பேராலயமும் சந்தையும் 9. ஃபெட்ச்மெயில் முதிர்ச்சி அடைகிறது
இப்படியாக ஃபெட்ச்மெயில் நேர்த்தியான மற்றும் புதுமையான வடிவமைப்புடன் மேம்பட்டு வந்தது. நான் தினமும் பயன்படுத்தியதால் எனக்குத் தெரிந்து நிரல் நன்றாக வேலை செய்தது. மேலும் பீட்டா பட்டியல் வளர்ந்து வந்தது. வேறு ஒரு சிலருக்கு மட்டுமே பயன்படக்கூடிய அற்பமான தனிப்பட்ட நிரல் திட்டத்தில் நான் ஈடுபடவில்லை என்பது படிப்படியாக எனக்குப் புரிந்தது. யூனிக்ஸ் கணினி மற்றும் SLIP/PPP அஞ்சல் இணைப்பு கொண்ட ஒவ்வொரு கொந்தருக்கும் உண்மையில் தேவைப்படும் ஒரு நிரலைத்தான் நான் கையில் எடுத்துள்ளேன். SMTP மேலனுப்புதல்… Read More »