Category Archives: கணியம்

சோவியத் ரஷ்யா பதிப்பக மின்னூல்கள் வெளியீடு

1960 முதல் 1990 வரை சோவியத் ரஷ்யாவில் இருந்து பல்வேறு பதிப்பகங்கள் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில், அறிவியல், அரசியல், இலக்கியம், சிறார் இலக்கியம் எனப் பல்துறைகளில் பல நூல்களை வெளியிட்டன. மிர் பதிப்பகம், ராதுகா பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் ஆகிய பதிப்பகங்கள் அவற்றுள் முதன்மையானவை. தமிழ்நாடு முழுதும் உள்ள அனைத்து ஊர்கள், கிராமங்கள் தோறும் அவர்களது நடமாடும் விற்பனை நிலைய வண்டிகள், மிகவும் குறைந்த விலையில் அனைத்து அறிவுச் செல்வங்களையும் மக்களுக்கு அள்ளி வழங்கின. சோவியத்… Read More: சோவியத் ரஷ்யா பதிப்பக மின்னூல்கள் வெளியீடு »

எளிய தமிழில் Car Electronics 22. ஊர்தித்தர லினக்ஸ்

லினக்ஸ் (Linux) முதன்முதலில் தனிநபர் கணினிகளுக்காக உருவாக்கப்பட்டது. பின்னர் வழங்கிகள் (servers) முதல் மீத்திறன் கணினிகள் (super computers) வரை, திறன்பேசிகள் (smartphones) முதல்  பொருட்களின் இணையம் (Internet of Things – IoT) வரை லினக்ஸ் இயங்குதளமே ஆதிக்கம் செலுத்துகிறது.  ஊர்தித் தர லினக்ஸ் (Automotive Grade Linux – AGL) என்பது லினக்ஸ் கருநிரலின் (kernel) அடிப்படையிலான திறந்த மூலத் திட்டமாகும். இதை உருவாக்கி மேம்படுத்தப் பல வாகன உற்பத்தியாளர்கள், முதல் அடுக்கு வழங்குநர்கள்… Read More: எளிய தமிழில் Car Electronics 22. ஊர்தித்தர லினக்ஸ் »

எளிய தமிழில் Car Electronics 21. ஊர்தி இயங்குதளங்கள்

வன்பொருளையும் மென்பொருளையும் நிர்வகிப்பதற்கான அனைத்து முக்கிய செயல்பாடுகளையும் உள்ளடக்கியன இயங்குதளங்கள் (operating systems). மேலும் செயலிகள் வன்பொருளின் அம்சங்களை நேரடியாக அணுக இயலாது. இயங்குதளம் மூலமாகத்தான் அணுகவேண்டும். ஆன்டிராய்டு ஊர்தி இயங்குதளம் (Android Automotive OS – AAOS), ஊர்தித்தர லினக்ஸ் (Automotive Grade Linux), பிளாக்பெரி கியூனிக்ஸ் (BlackBerry QNX) ஆகியவை சந்தையில் பயன்பாட்டில் உள்ள சில ஊர்தி இயங்குதளங்கள் ஆகும். நிகழ் நேர இயங்கு தளம் (Real-time Operating System – RTOS) கணினிகள்,… Read More: எளிய தமிழில் Car Electronics 21. ஊர்தி இயங்குதளங்கள் »

எளிய தமிழில் Car Electronics 20. பணிமனையில் பழுது கண்டறிந்து சரிசெய்தல்

ஒருமித்த பழுது கண்டறியும் சேவைகள் (Unified Diagnostic Services – UDS) என்பது தானுந்துகளின் கட்டுப்பாட்டகங்களுக்கான (automotive ECU)  ISO 14229 என்ற பன்னாட்டுத் தரநிலையில் வரையறுக்கப்பட்டுள்ள தொடர்பு நெறிமுறை ஆகும். முழுமையான பழுது கண்டறிதல் நீங்கள் ஒரு பழைய கார் வாங்கப்போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். வாங்குவதற்கு முன்பு மேலோட்டமான ஆய்வு மூலம் அதன் செயல்பாட்டில் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் கண்டறிய முடியாது. இம்மாதிரி வேலைகளுக்கு முழுமையான பழுது கண்டறிதல் தேவைப்படுகிறது. குறிப்பாக மின்னணு சாதனங்கள்… Read More: எளிய தமிழில் Car Electronics 20. பணிமனையில் பழுது கண்டறிந்து சரிசெய்தல் »

மின்னுருவாக்கத்திட்டம் – தமிழ் இணையக் கல்விக்கழகம்

உங்களிடம் உள்ள அரிய நூல்களை / புகைப்படங்களை இலவசமாக மின்னுருவாக்கம் (DIGITAL) செய்யவேண்டுமா? தகவல் அளிக்கவேண்டிய அலைபேசி எண்கள்: திரு.இரா.சித்தானைஆய்வுவளமையர்அலைபேசி எண் : +919444443035 (அச்சுப்புத்தகம், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், அரியகாகிதச்சுவடிகள், ஒளி-ஒலி ஆவணங்கள்)

