Category Archives: கணியம்

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 3 – நிரலில் comment செய்தல்

Comment என்பது நிரலாளரின் (programmer) பயன்பாட்டிற்காக நிரலில் எழுதப்படும் வரிகளாகும். நிரலிலுள்ள comment-களை interpreter இயக்க முயற்சிக்காது, நிராகரித்துவிடும். Comment ஒருவரியிலோ, பலவரிகளிலோ இருக்கலாம். மற்ற நிரலாளர்களால் பயன்படுத்தப்படும் library-கள் எழுதும் பொழுது, ஆவணத்திற்காக (documentation) comment-கள் பயன்படுத்தப்படும். ரூபி ஆவணத்திற்குப்பயன்படுத்தபடும் rdoc, இதற்கு ஒரு சிறந்த உதாரணம். நிரல் வரிகளை, comment செய்வதின் மூலம், interpreter-ஆல் இயக்கமுடியாமல் தடுக்கலாம். இது தற்காலிகமாக இருக்க வேண்டும். எழுதப்பட்ட நிரல், எதிர்பார்த்தபடி இயங்குகிறதா என்பதை சோதித்தபின், இது போன்ற… Read More »

சோதனைகளின் வகைகள்

கணியத்தில் சாப்ட்வேர் டெஸ்டிங் பற்றி ஒரு தொடர் வருகிறதே! அதில், மென்பொருள் உருவானால் தான் நம்மால் சோதனையைத்தொடங்க முடியும் என சொல்கிறார்கள். ஆனால், முந்தைய பதிவில், மென்பொருள் உருவாக்கத்தையே சோதனைகள் மூலம் வழிநடத்தலாம் என அறிந்தோம். இவையிரண்டும், முன்னுக்குப்பின் முரணாக அமைகிறதே என குழம்பவேண்டாம். மென்பொருள் சோதனைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றைப்புரிந்துகொண்டால், தெளிவு கிடைக்கும். அவை, ஓரலகு சோதனைகள் (Unit tests) ஒருங்கிணைப்பு சோதனைகள் (Integration tests) செயல்பாட்டுச்சோதனைகள் (Functional tests) ஓரலகு சோதனைகள் நாம் முந்தைய அத்தியாயத்தில்… Read More »

இணைய நடுநிலைமை – வலைநொதுமை – NetNeutrality – சிறுகதை

நேத்திபுரம் பேருந்து நிறுத்தம் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியானதோ முக்கியமானப் பேருந்து நிறுத்தமோ அல்ல. இந்தியப் பேருந்து நிறுத்தங்களுக்கே உரியதான தூசியும் தும்புமான ஒன்றுதான் இதுவும். இந்தப் பேருந்து நிறுத்தத்தைச் சுற்றி வீடுகளோ கடைகளோ கிடையாது. வெறும் பொட்டல் காடுதான். சுற்றுப்புறத்தில் இருக்கும் நான்கு கிராமங்களில் இருந்து நகரத்துக்கு வேலைக்குச் செல்பவர்களைச் சுமந்து செல்வதற்காக ஆறு பேருந்துகள் ஒரு நாள் முழுவதற்கும் வந்து செல்லும். அந்தப் பேருந்து நிலையத்தை ஒட்டியிருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த அப்பு என்ற சிறுவன்… Read More »

PHP தமிழில் பகுதி 10: Flow Control and Looping

10. Flow Control and Looping PHP போன்ற நிரல்மொழிகளைப் பயன்படுத்துவதன் நோக்கமே, வலை (web) அடிப்படையிலான தகவல்களில் தர்க்கம் மற்றும் நுண்ணறிவு நுணுக்கங்களை கட்டமைக்க வேண்டும் என்பதாகும். தர்க்கம், நுண்ணறிவு என்று வந்துவிட்டாலே சூழலுக்கு ஏற்ப தகவல்களின் அடிப்படையில் அடிக்கடி முடிவுகளை எடுக்க வேண்டி வரும். உதாரணமாக, நிரலினுடைய ஒரு குறிப்பிட்ட பகுதியை பலமுறை இயக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம் அல்லது குறிப்பிட்ட நிபந்தனை பொருந்தும் போது மட்டும் நிரலை இயக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம்… Read More »

PHP தமிழில் – 6 மாறிலிகள் (Variables)

பகுதி – 6 PHP மாறிலிகள் (Variables) மாறிலிகள் உருவாக்குதல் மற்றும் பெயரிடுதல் மாறிலிகளுக்கு மதிப்புகள் கொடுத்தல் மாறிலிகளின் மதிப்புகளை அணுகுதல் மாறிலிகளின் மதிப்புகளை மாற்றுதல் மாறிலி set செய்யப்பட்டுள்ளதா என சோதனை செய்தல் மாறிலிகளை புரிந்து கொள்ளுதல் முழு எண் மாறிலி வகை (Integer Variable Type) தசம் எண் மாறிலி வகை (Float Variable Type) இரும மாறிலி வகை (Boolean Variable Type) எழுத்து மாறிலி (String Variable) எழுத்துக்களை எழுதுதல் மற்றும்… Read More »

