Category Archives: பங்களிப்பாளர்கள்

எளிய தமிழில் Car Electronics 12. உடற்பகுதிக் கட்டுப்பாட்டகம்

உடற்பகுதிக் கட்டுப்பாட்டகம் (Body Control Module – BCM) பொதுவாக ஊர்தியில் பயணிப்பவர்களின் வசதியையும் பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது. துணை வேலைகளை எளிதாக்குவதன் மூலம் ஊர்தியைப் பாதுகாப்பாக ஓட்டும் முக்கிய வேலையில் ஓட்டுநர் கவனம் செலுத்த வழி செய்கிறது. இது கதவுகள், கண்ணாடிகள், இருக்கைகள், விளக்குகள் ஆகிய பல சாதனங்களைக் கட்டுப்படுத்துகிறது. இவற்றில் மையப் பூட்டுதல் அமைப்பு, தொலைவில் சாவியற்ற திறத்தல் (Remote Keyless Entry – RKE), முன் கண்ணாடித் துடைப்பான், முன் கண்ணாடிக் கழுவும் அமைப்பு,… Read More »

எளிய தமிழில் Car Electronics 11. உமிழ்வுக் கட்டுப்பாடு

ஊர்திகளின் எண்ணிக்கை உயர உயர அவற்றின் உமிழ்வால் பெரிய நகரங்களில் காற்று மாசுபாடு பெரும் பிரச்சினையாக ஆகி வருகிறது. ஆகவே அரசாங்கங்கள் உமிழ்வுக் கட்டுப்பாட்டைத் (Emission control) தீவிரமாக அமல்படுத்துகின்றன. இவற்றில் எரிபொருள் முழுமையாக எரியாததால் வெளிவரும் கார்பன் மோனாக்சைடு (Carbon Monoxide), நீர்க்கரிமம் (Hydrocarbon) மற்றும் அதிக வெப்ப நிலையில் உருவாகும் நைட்ரஜன் ஆக்சைடுகள் (Nitrogen Oxides) மற்றும் புகைக்கரி (soot or particulate matter) ஆகியவை முக்கியமானவை.  நைட்ரஜன் ஆக்சைடுகள் உணரி (NOx Sensor)… Read More »

AI இல் புதிய போக்குகள் பற்றிய விரைவான பார்வை

கணினியில்(செயற்கைநுன்னறிவு(செநு(AI))) உருவாகிவளர்ந்தவரும்போது, அது முன்வைக்கின்ற பல்வேறு நெறிமுறைகளுக்கேற்ப நடைமுறையிலான சவால்களுக்கான தீர்வுகளுடன் நாம் பின்தொடர வேண்டும். இந்த கட்டுரையானது செநு(AI)இன் புதிய போக்குகள் , நம்முடைய தொழில்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவற்றின் முக்கியத்துவத்தினை பற்றிய சுருக்கமான விவரமாகும். செயற்கை நுண்ணறிவுத் துறையில், செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல் (ML), ஆழ்கற்றல் (DL), மரபணு வழிமுறைகள் நரம்பியல் வலைபின்னல்கள் ஆகியவை ஒரே மாதிரியானவை அல்லது குறிப்பிட்ட ஒரே செயலையேச் செய்கின்றன, ஆனால் அவை தருக்கமுறைகளால் மேன்மையடைகின்றன என்ற… Read More »

பைதானின் Pyrogram என்பதை பயன்படுத்தி OpenAI, Telegram ஆகியவற்றின் மூலம் நம்முடைய சொந்த AI Chatbot ஐ உருவாக்கிடுக

