Category Archives: கணியம்

எளிய தமிழில் Electric Vehicles 3. திறன் பொறித்தொடர்

பெட்ரோல் டீசல் ஊர்திகளிலிருந்து மின்னூர்திகளில் நாம் செய்யும் மிகப்பெரிய மாற்றம் திறன் பொறித்தொடரில்தான் (Powertrain). இது தவிர பெட்ரோல் டீசல் கொள்கலத்துக்குப் பதிலாக இழுவை மின்கலம் (traction battery) இருக்கும். மற்றபடி இரண்டு ஊர்திகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆகவே இவை இரண்டிலும் திறன் பொறித்தொடர்களில் உள்ள மாறுபாடுகளைப்பற்றி முதலில் பார்ப்போம். பெட்ரோல் டீசல் ஊர்திகளின் திறன் பொறித்தொடர்  பெட்ரோல் டீசல் ஊர்திகளில் தொடர்ச்சியாக உள்ள எஞ்சின், உரசிணைப்பி (clutch), பல்லிணைப்பெட்டி (transmission or gear box),… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 2. மின்னூர்தி வகைகள்

மின்கல மின்னூர்திகள் (Battery Electric Vehicles – BEV) இவை முற்றிலும் மின்கலத்தில் ஏற்றப்பட்ட திறன் மூலம் இயங்குபவை. ஊர்தியை ஓட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம் ஒரு பெரிய மின்கலத் தொகுப்பில் சேமிக்கப்படுகிறது, அதை மின் சாக்கெட்டில் செருகி மின்னேற்றம் செய்யலாம். இந்த மின்கலத் தொகுப்பு மின் மோட்டார்களுக்கு காரை இயக்க சக்தியை வழங்குகிறது. இவற்றை முழுமையான மின்னூர்திகள் (All-Electric Vehicles – AEV) என்றும் சொல்கிறார்கள். கலப்பின மின்னூர்திகள் (Hybrid Electric Vehicle – HEV) இவற்றில்… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 1. உயர் நிலைக் கண்ணோட்டம்

சந்தையில் வளர்ந்து வரும் விற்பனை  2023 இல் உலகம் முழுவதிலும் விற்பனையான புதிய கார்களில் 18% கார்கள் மின்சாரக் கார்களாகும். இந்தியாவில் 2023-24 இல் 9 லட்சம் இரு சக்கர ஊர்திகள் விற்பனை செய்யப்பட்டன. இந்தியாவில் 2023-24 இல் 5.8 லட்சம் மூன்று சக்கர ஊர்திகள் விற்பனை செய்யப்பட்டன. இது மொத்த மூன்று சக்கர ஊர்திகள் விற்பனையில் பாதிக்கு மேல் (54%). இவ்வாறு மின்னூர்திகள் (Electric Vehicles – EV) விற்பனை அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.… Read More »

எளிய தமிழில் Car Electronics 27. ஊர்தித் திரள் மேலாண்மை

நீங்கள் ஒரு நிறுவனத்தின் சரக்கு அல்லது பயணிகள் ஊர்தித் திரளுக்கு (fleet) மேலாளராக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஓட்டுநரின் கவனக்குறைவால் ஒரு விபத்து ஏற்பட்டால் நிறுவனம் தான் பொறுப்பு. மேலும் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துவதும், ஊர்தியின் தேய்மானமும் ஓட்டுநரின் செயல்பாடுகளைப் பொறுத்து உள்ளது. உங்கள் அலுவலகத்தில் இருந்து கொண்டே எங்கெங்கோ ஓடும் உங்கள் ஊர்திகளை எல்லாம் எவ்வாறு நீங்கள் கண்காணிக்க முடியும்? இதற்குத் தொலைக்கண்காணிப்புத் (Telematics) தொழில்நுட்பம் உதவி செய்கிறது. ஓட்டுநர் செலுத்திய பாதை, செயலற்று… Read More »

எளிய தமிழில் Car Electronics 26. இணையம் வழியாக ஊர்தி மென்பொருளை மேம்படுத்தல்

கணினிகள், திறன்பேசிகள் ஆகியவை இணையத்தில் தொடர்புடன் இருப்பதால் மென்பொருளை இணையம் வழியாக மேம்பாடு செய்கிறார்கள் என்று முன்னர் பார்த்தோம். ஊர்திகளை விற்றபின் அதன் மென்பொருளில் பாதுகாப்பையோ அல்லது மற்ற அம்சங்களையோ மேம்படுத்த வேண்டும் என்றால் என்ன செய்வது?  முன்னர் நேரடியாகக் கம்பி இணைப்புகள் மூலம் மட்டுமே மென்பொருளை மேம்படுத்த முடியும் ஊர்திகளிலும் மற்ற சாதனங்களிலும் நிரல்கள், தரவுகள் போன்றவை மின் இணைப்பைத் துண்டித்தாலும் அழியாத நினைவகத்தில் (flash memory) எழுதி சேமிக்கப்பட்டிருக்கும். ஆகவே இம்மாதிரி உட்பதித்த சாதனங்களில்… Read More »

