Category Archives: கணியம்

OLLAMA(ஒல்லமா) என்றால் என்ன? அதில் நீங்கள் என்ன செய்ய முடியும்!

உங்களுடைய கணினியில், பல்வேறுபட்ட திறன்மிகு மொழி மாதிரிகளை(LLM) இயக்கி பார்ப்பதற்கான, ஒரு திறந்த நிலை திட்டம்(OPEN SOURCE PROJECT)தான் “OLLAMA” (ஒல்லமா). நிரல் மொழிகளை இயக்குவதற்காக, CODESTRAL அல்லது Chat gpt போன்ற அனுபவத்தை பெறுவதற்காக,LLaMa 3 போன்ற திறன்மிகு மொழி மாதிரிகளை உங்கள் கணினியில் இயக்குவதற்கு ஒரு சிறந்த வழி தான் OLLAMA(ஒல்லமா). அதை எவ்வாறு செய்வது? எங்கிருந்து தரவிறக்குவது?உள்ளிட்ட அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் விடை அளிக்கிறது இந்த கட்டுரை. ollama என்றால் என்ன? லினக்ஸ்{Linux… Read More: OLLAMA(ஒல்லமா) என்றால் என்ன? அதில் நீங்கள் என்ன செய்ய முடியும்! »

ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு சிறந்த திறந்த நிலை கோப்பு மேலாளர்

கணியம் இணையதள வாசகர்களுக்கு வணக்கம்………………. உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனங்களில், பலவிதமான கோப்பு மேலாளர்களை பயன்படுத்தி இருப்பீர்கள். காலத்திற்கு ஏற்ப கோப்பு மேலாளர்களும் பலகட்ட மாறுதல்களை சந்தித்து இருக்கின்றன. பலரும் ES கோப்பு மேலாளர் (ES FILE MANAGER) ,solid explorer போன்றவற்றை பயன்படுத்தி இருப்பீர்கள். இதற்கு மிக முக்கியமான காரணம், நம்மில் பலருக்கும் கூகுள் நிறுவனம் வழங்கும் கோப்பு மேலாளர் திருப்தி அளிப்பது இல்லை. ஆனால், மேற்கூறிய தனியார் கோப்பு மேலாளர்களில், பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் அதிகப்படியான… Read More: ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு சிறந்த திறந்த நிலை கோப்பு மேலாளர் »

எளிய தமிழில் Electric Vehicles 8. மாறுமின் நிலைக்காந்த ஒத்தியங்கு மோட்டார்

தூண்டல் மோட்டாரின் (Induction Motor) அம்சங்களையும் தொடியற்ற நேர்மின் மோட்டாரின் (Brushless DC Motors – BLDC) அம்சங்களையும் மாறுமின் நிலைக்காந்த ஒத்தியங்கு மோட்டார் (AC Permanent Magnet Synchronous Motor – PMSM) ஓரளவு கொண்டது. இதன் வடிவமைப்பு தொடியற்ற நேர்மின் மோட்டார் போன்றதே. சுற்றகத்தில் (rotor) நிலைக்காந்தங்களும் நிலையகத்தில் (stator) கம்பிச்சுருள்களும் இருக்கும். ஆனால் இதற்கு மூன்றலை (3 Phase) மாறுமின்சாரம் (AC) கொடுத்து இயக்குகிறோம். ஒத்தியங்கு மோட்டார் என்றால் என்ன? நிலையகத்திலுள்ள கம்பிச்சுருள்களில்… Read More: எளிய தமிழில் Electric Vehicles 8. மாறுமின் நிலைக்காந்த ஒத்தியங்கு மோட்டார் »

உங்களுக்கான பிரத்தியேகமான செயற்கை நுண்ணறிவு உதவியாளரை  தேர்ந்தெடுங்கள் – LM STUDIO

