Category Archives: Linux News

கைபேசி லினக்ஸிற்கும் மேசைக்கணினி லிக்ஸிற்கும் இடையேயான வேறுபாடுகள்-

புதியதாக துவங்கியுள்ள இந்த ஆண்டு நிரந்தரமாக “மேசைக்கணினியின் லினக்ஸின் ஆண்டு” ஆக இருக்கலாம், ஆனால் கைபேசியில் லினக்ஸினுடைய கெர்னலின் அடிப்படையில் செயல்படும் ஆண்ட்ராய்டு இயக்க முறைமைஅதற்காக காத்திருக்கவில்லை. கைபேசியிலுள்ள இந்த லினக்ஸின் கெர்னலானவை, கைபேசி சாதனங்கள் நன்கு செயல்படுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அளிக்கின்றன. இந்நிலையில் லினக்ஸின் அடிப்படையிலான கெர்னல் ஆனது மேசைக்கணினி , கைபேசி ஆகியஇரண்டிலும் எவ்வாறு இயங்க முடியும்? மேலும் கைபேசி லினக்ஸ் ஆனது மேசைக்கணினி லினக்ஸிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது அதுமட்டுமல்லாது ஆண்ட்ராய்டில் மேசைக்கணினியின்… Read More »

MX லினக்ஸ் ஒருஅறிமுகம்

முந்தைய MEPIS எனும்குழுவினரும் antiX உம் கூட்டாக சேர்ந்து இவ்விரண்டில்உள்ள சிறந்த கருவிகளையும் தந்திரவழிகளையும் பயன்படுத்தி அதனடிப்படையில் உருவாக்கி வெளியிடப்பட்டதொரு புதியவகை லினக்ஸ்இயக்கமுறைமையே MX லினக்ஸாகும் இது ஒரு நேர்த்தியானதும் திறமையானதுமான மேஜைக்கணினியை எளிய கட்டமைப்பு, உயர் நிலைத்தன்மை, திடமான செயல்திறன் நடுத்தர அளவிலான தடம் ஆகியவற்றுடன் இணைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இடைநிலை இயக்கமுறைமையாகும். நம்முடைய பென்ட்ரைவிலிருந்து கூட இயக்ககூடிய கையடக்க இயக்கமுறைமையாகஇது கட்டமைக்கப் பட்டுள்ளது இதில் இயல்புநிலை இணையஉலாவியாக Firefox 64.0 கானொளி படங்கள் செயல்படுவதற்காக… Read More »

KDE Plasma 5 – பிறந்தநாள் இன்று

5 ஆண்டுகளுக்கு முன்பு KDE Plasma 5 வெளியிடப்பட்டது. மிக இனிய இடைமுகப்பை உருவாக்கி அளித்து வரும் அனைத்து KDE பங்களிப்பாளர்களுக்கும் நன்றிகள். peertube.mastodon.host/videos/watch/963e4e9f-6754-42b0-8b31-0495fb98f15b     20 ஆண்டுகால KDE ன் வளர்ச்சியை இந்த இலவச மின்னூல் அட்டகாசமாக விளக்குகிறது. 20years.kde.org/book/       KDE ன் காலக் கோடு இங்கே – timeline.kde.org/       mastodon.technology/@kde/102449852140716549

உலகின் 500 அதிவேக மீத்திறன் கணினியில் தியான்கே-2 (Tianhe-2) முதலிடம்!

உலகின் ஏழு அதிசயத்தில் ஒன்றான சீனப் பெருஞ் சுவர் 6 ஆம் நூற்றாண்டின் மைல்கல். இன்று 21 ஆம் நூற்றாண்டின் எண்ணியல் காலத்தின் மைல்கல் தியான்கே-2. சீனாவின் தியான்கே-2 (Tianhe-2) உலகின் 500 அதிவேக மீத்திறன் கணினிகளின் (High Power Super Computer) பாட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச மீத்திறன் கணினி மாநாடு (International Super Computing Conference) ஜூலை மாதம் ஜெர்மெனியில் உள்ள பிரான்க்புரட் நகரில் நடைபெற்றது. இதில் உலகின் அதிவேக கணினியின் பட்டியலை லிப்னக்… Read More »

தட(ள)ம் மாறும் இந்திய வங்கிகள் – யார் காரணம்?

ஏப்ரல் 8, 2014 கணினித் துறையில் ஒரு மிக முக்கிய நாள். தனது இயங்குதள பதிப்புகளிலேயே புகழ் பெற்றதும், நீண்ட நாட்களாய் புழக்கத்தில் இருக்கும் பெருமை பெற்றதும் ஆகிய Windows XP இயங்குதளத்திற்கான ஆதரவை மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் அன்றுடன் நிறுத்திக் கொண்டது. இதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகப் போவது வங்கித் துறை தான். இன்று உலகில் உள்ள பெரும்பாலான தன்னியக்க வங்கி இயந்திரங்கள் (ATM) Windows XP -ஐ அடிப்படையாகக் கொண்டு தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.… Read More »

லினக்ஸ் பகிர்ந்தளிப்பு(Linux Distribution) என்றால் என்ன?

இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் முன்பு, லினக்ஸ் என்றால் என்ன என்ற சாதாரண கேள்விக்கு பதில் சொல்ல பிரியப்படுகிறேன். இதற்க்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன. என்னை போன்ற கற்றுக்குட்டிகளை கேட்டால், இது ஒரு மைய கரு மென்பொருள் (core kernel software). இது கணிபொறியின் வன்பொருள் (hardware) மற்றும் பயனாளர்களின் நிரல்களுக்கு (programs) இடையில் செயல்படும். இது லினஸ் டோர்வோல்ட்ஸ் (Linus Torvolds) என்ற ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு, பெயர் காரணமாக லினக்ஸ் (linux) என்று பெயர் பெற்றது… Read More »