Category Archives: கணியம்

அழகுத் தமிழில் வண்ணப்படங்கள்

இன்று கணினி, மடிக்கணினி, அலைபேசி, கைக்கணினி எனப் பல விதங்களில் கணித்தல் தொடர்புடைய சாதனங்கள் நமக்கு கிடைக்கின்றன. அவை அனைத்தின் முகப்பையும் அழகிய வண்ணப்படங்கள் (Wall Papers) கொண்டு அலங்கரிக்கிறோம். நமது சாதனங்களை அலங்கரிப்பதற்குத் தகுந்த படங்கள் அவற்றைக் கையாளும் சுதந்திரத்துடன் (Creative Commons License) நமக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் தமிழில்? மேற்கண்ட நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சமூக வளர்ச்சித் திட்டம் தான் “Tamil Wallpapers in Creative Commons License”. அழகிய தமிழ்… Read More »

தமிழ்99 – ஸ்டிக்கர்கள் – நீங்களே அச்சடிக்கலாம்

      தமிழ்99 விசைப்பலகை தான் உலகிலேயே சிறந்த தமிழ் விசைப்பலகை.   தமிழ்99 விசைப்பலகை முறை, தமிழில் தட்டச்சு செய்வதை எளிதாக்குகிறது. இதன் சிறப்புகள் – 1. விசையழுத்தங்கள் மிகவும் குறைவு 2. இலக்கணப்படி பல இடங்களில் அதுவே மெய்யெழுத்துக்களுக்கு புள்ளியும் வைத்துக் கொள்ளும். இதனால் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இரண்டையுமே ஒழிக்கலாம். 3. பழகுவது எளிது. 4. தமிழ் எழுத்துக்களை எப்படி புரிந்து கொள்கிறோமோ அந்த வகையில தான் இது செயற்படும்… Read More »

இயல்பு வாழ்க்கையில் யூ.எஸ்.பி 2.0 மற்றும் யூ.எஸ்.பி. 3.0

யூ.எஸ்.பி 3.0 கருவிகள் மிகவும் பொதுவானதாக ஆகிவிட்டன, ஆனால் யூ.எஸ்.பி 2.0 கருவிகளுடன் ஒப்பிடும் போது அவை என்ன மேம்பட்ட பலன்களை அளிக்கின்றன? மொழியாக்கம்: ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி யூ.எஸ்.பி 3.0 கருவிகளுக்காக நான் மிகவும் ஆவலுடன் காத்திருந்தேன். அதிலும் குறிப்பாக, ஃபிளாஷ் மெமரி ஸ்டுக்குகள் (Flash Memory Stick) . பல வகையான லினக்ஸ் பகிர்வுகளை முயலும் போது பலமுறை யூ.எஸ்.பி கருவிகள் மூலம் கோப்புகளைப் படிக்கவும், சேமிக்கவும் நேரிடும். தற்போது யூ.எஸ்.பி 3.0 கருவிகள்… Read More »

Chennai Events – சென்னை நிகழ்வுகளின் தொகுப்பு

சென்னை மாநகரம் பல நிகழ்வுகளின் துறைமுகமாகத் திகழ்கிறது. சென்னையிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்றாடம் பல பொது நிகழ்ச்சிகள் நடைபெறுகிறன. அவற்றுள் தொடர்நிரல் நிகழ்வுகள் (Hackathon), மென்பொருள் பயனர் குழுக்களின் சந்திப்புகள் (Software Users Group meetings), பயன்பாடு வெளியீடு (Product launch), துவக்க விழாக்கள் போன்ற கணினியாளர்களுக்கான தொழில்நுட்ப நிகழ்ச்சிகளும், பதிவர் சந்திப்பு, கீச்சர் சந்திப்பு (Tweetup), புகைப்பட பயிற்சி மற்றும் பயிலரங்குகளும் அடங்கும். இந்நிகழ்ச்சிகள் பற்றி வலைத்தளங்கள், பதிவுகள், முகநூல் நிகழ்வுகள் (Facebook Events),… Read More »

இதயத்தில் ஒரு கசிவு (Heart Bleed)

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு – திருக்குறள் இன்றைய காலக்கட்டத்தில் மென்பொருள் பயன்பாடுகளுக்கு மேற்கண்ட குறள் மிகவும் பொருந்தும். பலரும் தங்கள் அறிவையும், நேரத்தையும் செலவிட்டு உருவாக்கும் மென்பொருட்களில், நாம் அறியாது இருக்கும் சிறு வழு (Bug) கூட வலுவானதாகி, மாபெரும் அச்சுறுத்தல் ஆகி விடுகிறது. அப்படி, சமீபத்தில் கண்டறியப்பட்டு உலகத்தையே ஒரு கலக்கு கலக்கிய பாதுகாப்பு குறைபாடுதான் இதயக் கசிவு (Heart Bleed) ஆகும். இதயக் கசிவு ஒரு வழு (Bug)… Read More »

பாண்டாஸ் (Pandas)

