Category Archives: பங்களிப்பாளர்கள்

எளிய தமிழில் 3D Printing 14. பாகத்தை வருடி வரைபடம் தயாரித்தல்

பாகத்தின் வரைபடம் இருந்தால் பொருள் சேர் உற்பத்தி மூலம் நம்மால் அந்த பாகத்தைத் தயாரிக்க முடியும். ஆனால் நம்மிடம் பாகத்தின் வரைபடம் இல்லை, அதற்கு பதிலாக தேய்ந்த அல்லது உடைந்த பாகம் மட்டுமே உள்ளது என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்வது? இம்மாதிரி தருணங்களில் பாகத்தை வருடி வரைபடம் தயாரித்தல் நமக்குக் கை கொடுக்கும். மீள்நோக்குப் பொறியியல் (Reverse engineering) வழக்கமாக முதலில் வரைபடம் வரைந்து அதன் பின்னர் அந்தப் படத்தில் உள்ளபடி பாகம் உருவாக்குவோம். இதை… Read More »

Collabora Online எனும் திறமூல கருவியின் மூலம் எந்த வகையான ஆவணத்தையும் கையாளுக

Collabora Online எனும் திறமூலகருவியானது பொதுமக்கள் தற்போதுபயன்படுத்தி கொள்கின்ற அனைத்து வகையான கோப்புகளையும் வடிவமைப்புகளையும் ஆதரிக்கிறது. Microsoft 365 , Google Workspace போன்ற பல்வேறு அலுவலகத் தொகுப்புகளுடன் சிக்கலான உரை ஆவணங்கள் ,விரிதாள்களைப் பரிமாறிக்கொள்ளும் இந்தCollabora Online இன் திறனைக் இப்போது காண்போம் Collabora Online என்பது மேககணினி அல்லது வளாககணினிக்கான திறமூல அலுவலகத் தொகுப்பாகும், இது நம்முடைய தனியுரிமையைப் பாதுகாக்கின்றது அதனோடு நம்முடைய தரவின் முழுக் கட்டுப்பாட்டையும் நாமே வைத்திருக்க நம்மை அனுமதிக்கிறது. கேம்பிரிட்ஜில்… Read More »

பிரபலமான சிறந்த ஒருதிறமூல IDEஐ எவ்வாறு தேர்வு செய்வது?

ஒரு IDE என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற ஒருங்கிணைக்கப்பட்ட மேம்பாட்டு சூழல் என்பது, நிரலாக்கம் செய்வதற்கான அல்லது மென்பொருள் மேம்பாட்டிற்கான ஒரு விரிவான கருவிகளை வழங்குகின்ற பயன்பாடுகளின் ஒருங்கிணைந்த தொகுப்பாகும். இது பொதுவாக ஒரு மூலக் குறிமுறைவரி களின் திருத்தி, இயந்திரமொழிமாற்றி அல்லது மொழிபெயர்ப்பாளர், பிழைத்திருத்தசெயலி , செயல்திட்ட மேலாளர், பதிப்புக் கட்டுப்பாட்டின் ஒருங்கிணைப்பாளர் , வரைகலை பயனர் இடைமுகம் என்பனபோன்ற பல்வேறு வசதிவாய்ப்புகளை உள்ளடக்கியதாகும். மென்பொருள் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள நிரலாளர்கள் தங்களின் பல்வேறு பணிகளுக்காக ஒரேயொரு பயன்பாட்டின்… Read More »

எளிய தமிழில் 3D Printing 13. புனைதல் செயல்முறையின் பாவனையாக்கல் (Simulation)

நாம் முதல் முறையாக ஒரு பாகத்தை 3D அச்சு புனைதல் செய்யும் போது வரும் பிரச்சினைகளுக்குத் தகுந்தவாறு வடிவமைப்பையோ அல்லது செயல்முறையையோ மாற்றியமைத்துத் திரும்பவும் புனைவோம். ஆனால் திரும்பத்திரும்ப முயற்சி செய்து பார்த்துப் பிழையை சரி செய்வதில் (trial and error) செலவும் அதிகம் மற்றும் நேரமும் வீணாகும். இம்மாதிரி புனைதல் செய்து செய்து பார்த்துக்கொண்டிராமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேறு எளிய வழி இருக்கிறதா என்றால் அதுதான் பாவனையாக்கல்.  வெப்பவிசையியல் விளைவால் (thermo-mechanical effect) உருக்குலைவு… Read More »

எளிய தமிழில் 3D Printing 12. அச்சடித்த பின் வரும் வேலைகள் (Post-processing)

தாங்கும் பொருட்களை நீக்குதல் (Support Removal) மற்றும் பிசினை சுத்தம் செய்தல் இழையை உருக்கிப் புனைதல் (FDM) முறையில் அச்சு எந்திரத்தின் அடித்தட்டிலிருந்து எடுத்து ஆறியபின் முதலில்  பாகங்களின் தாங்கும் பொருட்களை அகற்றவேண்டும். ஒளித் திண்மமாக்கல் (stereo lithography) முறையில் ஒளி பட்டால் திண்மமாகும் நெகிழி (photopolymers) திரவங்களைப் பயன்படுத்துவோம் என்று பார்த்தோம். ஆகவே இம்முறையில் உருவாக்கிய பாகங்களில் தாங்கும் பொருட்களை அகற்றும் முன்னர் தேவையற்று ஒட்டியிருக்கும் திரவப் பிசினை முதலில் சுத்தம் செய்ய வேண்டும்.  தூய்மை… Read More »