(இது Python இல்உள்ள Pyrogram எனும் வரைச்சட்டத்தின்மூலம் ChatGPT API , Telegram Bot ஆகியவற்றினைப் பயன்படுத்தி நம்முடைய சொந்த AI Bot ஒன்றினை உருவாக்குவதற்கான படிப்படியான வழிகாட்டியாகும்.) தற்போது AI ஆனது திறன்மிகு வீடுகள் முதல் மெய்நிகர் உதவியாளர்கள் வரை, நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. குறிப்பாக, Chatbots ஆனவை, சமீபத்திய நாட்களில் பெரும் புகழ் பெற்றுள்ளன, ஏனெனில் அவை செலவுகளைக் குறைக்கும் அதே வேளையில் விரைவான, திறமையான வாடிக்கையாளர் ஆதரவை வழங்க வணிகநிறுவனங்களை அனுமதிக்கின்றன.… Read More »

எளிய தமிழில் Car Electronics 10. இயங்கும் பாதுகாப்பு அமைப்புகள்

ஊர்தியின் வடிவமைப்பில் புவியீர்ப்பு மையம் (center of gravity) தாழ்வாக இருக்கவேண்டும். அப்போதுதான் அது எளிதில் குடைசாயாமல் இருக்கும். எதிர்பாராதவிதமாக ஊர்தி விபத்துக்குள்ளாகி மோதினாலும்கூட உள்ளே இருக்கும் பயணிகளைப் பாதுகாக்க அடிச்சட்டமும் (Chassis) உடற்பகுதியும் வலுவாக இருக்கவேண்டும். எரிபொருள் கலன் எளிதில் தீப்பற்றிக் கொள்ளாமல்  வடிவமைக்கப்படவேண்டும். மானிப்பலகையில் (dashboard) இருக்கும் நெகிழி, இருக்கையிலுள்ள துணிகள், நுரை ரப்பர் (foam rubber) ஆகியவை ஒருக்கால் தீப்பிடித்தாலும் பரவாமல் இருக்க வேண்டும். இவை யாவும் பாதுகாப்பு அமைப்புகள்தான்.  இவற்றை இயங்காப்… Read More »

PDFஐ கையாளுவதற்கான லினக்ஸில் கட்டளை வரிகளிலான தந்திரங்கள்

நம்முடையை தற்போதைய பல்வேறு பயன்பாடுகளில் PDFவடிவமைப்பிலான கோப்புகளையும் அவைகளை கையாளுவதற்கான எண்ணற்ற PDF பயன்பாடுகளையும் பயன்படுத்திவருகின்றோம், இவை ஒவ்வொன்றும் அதன் சொந்த தனித்தன்மைகளைக் கொண்டுள்ளன. இந்தக் கட்டுரை அவற்றில் பலவற்றை ஒருங்கிணைத்து, எந்தத் தாமதமும் இன்றி இவற்றை பெறுவதற்கு சரியான வழிகளுக்கான கட்டளை வரிகளிலான தந்திரங்களை வழங்குகிறது. இதனை அடிக்கடி தேவைப்படுகின்ற நம்முடைய PDF-செயலாக்கப் பணிகளுக்கு ஒரு barebones எனும் தயார்நிலை-குறிப்பாகப் பயன்படுத்திகொள்ளலாம். இதோ சில PDFஇற்கான கட்டளை வரிகளிலான தந்திரங்கள்: புதிதாக PDFகளை உருவாக்குதல் தற்போது… Read More »