உங்களுக்கான, பிரத்தியேகமான செயற்கை நுண்ணறிவு(personalized Ai assistant) உதவியாளர்களுக்கு,  திறன்மிகு மொழி மாதிரிகளை(LLM ) கணினியில் ஏற்றுவதற்கு, ஒரு சிறந்த வாய்ப்பை LM STUDIO ஏற்படுத்தி இருக்கிறது. அது குறித்து விவரமாக காணலாம். இதன் மூலம்,உங்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு எவ்வித பாதகமும் இன்றி, மேலும் பெரு நிறுவனங்களை சார்ந்திருக்காது. அதிக தொகை கொடுத்து AI மாடல்களை வாங்காமல், உங்களால், உங்களுக்கான ஒரு AI உதவியாளரை உருவாக்க முடியும். தனிநபர் GPT மற்றும் ollama போன்றவற்றின் மூலம், இதை… Read More: உங்களுக்கான பிரத்தியேகமான செயற்கை நுண்ணறிவு உதவியாளரை  தேர்ந்தெடுங்கள் – LM STUDIO »

பைத்தான் நிரலாக்கம் – தமிழில் இலவச இணைய வழித் தொடர் வகுப்பு

வணக்கம், கணியம் அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் தமிழில் பைத்தான் நிரல் மொழி அறிமுகம் (Python Programming) தொடர் வகுப்பு நடத்த உள்ளோம். கால அளவு – 2 மாதம் ( வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும். திங்கள், செவ்வாய், புதன். தேவையெனில் வார இறுதியிலும்.) நேரம் – மாலை 7.00 – 8.00 PM இந்திய நேரம் (IST) . காலை 9.30 – 10.30 AM கிழக்கு நேர வலயம் (EST) வகுப்பு தொடங்கும்… Read More: பைத்தான் நிரலாக்கம் – தமிழில் இலவச இணைய வழித் தொடர் வகுப்பு »

பயர்பாக்ஸ் உலாவியில் வானிலை அறிவிப்பு

மோசில்லா(mozilla) நிறுவனம் தனது பயர்பாக்ஸ்(firefox) உலாவியில், பல சிறந்த மாறுதல்களை செய்து வருவதை நாம் அறிந்திருப்போம். அந்த வகையில் வானிலை தகவல்களை புதிய உலாவி(new tab)திரையில் காண்பதற்கான, புதிய தனிநபர் பயன்பாடை மோசில்லா(mozilla) ஏற்படுத்தி இருக்கிறது. புதிய தாவலில்(new tab) முகப்பு படத்தை மாற்றுவதற்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பயன்பாடு தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும்,புதிய தாவல்(New tab)பக்கத்திலேயே, இனிமேல் உங்களால், வானிலை தொடர்பான தகவல்களையும் உங்களால் அறிந்து கொள்ள முடியும். பிரத்தியேகமான வானிலை இணையதளத்தை அணுகுவதே, செயலுக்கமான வழிமுறையாக… Read More: பயர்பாக்ஸ் உலாவியில் வானிலை அறிவிப்பு »

எளிய தமிழில் Electric Vehicles 7. மாறுமின் தூண்டல் மோட்டார்

நீரேற்றி (water pump), மின்விசிறி, குளிர் சாதனங்கள், கலவைக் கருவி (mixie), மாவரைக்கும் எந்திரம் (wet grinder) போன்ற பல அன்றாட மின்சாதனங்களில் மாறுமின் தூண்டல் மோட்டாரைப் (AC induction motor) பயன்படுத்துகிறோம். இவற்றில் வீட்டில் பயன்படுத்தும் குறைந்த திறன் சாதனங்களில் பெரும்பாலும் ஒற்றையலை (single phase) மோட்டார் இருக்கும். தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் அதிக திறன் சாதனங்களில் மூன்றலை (3-phase) மோட்டார் இருக்கும். மின்கலத்தின் நேர்மின்சாரத்தை (DC) மூன்றலை மாறுமின்சாரமாக  (3-phase AC) மாற்ற வேண்டும் மின்கலம்… Read More: எளிய தமிழில் Electric Vehicles 7. மாறுமின் தூண்டல் மோட்டார் »

