எளிய தமிழில் Computer Vision 17. காணொளியை செயல்படுத்தல் (Video processing)
காணொளித் தாரையை (streaming video) செயல்படுத்துவது என்பது தொடர்ச்சியான செயல்முறை அல்ல. நாம் காணொளியைக் கையாளும்போது சட்டகங்களை (frames) தனித்தனியாகத்தான் செயல்படுத்துகிறோம். ஏனெனில் ஒவ்வொரு சட்டகமும் ஒரு படம் தானே. சட்டகம் கவர்வி (Frame grabber) சட்டகம் கவர்விகள் ஓடும் காணொளியில் நம் பகுப்பாய்வுக்குத் தேவையான சட்டகங்களைப் பிரித்தெடுத்து அனுப்பும் வேலையைச் செய்பவை. முன் காலத்தில் கணினியில் விரிவாக்க அட்டைகள் (expansion cards) சேர்த்து சட்டகம் கவர்வி வேலைக்குப் பயன்படுத்துவோம். இப்பொழுது சட்டகம் கவர்வி உள்ள படக்… Read More »