தமிழில் React – பயிலகம், கணியம் இணைந்து நடத்தும் இணையவழி இலவசப் பயிற்சி

பயிலகம், கணியம் இணைந்து React JS இலவச இணையவழிப் பயிற்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  வாரம் ஒரு வகுப்பு, ஒரு மணிநேரம் இவ்வகுப்பு நடத்தப்படும். பயிற்றுநர்: விஜயராகவன், பயிலகம் நேரம்: ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி இந்திய நேரம் பயிற்சியில் என்ன கற்றுக் கொடுக்கப்படும்? HTML, CSS, JS அடிப்படைகளில் இருந்து React JS வரை கற்றுக் கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  கணினி அடிப்படைகள் தெரிந்த எவரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். பயிற்சிக்கான முன்னேற்பாடு எதுவும் உண்டா?… Read More: தமிழில் React – பயிலகம், கணியம் இணைந்து நடத்தும் இணையவழி இலவசப் பயிற்சி »

எளிய தமிழில் Car Electronics 19. ஓடும்போது பழுது கண்டறிதல்

வண்டியில் ஏதேனும் செயல்பிழை ஏற்பட்டால் பணிமனைக்குக் கொண்டு சென்று பழுது பார்க்கலாம்தானே? ஓடும்போதே பழுது கண்டறிதல் அவசியமா, என்ன – என்று நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்வி. இதற்கு இரண்டு பதில்கள் உள்ளன. முதலாவது, உங்கள் வண்டியிலிருந்து வெளிவரும் உமிழ்வு (emission) தரநிலைக்குள்தான் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதில் அரசாங்கங்கள் குறியாக இருக்கின்றன. ஆகவே 1988 இல் கலிஃபோர்னியாவில் தொடங்கி, பின்னர் அமெரிக்கா முழுவதும், அதன் பின்னர் ஐரோப்பா, இந்தியா உட்படப் பல உலக நாடுகளும் ஓடும்போது உமிழ்வு… Read More: எளிய தமிழில் Car Electronics 19. ஓடும்போது பழுது கண்டறிதல் »

எளிய தமிழில் Car Electronics 18. CAN உட்பிணையம்

இது நிகரிடைப் பிணையம் (Peer-to-peer network) CAN உட்பிணையம் (bus) என்பது ஒரு நிகரிடைப் பிணையம் (Peer-to-peer network) தகவல் பரப்பு அமைப்பாகும். அதாவது இதில் இணைந்திருக்கும் எந்தவொரு கட்டுப்பாட்டகமும் (ECU) தகவலை அனுப்பவும் பெறவும் முடியும். பிணையத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு ECU வையும் பொதுவாகப் பிணையத்திலுள்ள ஒரு கணு (node) என்று கருதலாம். இது 125 kbps இலிருந்து அதிகபட்சம் 1 Mbps வரை தகவலை அனுப்ப முடியும். இதில் அதிகபட்சமாக 2048 தனிப்பட்ட அடையாளம்… Read More: எளிய தமிழில் Car Electronics 18. CAN உட்பிணையம் »

விக்கிப்பீடியா பயிலரங்கம் – சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி – திருநெல்வேலி

நாள் – 01,02 மார்ச்சு 2024 கல்லூரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி விக்கிப்பீடியா பயிலரங்கம் – சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி – திருநெல்வேலி விவரங்கள் படங்களில் காண்க.

மின்னூல் உருவாக்கம் – தன்னார்வலர்கள் தேவை

FreeTamilEbooks.com தளத்தில் மின்னூல்களை வெளியிட, தன்னார்வலர்கள் தேவை. கணினி பயிற்சி, இணைய வசதி இருக்க வேண்டும்.அட்டைப்படங்கள் வரைய ஆர்வம் இருத்தல் இனிது. மின்னூலாக்கம், அட்டைப்படம் உருவாக்கத்துக்குத் தேவையான பயிற்சிகள் வழங்குவோம். பின் வரும் காணொளிகளை பார்க்கவும். மேற்கண்ட காணொளிகள் வழியே மின்னூல், அட்டைப்படங்கள் உருவாக்க வழிகளை விளக்கியுள்ளோம். அவற்றைக் கண்டு ஏதேனும் ஐயம் எனில் எங்களுக்கு எழுதவும். ஒரு வாரத்துக்கு ஓரிரு மணி நேரங்கள் தந்தால் போதுமானது. மின்னூலாக்கப் பணிகளுக்கு பங்களிக்க ஆர்வமுள்ளோர் தொடர்பு கொள்கKaniyamFoundation@gmail.com