எளிய தமிழில் Computer Vision 27. பணியாளர் பாதுகாப்பும் உடல்நலனும்
கீழ்க்கண்ட வேலைகளுக்கு கணினிப் பார்வைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம்: அபாயகரமான பணியிடங்களில் தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள் (PPE – Personal Protective Equipment) அணியவேண்டும் என்ற வழிமுறைகளைப் பின்பற்றுதல். அபாயகரமான வேதிப்பொருட்கள் (Chemicals) சரக்கு வைப்பு மற்றும் போக்குவரத்தைக் கண்காணித்தல். மீண்டும் மீண்டும் செய்யும் வேலைகளில் காயமடைவதைத் (repetitive injury) தடுக்க பணிச்சூழலியல் (Ergonomics) மதிப்பீடு. கட்டுமான தளத்தில் ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்த்தல் செய்யும் வேலையைப் பொருத்து பணியிடங்களில் தலைக்கவசம், பாதுகாப்புக் கண்ணாடி போன்ற சாதனங்களை அணிவது அவசியம்.… Read More »