Category Archives: கணியம்

[தினம் ஒரு கட்டளை] du டூ – வட்டு பயன்பாடு

நாள் 31: du சில நாட்கள் விடுப்பு முடித்துவிட்டு கோப்புறை  பயன்பாட்டினை ஆராய விரும்பிய மஞ்சரி தன் காதலன் கார்த்திக்கிற்கு போன் செய்கிறாள். என்னப்பா திடீரென்று ஒரு கதை! ஆமாம் கதை தான். ஆங்கில கட்டளைகளுக்கான மூல மடல் அனுப்பி வந்த நண்பரிடமிருந்து சில மடல்கள் வராதிருக்க தினம் ஒரு கட்டளை தொகுப்பு தமிழில் பதிவிடப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் துருவங்கள் தொடரை படிக்க தொடங்கினேன். தமிழில் லினக்ஸ் போன்றதொரு நுட்பத்தினை கதை வடிவில் படித்ததில்… Read More: [தினம் ஒரு கட்டளை] du டூ – வட்டு பயன்பாடு »

சில்லுவின் கதை 8. பல தனிப்பயன் சில்லுகளுக்குப் பதில் ஒரு நிரல்படு சில்லு

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) கைவினைஞர் வேலை போலவே அக்காலத்தில் சில்லு வடிவமைப்பும் கையால் செய்யப்பட்டது 0:00 பல்வேறு வகையான தனிப்பயன் வடிவமைப்பு சில்லுகளுக்குப் பதிலாக, தனிப்பயனாக்கக்கூடிய மென்பொருளுடன் கூடிய நிரல்படுத்தக்கூடிய சில்லு என்ற கருத்தை டெட் ஹாஃப் (Ted Hoff) முன்வைத்ததற்காகப் பாராட்டப்படுகிறார். இதைத்தான் நுண்செயலி (microprocessor) என்று சொல்கிறோம். இன்டெல் 4004 தான் முதல்… Read More: சில்லுவின் கதை 8. பல தனிப்பயன் சில்லுகளுக்குப் பதில் ஒரு நிரல்படு சில்லு »

C மொழியில் சின்னதாக ஒரு கூட்டல் கணக்கு | எளிய தமிழில் C

எளிய தமிழில் C கட்டுரைகளை எழுதத் தொடங்கி கடந்த 15 நாட்களாக கட்டுரை எதுவும் வெளியாகவில்லை. சில தனிப்பட சரி இன்றைக்கு பெரியதாக ஒன்றும் பார்க்கப்போவதில்லை! C மொழியில் எளிமையாக ஒரு கூட்டல் கணக்கு போடுவது எப்படி ?என்றுதான் இன்றைய கட்டுரையில் பார்க்க வருகிறோம். இதற்கு உங்களுக்கு அடிப்படையான தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு முன்பு நான் எழுதியிருக்கக் கூடிய,C மொழியில் பொங்கல் வாழ்த்து என்னும் கட்டுரையை படித்து பாருங்கள். C மொழியில் எழுதுவதற்கு அடிப்படையான தகவல்கள்… Read More: C மொழியில் சின்னதாக ஒரு கூட்டல் கணக்கு | எளிய தமிழில் C »

சில்லுவின் கதை 7. ஒரு நாட்டின் தரநிலையையே உயர்த்திய தனிநபர்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) எந்தத் தயாரிப்பு தேவை என்று நுகர்வோரால் சொல்ல இயலாது, ஏனெனில் எதைத் தயாரிக்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியாது 0:52 புதிய தயாரிப்புகளை உருவாக்கி சந்தையில் வெளியிடுதல் பற்றி சோனி  (Sony) நிறுவனத்தின் தலைவர் அகியோ மோரிட்டா (Akio Morita), “எந்த வகையான தயாரிப்புகள் வேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்பதற்குப் பதிலாக… Read More: சில்லுவின் கதை 7. ஒரு நாட்டின் தரநிலையையே உயர்த்திய தனிநபர் »

குவார்ட்ஸ்(QUARTZ) கடிகாரம் எப்படி வேலை செய்கிறது? எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 34

என்னதான் விதவிதமாக ஸ்மார்ட் கடிகாரங்கள், டிஜிட்டல் கைக்கடிகாரங்கள் என வந்தாலும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை ஜப்பான்காரன் அறிமுகப்படுத்திய குவார்ட்ஸ்(Quartz) கடிகாரங்களுக்கு மதிப்பு குறைவதில்லை. இந்த கடிகாரத்தில் இருந்து வரும் டிக்,டிக் சத்தத்திற்காகவே, இதை வாங்கி கைகளிலும் வீட்டின் சுவரிலும் மாட்டிக் கொள்ளும் அன்பு உள்ளங்கள் நாடெங்கும் நிறைந்து காணப்படுகிறார்கள். இந்த குவார்ட்ஸ் கடிகாரம் எப்படி தான் வேலை செய்கிறது? எளிமையாக இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இதற்கு முன்பாக என்னுடைய இன்னபிற எளிய எலக்ட்ரானிக்ஸ்… Read More: குவார்ட்ஸ்(QUARTZ) கடிகாரம் எப்படி வேலை செய்கிறது? எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 34 »

