Category Archives: பங்களிப்பாளர்கள்

பிழை வாழ்க்கை வட்டம்(Bug Life Cycle)

வாழ்க்கை ஒரு வட்டம்‘ என்று தெரியும் – அதென்ன பிழை வாழ்க்கை வட்டம்? பிழையான வாழ்க்கை வட்டமா? என்று கேட்கிறீர்களா? இல்லை! நம்முடைய வாழ்க்கை எப்படி ஒரு வட்டமோ, அதே போல, சாப்ட்வேர் டெஸ்டிங் மூலமாக நாம் மென்பொருளில் கண்டுபிடிக்கும் பிழைகளுக்கும் ஒரு வாழ்க்கை வட்டம் இருக்கிறது! எனவே, இது பிழையின் வாழ்க்கை வட்டம்! அதைப் பற்றிப் பார்ப்போம்! மென்பொருள் உருவாக்கத்திற்குப் பிறகு, டெஸ்டர்கள் மென்பொருளைச் சோதிக்கிறார்கள். அந்தச் சோதனை மூலம் பல்வேறு பிழைகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அந்தப்… Read More »

‘பிழை’ப்பைத் தொடர்வோம்!

போன பதிவு பல கேள்விகளுடன் முடிந்திருந்தது. அந்தக் கேள்விகளுக்கும் எல்லாவற்றிற்கும் பதில் பார்த்து விடுவோமா? பிழை எண் (Bug ID): ஒவ்வொரு பிழைக்கும் ஒதுக்கப்படும் தானியங்கி எண். இந்த எண்ணைக் கொண்டு தான் பிழையை அடையாளம் கண்டுபிடிப்பார்கள். நாள், நேரம்: பிழை பதியப்படும் நாள், நேரம் – ஆகியன இங்கு குறிக்கப்படும். கண்டுபிடித்தவர் (Opened By): பிழையைக் கண்டுபிடித்தவர் பெயரைப் பதிவதற்காக இந்த ஏற்பாடு. பிழையில் ஏதாவது சந்தேகம் வந்தால், இவரைக் கேட்கலாம் அல்லவா? அதற்காகத் தான்!… Read More »

பிழை கண்டுபிடிப்பது – பிழைப்பே அது தான்!

இது பிழை(Bug)களைப் பற்றிப் பேச வேண்டிய நேரம். இப்போது வரை, டெஸ்ட் கேஸ்கள் எழுதுவது, உத்திகள் வகுத்து சோதிப்பது – ஆகியவற்றைப் பார்த்து விட்டோம். இப்போது நாம் கண்டுபிடிக்கும் பிழைகளை – எங்கே பதிவது? யாரிடம் சொல்வது? யார் அதைப் பார்ப்பார்கள்? யார் திருத்துவார்கள்? அவர்கள் திருத்தியது, நமக்கு எப்படித் தெரிய வரும்? அதன் பிறகு டெஸ்டர்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன? இப்படி அடுக்கடுக்காக நிறைய கேள்விகள் இருக்கின்றன. நிறைய கேள்விகள் என்றால் – பதில்களும்… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 14. வளைந்த மேற்பரப்பு (Curved surface) மாதிரியமைத்தல்

எல்லா விதமான 3D வடிவங்களையுமே திட வடிவம் உருவாக்கும் உத்திகள் மூலம் தயாரித்து விட முடியாது. எடுத்துக்காட்டாக கார் (car body), முடி உலர்த்தி (hair dryer), தலைக்கவசம் (helmet), மிக்சி (mixie) போன்றவற்றின் மேற்பரப்புகள் சீரற்ற (irregular) வடிவம் கொண்டவை. முன்னர் பார்த்தது போல அடிப்படை  வடிவங்களை வைத்துச் சிக்கலான வடிவங்களை உருவாக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்தி இவற்றை நாம் உருவாக்க முடியாது. திட வடிவ மாதிரி உருவாக்கும் கருவிகள் (solid modeling tools) ஒரு திட… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் – 15- வெள்ளைப் பெட்டி உத்திகள் -4

மாற்ற வழிச் சோதனை(Mutation Testing) அதென்ன மாற்ற வழிச் சோதனை? ஒரு சின்ன கதை வழியாக இதைப் புரிந்து கொள்வோம். அருள், வியன் – இருவரும் நண்பர்கள்; மென்பொறியாளர்கள். இருவரும் இணைந்து இணையத்தளம் ஒன்றை வடிவமைக்கிறார்கள். இணையத்தளத்தின் பின்னணி நிறம் சிவப்பாக இருந்தால் பளிச்சென்று எல்லோருக்கும் பிடித்தது போல் இருக்கும் என்று நினைக்கிறார் அருள். ஆனால், வியனுக்கோ வேறொரு எண்ணம் – பின்னணி நிறம் பச்சையாக இருந்தால், பார்ப்பதற்குப் பசுமையாக இருக்குமே என்பது வியனின் கருத்து. இருவரும்… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் – 15 – வெள்ளைப் பெட்டி உத்திகள்

