Category Archives: கணியம்

[தினம் ஒரு கட்டளை] PWD நீ எங்கே இருக்கிறாய்?

லினக்ஸ் இயங்குதளத்தில் பல்வேறு கட்டளைகள் உள்ளன. அவற்றை ஓவ்வொன்றாக நாம் தினம் ஒரு கட்டளை  தொகுப்பில் காணலாம். அதன்படி முதல் நாளான இன்று. PWD கட்டளை பற்றி காணலாம். PWD – Print Working Directory தற்போது நாம் எந்த கோப்புறையில் பணிபுரிகிறோம் என்பதனை அறிய இந்த கட்டளை பயன்படுகிறது. லினக்ஸ் கட்டளைகள் அனைத்திலும் கட்டளைகளோடு சில தெரிவுகள் கொடுக்கப்படும் அவ்வாறு PWD கட்டளையோடு இரு தெரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவை –logical மற்றும் –physical தொடரியல் :… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 26. ஓட்டுநர்களுக்கு உதவிக் குறிப்புகள்

மின்னூர்திகள் ஓடும்போது சத்தமே இருக்காது பெட்ரோல் டீசல் கார்களில் வரும் எஞ்சின் ஓடும் சத்தமும், அதிர்வும் மின்னூர்தி மோட்டார்களில் மிகக் குறைவு. காரில் உள்ள பயணிகளுக்கு இது மிகவும் வசதியானது. ஆனால் சாலையில் செல்லும் பாதசாரிகளால் வண்டி மிக அருகில் வந்தாலும் அதை உணர முடியாது. இது விபத்து ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஆகவே ஓட்டுநர் மேலும் கவனமாக ஓட்ட வேண்டும். முக்கியமாகப் பின்னோக்கிச் செல்லும்போது மிகக் கவனமாக ஓட்ட வேண்டும். கியர் மாற்றுதல் தானியங்கி கியர்… Read More »

புலவிளைவு  திரிதடையம்(FET ட்ரான்சிஸ்டர்) என்றால் என்ன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 21

ஏற்கனவே எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், தொடக்க கட்டுரைகளில் திரி தடையங்கள்(transistors) குறித்து பார்த்திருந்தோம். அடிப்படையில், டிரான்ஸிஸ்டர் கருவிகள் என ஆங்கிலத்தில் அறியப்படும் இவை, பல விதமான எலக்ட்ரானிக் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நான் அந்த கட்டுரையில் குறிப்பிட்டது இரு துருவ செயல்பாட்டு திரிதடையம்(BJT) மட்டும்தான். அதில் காணப்படக்கூடிய மற்றொரு வகை திரி தடையம், புல விளைவு திரிதடையம்( FET) என அறியப்படுகிறது. ஆங்கிலத்தில், ஃபீல்டு எஃபெக்ட் ட்ரான்சிஸ்டர் என அறியப்படும் இவை, மின்புலத்தைக் கொண்டு அதன் ஊடாக… Read More »

Machine Learning – ஓர் அறிமுகம் – இலவச இணைய உரை

நாள் – நவம்பர் 9 2024நேரம் – 11.30 AM – 1.30 PM IST இணைப்பு – meet.google.com/ykj-aksq-whw YouTube Live : www.youtube.com/live/rxH2k-kpgqw உரை – திரு. ராஜ வசந்தன்EachOneTeachOne Youtube channel நிறுவனர்CTO, Grids and Guides அனைவரும் வருக.

மின்னுருவாக்கத் திட்டம் – தமிழ் இணையக் கல்விக்கழகம்…!

மின்னுருவாக்கத் திட்டம் – தமிழ் இணையக் கல்விக்கழகம்…! உங்களிடம் உள்ள அரிய நூல்களை / புகைப்படங்களை இலவசமாக மின்னுருவாக்கம் (Digital) செய்யவேண்டுமா ? எனவே, பொதுமக்களும் நிறுவனங்களும் இந்த வாய்ப்பைநம் அடுத்த தலைமுறையினருக்கு பயன்படுத்திக் கொள்ளவும்.