சில்லுவின் கதை 6. நம் நாட்டின் ஜுகாடு மனநிலையை மாற்ற வேண்டும்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) ஜப்பானிய சில்லுகள் அமெரிக்க சில்லுகளைவிட 10 மடங்கு நம்பகமானவை 0:00 பில் ஹியூலெட் (Bill Hewlett), டேவ் பேக்கார்ட் (Dave Packard) சேர்ந்து 1930 களில் கலிபோர்னியாவில் தங்கள் கார் கொட்டகையில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினர். அவர்கள் மின் மற்றும் மின்னணு கருவிகளை உருவாக்கினர். இந்த நிறுவனம் பின்னர் HP எனப்… Read More: சில்லுவின் கதை 6. நம் நாட்டின் ஜுகாடு மனநிலையை மாற்ற வேண்டும் »

எண்ணிமத் தமிழியல் கருத்தரங்கும் ஆவணக வெளியீடுகளும்

அனைவருக்கும் வணக்கம்! கடந்த இரு ஆண்டுகளாக எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்கு நடைபெற்று வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.  இந்த ஆண்டு கருத்தரங்கு நேரடியாகவும் மெய்நிகராகவும் (hybrid), எதிர்வரும் சனவரி 25, 2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.  நிகழ்ச்சிகள் தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடைபெறும். அன்று தமிழ் தொடர்பான ஆவணப்படுத்தல், நூலகவியல், ஆவணகவியல், தமிழியல் உட்பட்ட துறைகளில் இங்கு செயற்படுபவர்கள் நேரடியாக சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளோம்.  பேராசிரியர் வில்சன் அவர்களின் ஆவணக்… Read More: எண்ணிமத் தமிழியல் கருத்தரங்கும் ஆவணக வெளியீடுகளும் »

சில்லுவின் கதை 5. பேரளவு உற்பத்தியால் விலையை வீழ்த்துவதில் இன்டெல் முன்னிடம்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) சில்லுகளைப் பயன்படுத்தி பயனுள்ள பொருட்கள் தயாரிப்பதில் ஜப்பான் முன்னிலை 0:00 சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்கா இந்தக் குறைக்கடத்தி வில்லைகளையும் (wafer) சில்லுகளையும் (chip) உருவாக்குவதில் மிகவும் சிறந்து விளங்கியது. ஜப்பான் அவற்றைப் பயன்படுத்தி நுகர்வோருக்கான பயனுள்ள பொருட்கள் தயாரிப்பதில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டது. நுணுக்கமான கம்பிப் பிணைப்புக் (wire bonding) கைவேலைக்கு… Read More: சில்லுவின் கதை 5. பேரளவு உற்பத்தியால் விலையை வீழ்த்துவதில் இன்டெல் முன்னிடம் »

சில்லுவின் கதை 4. ஒரு டாலருக்கு 50 மில்லியன் டிரான்சிஸ்டர்கள்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) பேரளவு உற்பத்தி (mass production) மூலம் செலவைப் பலமடங்கு குறைத்து விலையை வீழ்த்தல் 0:23 சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதிக்கு (San Francisco Bay Area) அருகில்தான் இந்த சிலிக்கான் சில்லுகள் தயாரிக்கப்பட்டன. இதனால்தான் இது சிலிக்கான் பள்ளத்தாக்கு (Silicon Valley) என்று பெயர்பெற்றது. 1965 இல் இங்கு தயார் செய்த… Read More: சில்லுவின் கதை 4. ஒரு டாலருக்கு 50 மில்லியன் டிரான்சிஸ்டர்கள் »

எளிய தமிழில் C | புதிய தொடர் அறிமுகம்

நமது கணியம் இணையதளத்தில், பெரும்பாலான பிரபலமான நிரலாக்க மொழிகள்(programming languages) குறித்து தொடர்கள் வெளிவந்து, பின்பு புத்தகங்களாக கூட பதிப்பிக்கப்பட்டு இருக்கின்றன. Html,css, javascript,ruby எனப்  பல்வேறுபட்ட மொழிகள் குறித்தும், தொடர்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், கணினி நிரலாக்கம் என்று படிக்க செல்லும் ஒவ்வொரு மாணவருக்கு,ம் தொடக்கப்படியாக அமைவது “சி” எனப்படும் தொடக்க கணினி மொழிதான். உண்மையில், அனைத்து மொழிகளுக்கும் தலைமகனாகவும் இன்றும் “சி” விளங்குகிறது. இதன் மேம்படுத்தப்பட்ட வடிவமான சி பிளஸ் பிளஸ்(C++) குறித்தும் படித்திருப்பீர்கள்,… Read More: எளிய தமிழில் C | புதிய தொடர் அறிமுகம் »