ChatGPT ஐ மேம்பட்ட குரல் உதவியாளராக எவ்வாறு மாற்றுவது

தற்போது புதியதாக அறிமுகபடுத்தப்பட்டுள்ள ChatGPTக்கு அறிமுகம் எதுவும் தேவையில்லை. நாம் இதனிடம் எந்த கேள்வியை கேட்டாலும் உடனடியாக இது அதற்கான பதிலைஒரு திரைகாட்சியாக அளிக்கின்ற திறன்மிக்கது. அதாவது இதனுடைய பதிலானது உரை வடிவில் மட்டுமே திரையில் காட்சியாக வருகிறது. Siri போன்ற குரல் உதவியாளரிடம் பேசுவது போன்று, இதனுடன் உரையாடல் செய்வதற்காக நாம் என்ன செய்வது? AI இன் உலகில் ChatGPT ஆனது ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது இரகசியமன்று. ஆயினும் இது மற்ற AI… Read More »

பொருத்துபவரின்(Docker) கொள்கலனை( Container) அமைத்தல்

பொருத்துபவர்(Docker) ஆனது பூஜ்ஜிய மேல்நிலையுடன் இலகுரக மெய்நிகராக்க தீர்வை வழங்குகிறது. இது உபுண்டுவில் NGINX என்ற பொருத்துபவரின் கொள்கலண் பயன்பாட்டினைப் பயன்படுத்துவதையும் கோடிட்டுக் காட்டுகிறது. கொள்கலணாக்குதல்( Containerization)தற்போது மென்பொருள் மேம்பாட்டு சமூகத்தில் மெய்நிகராக்கத்திற்கு மாற்றாக பிரபலமாக உள்ளது. இது மென்பொருளையும் அதன் அனைத்து சார்புகளையும் இயக்க நேர சூழலுடன் இணைக்க (கொள்கலணாக்குதல்) செய்ய உதவுகிறது, அதனால் இது பல்வேறு உள்கட்டமைப்புகளிலும் தளங்களிலும் ஒரே மாதிரியாக இயங்க முடியும். பொதுவாக, பல மெய்நிகர் கணினிகளில் இயங்கும் மென்பொருளைக் காட்டிலும்,… Read More »

திறமூல CMS இயங்குதளங்கள் பற்றிய கட்டுக்கதைகள்

பொதுவாக தற்போது எந்தவொரு நபரும் தனக்கென ஒருஇணையதளத்தை உருவாக்குவதற்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. Drupal அல்லது WordPress போன்ற திறமூல தளத்தையோ அல்லது Adobe அல்லது Microsoft போன்ற தனியுரிமை தளத்தையோ தேர்வு செய்யலாம். இவ்விரண்டு வாய்ப்புகளில் நாம் உருவாக்கப்போகும் இணையதளத்திற்கு எது சிறந்தது? அதற்காக கருத்தில் கொள்ள வேண்டியவை:1.எவ்வளவு பயனர் ஆதரவைப் பெறக்கூடும்?, 2.பாதுகாப்பிற்கு எது சிறந்தது? ,3.இதற்கான செலவு நமக்கு கட்டுப்படியாககூடியதாக உள்ளதா? வரையறுக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு, இதனை தேர்வு… Read More »

செயற்கை நுண்ணறிவு: அதன் அடிப்படைகளை தெரிந்து கொள்க

நாம் கணினி உலகின் சமீபத்திய போக்குகளில் ஆர்வமுள்ள மாணவராகவோ அல்லது தொழில்முறை நிபுணராகவோ இருந்தால், செயற்கைநுன்னறிவு(AI), இயந்திர கற்றல் (ML) , ஆழ் கற்றல்(DL), தரவு அறிவியல்(DC), போன்ற சொற்களை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம் செயற்கை நுண்ணறிவு பற்றிய இந்தத் கட்டுரை இந்த விதிமுறைகளை விளக்குவதோடு. , தொடக்க நிலையாளர்கள் AI உடன் தொடங்க உதவும் எளிய பயிற்சிக்கான தளத்தை அமைக்க உதவக்கூடும். இன்று கணினி அறிவியல் துறையில் உள்ள எந்தவொரு மாணவரும் அல்லது தொழில்முறை நிபுணரும்… Read More »

லுவா எனும் கணினிமொழியை எளிதாகக் கற்றுக்கொள்க

லுவா என்பது எளிமைக்காகவும் செயல்திறனுக்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு நிரலாக்க மொழியாகும், இது கானொளிகாட்சிவிளையாட்டு,பல்லூடக நிறுவனங்களால் பயன்பாட்டின்முன்-பக்க உரைநிரல் மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு அற்புதமான சாளர மேலாளர், தொலைதூர கோப்பு மேலாளர், Howl உரை திருத்தி , அதன் தெளிவு சுத்தமான வடிவமைப் பிற்காக இன்னும் பல திறமூல செயல்திட்டங்களால் பயன்படுத்தப்படுகிறது. லுவா எனும் கணினிமொழியின் குறிமுறைவரிகளை மற்றவற்றுள் உட்பொதிக்கக்கூடியது, எனவே மற்றொருகணினி மொழியின் (ஜாவா, சி ,சி++ போன்றவை) குறிமுறைவரிகளின்அடிப்படைகளில் லுவாவின் குறிமுறை வரிகளை சேர்க்கலாம்,… Read More »