வெள்ளைப் பெட்டி என்று சாப்ட்வேர் டெஸ்டிங்கில் எதைச் சொல்கிறார்கள்? கருப்புப் பெட்டி என்றால் என்று பார்த்தோம் அல்லவா? அதற்கு நேர் எதிரானது தான் வெள்ளைப் பெட்டி! வெளிப்படையான (transparent) பெட்டியைத் தான் வெள்ளைப் பெட்டி என்று சொல்கிறார்கள். வெளிப்படை என்றால் என்ன? கணினியில் இரண்டு எண்களைக் கூட்டுவதற்கு நிரல்(program) எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நிரலின் முடிவில் இரண்டு எண்களைக் கொடுக்கிறீர்கள். வரும் வெளியீடு(output) சரியா என்று பார்க்கிறீர்கள். இது தான் கருப்புப் பெட்டி முறை! அதாவது… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 13. 2D வரைபடமா அல்லது 3D மாதிரியா?

ஒவ்வொரு CAD மென்பொருளிலும் அதற்கேயான தன்னகக் கோப்பு வடிவத்தில் (Native format) சேமித்து வைப்பது அவசியம் என்று முந்தைய கட்டுரையில் கூறினோம். முக்கியமாக 3D CAD மென்பொருட்களில், நாம் முன்னர் பார்த்தபடி, அளவுரு மாதிரிகளின் வரலாற்றையும் படிமுறைகளையும் இம்முறையில் மட்டுமே சேமிக்க முடியும் என்றும் பார்த்தோம். இம்மாதிரி வரைபடங்களும் மாதிரிகளும் ஒரு நிறுவனத்தின் விலைமதிப்பற்ற அறிவுசார் சொத்து (intellectual property) ஆகும். ஆகவே எந்த மென்பொருளை பயன்படுத்துவது, எந்தக் கோப்பு வகையில் மூல வடிவங்களை சேமித்து வைப்பது… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 12. பாகங்களைத் தொகுத்து இயக்கிப் பார்த்தல் (Motion simulation)

ஃப்ரீகேட் அசைவூட்டம் (Animation) பணிமேடை பாகங்களின் இயக்கத்தை உருவகப்படுத்தவும், படங்களின் காட்சித்தொடர்களை உருவாக்கவும், இவற்றைக்கொண்டு அசைவூட்டத்தை உருவாக்கவும் இப்பணிமேடை பல கருவிகளைக் கொண்டுள்ளது. பாகங்களின் நிலை மற்றும் திசையமைவை தேவைப்பட்டபோது மாற்றலாம். மேலும் கண்ணுக்குப் புலப்படுதல் (visibility), ஒளிபுகுதன்மை (transparency), வடிவத்தின் நிறம் (shape color) மற்றும் நிழற்படக் கருவி நிலை (camera position) போன்ற பிற பண்புகளையும் மாற்றலாம்.  தொகுப்பை விரித்துக் காட்டும் தோற்றம் (Exploded view) ஒரு இயந்திரத்தை எவ்வாறு தொகுப்பது எந்தெந்த பாகம்… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 11. பாகங்களைத் தொகுத்துப் பார்த்தல்

பாகங்களை இணைக்கும் பொழுது வரும் பிரச்சினைகளை முன்கூட்டியே அறிதல் நம்முடைய தயாரிப்பில் உள்ள பாகங்களை எல்லாம் 2D மென்பொருளில் உருவரைவு தயார் செய்துவிட்டோம். இந்த பாகங்களை எல்லாம் தயாரித்து துணைத் தொகுதிகளாகவும் முழுத் தொகுதியாகவும்  இணைக்கும் பொழுது சில பிரச்சினைகள் தெரியவரலாம். எடுத்துக்காட்டாக சில திருகாணிகள் முடுக்கியால் அணுக இயலாத இடத்தில் இருக்கலாம்.  நம்மால் 3D மாதிரியில் பாகங்களை இணைத்துப் பார்க்க முடிந்தால் இம்மாதிரி பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டு பிடித்து ஓரளவாவது தவிர்க்கலாம் அல்லவா? இந்த வசதி… Read More »

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence.(AI))

மாற்றம் என்பது வாழ்க்கைநியதியாகும் அதனடிப்படையில் கடந்த காலத்தை அல்லது நிகழ்காலத்தை மட்டுமே பார்ப்பவர்கள் எதிர்காலத்தை இழப்பது உறுதி என ஜான் எஃப். கென்னடி கூறியுள்ளார் . நாம் வாழும் தற்போதைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளின் சகாப்தத்தில், மனிதன் தனது நுண்ணறிவின் வாயிலான கண்டுபிடிப்புகளினால் அவனது வாழ்க்கைத் தரத்தையும் வசதியையும் மேம்படுத்த புதிய இயந்திரங்கள், கணினிகள் , பிற தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்கி வருகின்றான். மனிதனின் அவ்வாறான கண்டுபிடிப்புகளில் ஒன்றே செயற்கை நுண்ணறிவு என்பதாகும். இந்த AIஐ பற்றி… Read More »