எளிய தமிழில் Car Electronics 25. மின்னணு அமைப்புகளின் பாதுகாப்பான செயல்பாடு

ISO 26262 சாலை ஊர்திகள் – செயல்பாட்டுப் பாதுகாப்பு ISO 26262 என்பது மொபெட் போன்ற சிறிய ஊர்திகளைத் தவிர்த்து மற்ற தொடர் உற்பத்தி சாலை ஊர்திகளில் நிறுவப்பட்ட மின் மற்றும் மின்னணு அமைப்புகளின் செயல்பாட்டுப் பாதுகாப்புக்கான பன்னாட்டுத் தரநிலை ஆகும். விபத்துகளின் அபாயத்தைக் குறைப்பதற்கும், ஊர்தி பாகங்கள் அவற்றின் நோக்கம் கொண்ட செயல்பாடுகளைச் சரியாகவும் சரியான நேரத்திலும் செய்வதை உறுதி செய்யவும் இது வழிகாட்டுதல்களை வரையறுக்கிறது. ISO 26262 போன்ற தரங்களைப் பின்பற்றுவதன் மூலம் பாதுகாப்பான… Read More »

தமிழ் விக்கிப்பீடியா – இணையவழிக் கலந்துரையாடல்

ஏப்ரல் மாதத்திற்குரிய இணையவழிக் கலந்துரையாடல், ஏப்ரல் 28 ஞாயிறு அன்று, காலை 11 மணியளவில் நடைபெறும். சந்திப்பிற்கான இணைப்பு: meet.google.com/prq-hynf-kig வாய்ப்பிருப்பவர்கள் கலந்துகொண்டு தமிழ் விக்கிப்பீடியாவின் தொடர் முன்னேற்றத்திற்கு உதவுங்கள்.

இணைய உரைமென்பொருள் நிறுவனங்களின் உள்ளே ஒரு நாள் உலா – இணைய உரை

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்உரையாடல் எண்:: 150 தலைப்பு: மென்பொருள் நிறுவனங்களின் உள்ளே ஒரு நாள் உலா 2024-04-27 (சனி) பிற்பகல் 7.30-8.30 (இலங்கை) உரையாளர்:த. சீனிவாசன்,கணியம் அறக்கட்டளை Zoom : நுழைவு எண் : 818 910 38941 கடவுச்சொல்: 2020us02web.zoom.us/j/81891038941?pwd=U0drdzg4dVMvdC8wMU5LZW5lNDdYUT09 மட்டுறுத்துனர் சந்திர கௌரி சிவபாலன் ( கெளசி ) தமிழ் வான் அவை நிகழ்ச்சி நிரல் 7.25 – 7.30 – உள்வருகை 7.30 – 7.31 – நிகழ்வை தொடக்குதல் – க.விக்னேஸ்வரானந்தன்,… Read More »

எளிய தமிழில் Car Electronics 24. ஊர்தி மென்பொருள் தரநிலை

கார் மற்றும் இருசக்கர ஊர்தி  உற்பத்தியாளர்களை மூல தளவாட உற்பத்தியாளர் (Original Equipment Manufacturer – OEM) என்று சொல்கிறோம். இவர்களுக்கு ECU போன்ற தொகுப்புகளைத் தயாரித்து அதற்கேற்ற மென்பொருளுடன், சோதனை செய்து வழங்கும் போஷ் (Bosch), கான்டினென்டல் (Continental) போன்ற நிறுவனங்களை முதலடுக்கு வழங்குநர்கள் (Tier 1 suppliers) என்று சொல்கிறோம். பல ஊர்தி  உற்பத்தியாளர்களும் வழங்குநர்களும் சேர்ந்து உருவாக்கியதுதான் ஆட்டோசர் (AUTOSAR – AUTomotive Open System ARchitecture) என்ற ஊர்தி மென்பொருள் தரநிலை.… Read More »

சோவியத் ரஷ்யா பதிப்பக மின்னூல்கள் வெளியீடு

1960 முதல் 1990 வரை சோவியத் ரஷ்யாவில் இருந்து பல்வேறு பதிப்பகங்கள் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில், அறிவியல், அரசியல், இலக்கியம், சிறார் இலக்கியம் எனப் பல்துறைகளில் பல நூல்களை வெளியிட்டன. மிர் பதிப்பகம், ராதுகா பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் ஆகிய பதிப்பகங்கள் அவற்றுள் முதன்மையானவை. தமிழ்நாடு முழுதும் உள்ள அனைத்து ஊர்கள், கிராமங்கள் தோறும் அவர்களது நடமாடும் விற்பனை நிலைய வண்டிகள், மிகவும் குறைந்த விலையில் அனைத்து அறிவுச் செல்வங்களையும் மக்களுக்கு அள்ளி வழங்கின. சோவியத்… Read More »