Category Archives: Linux News

உலகின் 500 அதிவேக மீத்திறன் கணினியில் தியான்கே-2 (Tianhe-2) முதலிடம்!

உலகின் ஏழு அதிசயத்தில் ஒன்றான சீனப் பெருஞ் சுவர் 6 ஆம் நூற்றாண்டின் மைல்கல். இன்று 21 ஆம் நூற்றாண்டின் எண்ணியல் காலத்தின் மைல்கல் தியான்கே-2. சீனாவின் தியான்கே-2 (Tianhe-2) உலகின் 500 அதிவேக மீத்திறன் கணினிகளின் (High Power Super Computer) பாட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச மீத்திறன் கணினி மாநாடு (International Super Computing Conference) ஜூலை மாதம் ஜெர்மெனியில் உள்ள பிரான்க்புரட் நகரில் நடைபெற்றது. இதில் உலகின் அதிவேக கணினியின் பட்டியலை லிப்னக்… Read More »

தட(ள)ம் மாறும் இந்திய வங்கிகள் – யார் காரணம்?

ஏப்ரல் 8, 2014 கணினித் துறையில் ஒரு மிக முக்கிய நாள். தனது இயங்குதள பதிப்புகளிலேயே புகழ் பெற்றதும், நீண்ட நாட்களாய் புழக்கத்தில் இருக்கும் பெருமை பெற்றதும் ஆகிய Windows XP இயங்குதளத்திற்கான ஆதரவை மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் அன்றுடன் நிறுத்திக் கொண்டது. இதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகப் போவது வங்கித் துறை தான். இன்று உலகில் உள்ள பெரும்பாலான தன்னியக்க வங்கி இயந்திரங்கள் (ATM) Windows XP -ஐ அடிப்படையாகக் கொண்டு தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.… Read More »

லினக்ஸ் பகிர்ந்தளிப்பு(Linux Distribution) என்றால் என்ன?

இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் முன்பு, லினக்ஸ் என்றால் என்ன என்ற சாதாரண கேள்விக்கு பதில் சொல்ல பிரியப்படுகிறேன். இதற்க்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன. என்னை போன்ற கற்றுக்குட்டிகளை கேட்டால், இது ஒரு மைய கரு மென்பொருள் (core kernel software). இது கணிபொறியின் வன்பொருள் (hardware) மற்றும் பயனாளர்களின் நிரல்களுக்கு (programs) இடையில் செயல்படும். இது லினஸ் டோர்வோல்ட்ஸ் (Linus Torvolds) என்ற ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு, பெயர் காரணமாக லினக்ஸ் (linux) என்று பெயர் பெற்றது… Read More »