PHP தமிழில் – 5 Comments in PHP

பகுதி – 5 PHP Comments ஒற்றை வரி comments (Single Line Comments) பல வரி comments (Multi Line Comments) அனைத்து கணினி நிரல் மொழிகளிலுமே குறிப்புரை (comments) வசதி இருக்கிறது. இந்த குறிப்புரை -இல் எழுத்தப்படும் வரிகள் நிரலின் பகுதியாக கருதப்படாது. அதாவது comment இல் எழுதப்படும் வரிகள்  நிரல் வரிகளாக கருத்தில் கொண்டு படிக்கவோ/இயக்கவோ பட மாட்டாது. நிரலை எழுதியவரைத் தவிர மற்றவர்கள் அந்த நிரலைப் பார்வையிடும் போது இந்த குறிப்புரை… Read More »

பெ௫ம் தரவு (பிக் டேட்டா)

பெ௫ம் தரவு என்றால் என்ன…?? அனைத்து துறைகளும் இப்பொழுது கணினிமயமாகிவிட்டது. எல்லாதரபினரும், பல்வேறு வகையான தரவுகளையும் அனைத்தையும், கணினியில் சேமித்து வ௫கின்றனா். சிறியளவில் இ௫ந்த தரவுகள், நாளைடைவில் பொரிதாகி வளர்ந்துவிட்டன. அத்தனை பெரிய தரவுகளை நாம் அன்றாடம் பயன்படுத்தும் கணிணியில் சேமிக்கவோ, செயலாக்கம் செய்யவோ முடியாத காரியம், மிகவும் கடினமும்கூட. அனைத்து பெரிய தரவுகளும், பெ௫ம் தரவுகள் அல்ல, நம்மை போன்று மடிக்கணினி பயன்படுத்துவோற்கு 500GB பொரியது, சறிய அலுவலகத்தில் 10TB பொரியது, பெரும் நிறுவனங்களில் 10PB… Read More »

PHP தமிழில் – பகுதி 4 PHP Script உருவாக்குதல்

பகுதி – 4 PHP Script – ஐ உருவாக்குதல் PHP குறியீடுகள் PHP – ஐ நிறுவுதல் PHP கணினியில் நிறுவப்பட்டுள்ளதா என சோதனை செய்தல் HTML கோப்பிற்குள் PHP Script – ஐ பொதிதல் (Embedded) PHP நிரலுக்குள் HTML நிரலை – ஐ பொதிதல் (Embedded) PHP Script உருவாக்குதல் இதற்கு முந்தைய பகுதிகளில் PHP எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தோம். இந்த பகுதியில் PHP Script – ஐ எப்படி… Read More »

PHP தமிழில் – 3 PHP எப்படி வேலை செய்கிறது?

பகுதி – 1 PHP – இன் வரலாறு PHP Script உருவாக்குதல் PHP பிரபலமானது எப்படி? பகுதி – 2 PHP – ஓர் அறிமுகம் பகுதி – 3 PHP எப்படி வேலை செய்கிறது?   PHP எப்படி வேலை செய்கிறது? பயனர் தன்னுடைய கணினியில் இருக்கும் இணைய உலாவியைத் திறந்து, உலாவியினுடைய முகவரிப்பட்டையில் இணையதளத்தின் முகவரியை கொடுத்து இயக்கும் போது, உலாவி வலைப்பக்கத்தின் பிரதியை கேட்டு  இணைய வழங்கிக்கு கோரிக்கை அனுப்புகிறது. இணைய… Read More »

PHP தமிழில் – 2 ஓர் அறிமுகம்

  பொருளடக்கம் பகுதி – 1 PHP – இன் வரலாறு PHP Script உருவாக்குதல் PHP பிரபலமானது எப்படி? பகுதி – 2 PHP – ஓர் அறிமுகம் PHP என்றால் என்ன? PHP என்பது ஒரு Server Side Scripting language. எளிமையாக சொல்ல வேண்டுமானால் உங்களுக்கு ஒரு புத்தகம் தேவைப்படுகிறது. அதை இணையமூலம் வாங்குவதற்காக ஏதோ ஒரு  பதிப்பகத்தின் இணையதளத்திற்கு செல்கிறீர்கள். அந்த பதிப்பகத்தின் இணையதளம் PHP மூலம் உருவாக்கப்பட்டதெனில். அந்த இணைதளத்தில்… Read More »