எழுத்து: ச.குப்பன் இன்றைய சூழலில், தரவுகள் தான் அனைத்து செயல்களுக்குமான மூலமாக விளங்குகின்றன. அபரிதமாக இணைய பயன்பாட்டு வளர்ச்சியினால், ஒவ்வொரு நொடியும் கணக்கிடமுடியாத அளவிற்கு இந்த தரவுகள் உருவாகிக்கொண்டே உள்ளன . அதற்கேற்ப ஏராளமான நிறுவனங்கள் இந்த தரவுகளைத் திறனுடன் கையாளுவதற்காகப் புதுப்புது வழிமுறைகளையும், மென்பொருள் கருவிகளையும் உருவாக்கி வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன. அவ்வாறானவைகளுள் பாண்டாஸ் (Pandas) எனும் திறமூலக் கருவியும் ஒன்றாகும். பைத்தானினுடைய (Python) நம்பி (numpy) எனும் கணித கட்டுகளைகொண்டு அணியினைப் பயன்படுத்தும் போது,… Read More »

பிகல்லியோடு (Pically) உங்கள் நாள்காட்டியை உருவாக்குங்கள்

புகைப்படங்கள் முடிவுற்ற காலத்தின் நினைவுகளைக் குறிக்கின்றன. நாள்காட்டி வருங்காலத்தைக் குறிக்கும். இவ்வாறு வெவ்வேறு காலங்களில் அடைபட்டுக் கிடக்கும் இரண்டையும் ஒருங்கிணைக்கும் பாலமாக விளங்குவது தான் பிகல்லி (Pically). உங்களுக்கு மிகவும் பிடித்த புகைப்படங்களை ஒவ்வொரு மாதங்களுக்கும் தேர்வு செய்து, விடுமுறை மற்றும் சுபதினங்கள் ஆகியவற்றைச் சேர்த்து, ஒரு நாள்காட்டியாக உருவாக்கி தொங்க விடலாம். இதுவரை நடந்த நிகழ்வுகளை நினைவு கூறுவதாகவும், வருங்கால கனவுகளைக் கண்முன் கொண்டு வருவதாகவும் அது அமையும். இது ஜாவா நிரல் மொழியால் உருவாக்கப்பட்ட… Read More »

OSSEC-HIDS – மேகக்கணினி சூழலிற்கான பாதுகாப்பு அரண்

எழுத்து: ச.குப்பன் பல பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தங்களுடைய தரவுகளைத் தேக்கி வைத்துக் கொள்ளவும், பல்வேறு பணிகளைக் கையாளவும், மேகக்கணினி (Cloud Computing) எனும் சேவைக்கு மாறி வருகின்றன. மேகக்கணினி சேவையில் ஏராளமான அபாயங்களும், பாதுகாப்பு குறைபாடுகளும் உள்ளன என்பது கண்கூடாக தெரிந்ததே! இந்த மேகக்கணினியின் சேவையினை கீழ்காணுவது போல மூன்றாகப் பிரித்தரியலாம்: கட்டமைவு சேவை (Infrastructure as a service (IaaS)) தளச்சேவை (Platform as a Service(PaaS)) மென்பொருள் சேவை (Software as… Read More »

திறவூற்று மென்பொருளுக்கு மாறும் தமிழக அரசு துறைகள்

மைக்ரோ சாப்ட் நிறுவனம், விண்டோஸ் எக்ஸ்பிக்கான தொழில் நுட்ப உதவியை (technical assistance) ஏப்ரல் 8 ஆம் தேதியுடன் நிறுத்தி விட்டது. இது குறித்த அறிவிப்பை ஜனவரியிலேயே மைக்ரேசாப்ட் வெளியிட்டு விட்டது. இதன் காரணமாக, தமிழ்நாட்டு அரசு துறைகளில் உள்ள அனைத்து கணினிகளிலும் திறவூற்று மென்பொருளான (open source software) பாஸ் லினக்ஸை (BOSS Linux) நிறுவ உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. “பாஸ் லினக்ஸை முக்கிய இயங்கு தளமாக நிறுவ பரிசீலியுங்கள்”, என தகவல் தொழில்நுட்ப துறையின்… Read More »

எளிய தமிழில் WordPress-5

எளிய தமிழில் WordPress-5 பக்கங்கள் உங்கள் தளத்தின் (பதிவுகள் அல்லாத) தனிப்பட்ட பக்கங்களை பார்வையிட, சேர்க்க, மாற்றியமைக்க, நீக்க இந்த மெனு உதவும். இந்த மெனுவில் பக்கங்களைச் சுருக்கமாக நிரந்தரமான பதிவுகள் எனலாம். அதிலும் Content உங்கள் விருப்பம். அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணமாக உங்களைப் பற்றிய அறிமுகத்தை (About me) அதில் தரலாம்.  அந்த Content எப்படி தளத்தில் உள்ளிடப்பட வேண்டும் என்பதை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம். உங்கள் Dashboard-ல் Pages எனும்… Read More »