கையடக்க சாதனங்களுக்கானபெர்ரி லினக்ஸ்எனும் இயக்கமுறைமை

பெர்ரி லினக்ஸ்என்பது ஒரு குறுவட்டிலிருந்தே,தானியங்கியாக வன்பொருட்களை கண்டறிதல் செய்து வழக்கமான கணினியை போன்று அதன் இயக்கத்தை துவக்கக்கூடிய ஒரு லினக்ஸ் இயக்கமுறைமையாகும். இந்த பெர்ரி லினக்ஸை லினக்ஸின்மாதிகாட்சியை கல்விபயிற்றுவிப்பதற்காண குறுவட்டாகவும், மீட்பு அமைப்பாகவும் பயன்படுத்திகொள்ளலாம். இந்த இயக்கமுறைமையை செயல்படுத்திடுவதற்காகவென தனியாக கணினியின் வன்தட்டில் எதையும் நிறுவுகைசெய்ய வேண்டிய அவசியமில்லை. பெர்ரி லினக்ஸ் ஒரு இலகுரக, மின்னல் வேக இயங்குதளமாகும், இது நல்ல வடிவமைப்பினையும் பயன்பாட்டினையும் கொண்டுள்ளது. இந்த இயக்க முறைமையை  CD-ROM / விரலி(USB)  / USB-HDD… Read More »

எளிய தமிழில் Car Electronics 9. சீர்வேகக் கட்டுப்பாடு

சீர்வேகக் கட்டுப்பாடு (Cruise control) என்பது நீங்கள் நெடுஞ்சாலையில் நிலையான வேகத்தில் ஓட்டும்போது உதவும் ஒரு  அம்சமாகும். இது உங்கள் காரை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நிலையாக அமைக்க அனுமதிக்கிறது. இவ்வாறு அமைத்தபின் உங்கள் கால்களை முடுக்கி மிதியிலிருந்து (accelerator pedal) எடுத்துவிடலாம். எனவே, இது நீண்ட பயணத்தில் கால் சோர்வையும் வலியையும் குறைக்கும். நிலையான வேகத்தில் ஊர்தி ஓடும்போது, எரிபொருளை சீராகப் பயன்படுத்துவதால்  எரிபொருளைச் சேமிக்கும். சீர்வேகக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, முடுக்கியை மிதித்து காரை இன்னும்… Read More »

ReactPy இன் சக்தியை கட்டவிழ்த்து விட்டிடுக

சுருக்கமாக கூறுவதெனில் ReactPy என்பது ஜாவாஸ்கிரிப்ட் இல்லாமலேயே பைத்தானில் பயனர் இடைமுகங்களை உருவாக்குவதற்கான ஒரு நூலகமாகும்.இந்த ReactPyஇன்இடைமுகங்கள் ReactJS இல் உள்ளதைப் போன்றே தோற்றமளிக்கின்ற செயல்படுகின்ற கூறுகளிலிருந்து உருவாக்கப்படுகின்றன. இது பயன்படுத்த எளிதாகஇருக்கவேண்டுமேன்பதை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, மிகமுக்கியமாக இந்தReactPy ஆனது இணையபயன்பாடுகளை உருவாக்குவதில் அனுபவம் இல்லாதவர்களால் பயன்படுத்திகொள்ளமுடியும்என்பதேயாகும்.. இதனை பயன்படுத்துவது எளிதான செயலாகும், மேலும்இது பின்னனி, முன்னனி தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்க உதவுகிறது. ReactPy என்பது ஒரு சமகால பைதான் நூலகமாகும், இது JavaScript சார்ந்திருக்கின்ற தேவையை… Read More »

எளிய தமிழில் Car Electronics 8. திறன் உதவித் திருப்பல்

மெதுவாக நகரும் போது ஊர்திகளைத் திருப்ப அதிக முயற்சி போட வேண்டும் என்பது கண்கூடாகத் தெரிந்ததே. திறன் திருப்பல் (Power steering) என்பது ஒரு மோட்டார் ஊர்தியின் திருப்பு வளையத்தைத் (steering wheel) திருப்புவதற்கு ஓட்டுநரின் முயற்சியைக் குறைப்பதற்கான ஒரு அமைப்பாகும். இது திருப்பும் முயற்சியைக் குறைப்பதற்கு இயந்திர சக்தியின் உதவியை அளிக்கிறது. ஆகவே இதைத் திறன் உதவித் திருப்பல் (Power assisted steering) என்று சொல்வதே சரியாக இருக்கும். இது ஊர்தி நின்று கொண்டிருக்கும்போதும், மெதுவாக… Read More »