எளிய தமிழில் Electric Vehicles 6. நேர்மின் தொடியற்ற மோட்டார்

சந்தையில் பல இருசக்கர மின்னூர்திகளிலும் மூன்று சக்கர மின்னூர்திகளிலும் நேர்மின் தொடியற்ற மோட்டார்கள் (Brushless DC Motor – BLDC) பயன்படுத்தப்படுகின்றன.  இவை எவ்வாறு வேலை செய்கின்றன என்று புரிந்து கொள்வதற்கு முதலில் நேர்மின் தொடி மோட்டார் அடிப்படையைப் பார்ப்போம்.  நேர்மின் தொடி மோட்டார் (Brushed DC Motor) இவற்றில் சுற்றகத்தில் (rotor) கம்பிச்சுற்றுகளும் நிலையகத்தில் (stator) நிலைக்காந்தங்களும் இருக்கும். சுழலும் மின்திசைமாற்றிக்குத் (commutator) தொடிகள் மின்சாரத்தை வழங்குகின்றன. இதனால் சுற்றகம் (rotor) மின்காந்தமாகிச் (electromagnet) சுழல்கிறது.… Read More: எளிய தமிழில் Electric Vehicles 6. நேர்மின் தொடியற்ற மோட்டார் »

எளிய தமிழில் Electric Vehicles 5. மின்மோட்டாரின் அடிப்படைகள்

மின்மோட்டார் என்பது மின்சாரத்தை இயந்திர ஆற்றலாக மாற்றப் பயன்படும் ஒரு சாதனம் ஆகும். இதற்கு நேர்மாறாக மின்னியற்றி (generator) என்பது இயந்திர ஆற்றலை மின்சாரமாக மாற்றப் பயன்படும் ஒரு சாதனம் ஆகும்.  மின்காந்தவியல் (electromagnetism) இவை மின்காந்தவியலைப் பயன்படுத்தி செயல்படுகின்றன. மின்காந்தவியல்படி ஒரு காந்தப்புலத்தில் இருக்கும் கம்பிச்சுருளில் மின்சாரத்தைப் பாய்ச்சினால் அந்தக் கம்பிச்சுருளில் காந்த முறுக்குவிசை ஏற்படும். இது அந்தக் கம்பிச்சுருளைச் சுழற்ற முயலும். அந்தக் கம்பிச்சுருள் அரை சுற்று சுற்றியவுடன் நாம் மின்சாரத்தின் திசையை மாற்றினால்… Read More: எளிய தமிழில் Electric Vehicles 5. மின்மோட்டாரின் அடிப்படைகள் »

எளிய தமிழில் Electric Vehicles 4. மோட்டாருக்கு அவசியம் தேவையான அம்சங்கள்

மின் ஊர்தியில் பொருத்தும் ஒரு மோட்டாருக்கு அவசியம் தேவையான அம்சங்கள் என்ன என்று பார்ப்போம். குறைந்த வேகத்திலேயே நல்ல முறுக்குவிசை கிடைத்தால் ஊர்தியை நிற்கும் நிலையிலிருந்து நகர்த்தி ஓடத்துவக்குவதற்கு வசதியாக இருக்கும். முறுக்குவிசை (Torque) என்றால் என்ன? அதிக முறுக்குவிசை என்றால் ஆரம்ப கட்டத்தில் வேகமான முடுக்கம். அதிக குதிரைத்திறன் என்றால் அதிக வேகம். இதனால்தான் சரக்கு வண்டிகள் போன்ற கனரக வாகனங்கள் அதிக முறுக்குவிசை கொண்டவை. ஆனால் பந்தய ஒட்டக் கார்கள் அதிகக் குதிரைத்திறன் கொண்டவை.… Read More: எளிய தமிழில் Electric Vehicles 4. மோட்டாருக்கு அவசியம் தேவையான அம்சங்கள் »