும் வாடிய பயிர்கள்… Read More »

C மொழியில் அடுத்த வரிக்கு செல்வது எப்படி? | எளிய தமிழில் சி பகுதி 5

வழக்கமாக, பள்ளி- கல்லூரியில் ஆசிரியர் சொல்ல,சொல்ல மாணவர்கள் குறிப்பெடுத்து கொண்டிருக்கும் போது, இந்த வரியை அடுத்த பத்தியாக(para) எழுத வேண்டும் என ஆசிரியர் கூறுவார். அல்லது இந்த இடத்தில் மேற்கோள் குறி இட வேண்டும்(“) என்று குறிப்பிடுவார். இந்த அடிப்படையான வேலைகளை கணினியின் அடிப்படை மொழியான C யில் எப்படி செய்வது? என்று தான் இன்றைக்கு பார்க்கவிருக்கிறோம். ஏற்கனவே, printf() செயல்பாட்டின் மூலம் நீங்கள் கொடுக்கும் உள்ளீடை, வெளியீட்டு திரையில் காண்பிக்க முடியும் என பார்த்து இருந்தோம்.… Read More »

6000+ லினக்ஸ் கட்டளைகள்  ஒரே செயலியில்……| கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 16

ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட லினக்ஸ் கட்டளைகள் ஒரே இடத்தில்,அதுவும் இணையமின்றி எளிமையாக படித்துப் பார்க்கும் வகையில் ஒரு செயலியில் காணக் கிடைக்கிறது. சமீப காலமாக லினக்ஸ் பயனராக மாறியிருக்கும் எனக்கு, எங்கு லினக்ஸ் கட்டளைகளைப் படிப்பது? ஒவ்வொரு கட்டளையின் அடிப்படை குறித்தும் அறிந்து கொள்வதற்கு ஒரு கையேடு இருந்தால் வசதியாக இருக்குமே என்றெல்லாம் தோன்றியிருக்கிறது. அதற்காக சில இணைய புத்தகங்கள் கூட காணக் கிடைக்கின்றன. நம் கணியத்திலும் கூட விரிவான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. இருந்த போதிலும் கூட,அவற்றில் உங்களால்… Read More »

C மொழியின் குறிப்புகள்(comments) | எளிய தமிழில் C பகுதி 4

ஒவ்வொரு மொழியிலும் நிரலாக்கம் எழுதும்போது எந்த அளவிற்கு சரியாக எழுதுகிறோமோ, அந்த அளவிற்கு வரிக்கு வரி அதை விளக்கும் விதமான குறிப்புகளை வழங்கிக் கொண்டே வரவேண்டும். ஆங்கிலத்தில் இதை கமெண்ட் என அறியப்படுகிறது. எப்படி சமையல் செய்யும்போது சமையல் குறிப்புகள் பயன்படுகிறதோ, அது போலவே நிரலாக்கத்தின் போதும் குறிப்புகளை வழங்க வேண்டும். நீங்கள் ஒரு நிறுவனத்தில் குறுகிய காலம் பணியாற்றி விட்டு வெளியில் செல்ல கூடும். அப்படி வெளியில் செல்லும்போது, உங்களுக்குப் பிறகு அதே வேலைக்கு வருபவர்… Read More »