எளிய தமிழில் Electric Vehicles 25. பேருந்து, சரக்குந்து போன்ற வணிக ஊர்திகள்

ஈய-அமில மின்கலத்தைப் பயன்படுத்தும் மின் கவைத்தூக்கி சரக்குந்துகள் (Electric forklift trucks) பல பத்தாண்டுகளாக சந்தையில் உள்ளன. இவை கப்பல்கள், கிடங்குகள் போன்ற இடங்களில் புகை இல்லாமல் உள்வேலை செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. நெடுஞ்சாலைகளில் வேகமாக ஓட இயலாது.  பேருந்துகளும் சரக்குந்துகளும் அடிப்படையில் கார்கள் போன்றவையே. எனினும் அதிக பளுவை சமாளிக்க அதிக முறுக்கு விசையும் (torque) திறனும் (power) தேவைப்படும். ஆகவே அதற்கேற்ற தோதான பெரிய மோட்டாரும் மின்கலமும் இருக்க வேண்டும். இன்றைய சந்தையில் மின் பேருந்துகளே… Read More »

மொபைல் சார்ஜர் கருவிகள் எவ்வாறு வேலை செய்கின்றன ?| எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 18

கடந்த எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், ஆப்டிகல் ஐசோலேட்டர்கள்(optical isolators) குறித்து பார்த்திருந்தோம். மொபைல் சார்ஜர் எவ்வாறு வேலை செய்கிறது? என்று ஒரு கட்டுரை எழுத விருப்பதாக, கடந்த கட்டுரையின் போதே குறிப்பிட்டு இருந்தேன். சில காரணங்களால், கடந்த வாரம் இந்த கட்டுரையை எழுத முடியவில்லை. சரி! மொபைல் சார்ஜர்கள் எவ்வாறு வேலை செய்கிறது? என்கிற ஒரு அடிப்படையான செயல்பாட்டு(Basic working) முறையை இந்த கட்டுரையில் காணலாம். அதற்கு முன்பாக, என்னுடைய இன்ன பிற எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 24. சக்கரத்திலேயே மோட்டார்

இரு சக்கர ஊர்திகளில், கார்கள் போன்று, இரண்டு சக்கரங்களை வேறுபாட்டுப் பல்லிணை (differential) வைத்து ஓட்டவேண்டிய பிரச்சினை கிடையாது. அப்படியிருக்க மோட்டாரிலிருந்து வார்ப்பட்டை (belt) அல்லது பல்லிணை (gear) மூலம்தான் சக்கரத்தைச் சுழற்றவேண்டுமா என்ன? உள்ளேயே மோட்டாரை வைத்து நேரடியாகச் சக்கரத்தைச் சுழற்றலாம் அல்லவா? அதுதான் சக்கர மோட்டார் (wheel or hub motor). சுற்றகம் (rotor) வெளிப்புறம் இருக்கும் வழக்கமாக மோட்டார்களில் நிலையகம் (stator) வெளிப்புறம் இருக்கும், சுற்றகம் உட்புறம் இருக்கும். ஆனால் நாம் வெளிப்புறத்திலுள்ள… Read More »

விக்கி மூல பங்களிப்பாளர் திரு. புகாரி அவர்களுடன் ஒரு நேர்காணல்

விக்கி மூலத்திற்கு பங்களிக்கக்கூடிய பலர் குறித்தும் நாம் கட்டுரைகளில் பார்த்திருந்தோம். அந்த வகையில் திரு.தாஹா புஹாரி அவர்கள் குறித்து, விக்கி மூலத்திற்கு பங்களிக்கக்கூடிய மற்றொரு பயனராகிய திரு.பாலாஜி அவர்களின் மூலம் அறிய நேர்ந்தது. நானும் எனக்குத் தெரிந்த வகையில் 10 கேள்விகளை தயார் செய்திருந்தேன். அந்தக் கேள்விகளை whatsapp வழியாக திரு.புஹாரி அவர்களுக்கு அனுப்பினேன். அவர்களும் ஒவ்வொரு கேள்விக்கும், தனது விலை மதிப்பில்லாத நேரத்தை செலவிட்டு முழு மனதோடு பதில் அளித்திருக்கிறார்கள். முழு மனதோடு கேள்விகளுக்கு பதிலளித்த… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 23. மின்-ரிக்‌ஷா

மின்-ரிக்‌ஷாக்கள் (E-Rickshaw) பகிர்ந்து கொள்ளும் வாடகை ஆட்டோவாக (share auto) வட, கிழக்கு மாநிலங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் மணிக்கு சுமார் 20 கிமீ வேகம்தான் செல்ல முடியும், வசதிகளும் குறைவு. ஆனால் கட்டணம் மிகக்குறைவு. ஆகவே மக்கள் இவற்றை உள்ளூர் வேலைகளுக்குப் பெருவாரியாகப் பயன்படுத்துகின்றனர். தொடக்கத்தில் சீனாவில் இருந்து பெரும்பாலான பாகங்களை இறக்குமதி செய்து இங்கே தொகுத்து விற்பனை செய்தனர். தற்போது மற்ற பாகங்கள் யாவையும் இங்கேயே தயாரிக்கப்படுகின்றன. மோட்டாரும் அதன் கட்டுப்பாட்டகமும் (inverter) ஓரளவு… Read More »