Category Archives: Linux News

லினக்ஸ் கட்டளையுடன் படத்தின் பின்னணியை மாற்றியமைத்திடுக

நம்முடைய சிறந்தசுயவிவரப் படம் ஒன்று நம்மிடம் உள்ளது அதை சமூக குழுவின் ஊடக சுயவிவரத்திற்கு பயன்படுத்த விரும்புகின்றோம், ஆனால் இந்த படத்தின் பின்னணி கவனத்தை சிதறடிக்கிறது. இந்நிலையில் மற்றொரு படம் சுயவிவரப் படத்திற்கான சரியான பின்னணியைக் கொண்டுள்ளது. இரண்டையும் எவ்வாறு ஒன்றாக இணைப்பது? சில திறன்பேசி பயன்பாடுகள் இந்த வகைகளிலான உருவப்படங்களை எளிதாகக் கையாளுகின்றன, ஆனால் அவை மிகவும் விலை உயர்ந்தவை அல்லது விளம்பரப் பொருட்களால் சிக்கியுள்ளன. மேலும் அவை திறமூலம் அல்ல. Rembg என்பது இவ்வாறான… Read More »

லினக்ஸின் ABIஐ தெரிந்துகொள்வதற்கான ஒரு பத்து நிமிட வழிகாட்டி

பல லினக்ஸ் ஆர்வலர்கள் லினஸ் டொர்வால்ட்ஸின் புகழ்பெற்ற , “we don’t break user space”, எனும் அறிவுரையை நன்கு அறிந்திருப்பார்கள்ஆனால் இந்த சொற்றொடரை அங்கீகரிக்கும் அனைவரும் அதன் உண்மையான பொருள் என்ன என்பது பற்றி உறுதியாக தெரிந்துகொள்வதில்லை. பயன்பாடுகளின் இரும இடைமுகத்தின் நிலைத்தன்மையைப் பற்றி “#1 எனும் விதி” மேம்படுத்துநர்களுக்கு நினைவூட்டுகிறது, இதன் மூலம் பயன்பாடுகள் உருவாக்கமையத்துடன் தொடர்புகொண்டு கட்டமைக்கப்படுகின்றது. பின்வருபவை ABI இன் கருத்துருவை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவும், ABI இன் நிலைத்தன்மை ஏன் முக்கியம்… Read More »

இன்று உபுண்டு லினக்சு 22.10 kinetic kudu வெளியானது

இன்று உபுண்டு 22.10 kinetic kudu வெளியானது. மேலும் அறிய. Ubuntu Canonical releases Ubuntu 22.10 Kinetic Kudu | Ubuntu   குறிப்பு – 6 மாதங்களுக்கு ஒரு முறை உபுண்டு லினக்சின் புதிய பதிப்பு வெளியிடப்படுகிறது. ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் வெளியாகிறது. ஆண்டு.மாதம் என பதிப்பு எண்ணும் ஒரு செல்லப் பெயரும் வழங்கப்படுகிறது. புதிதாக லினக்சு நிறுவுவோர் புதிய பதிப்பையே பதிவிறக்கம் செய்து நிறுவுக. பழைய பதிப்பு ஏற்கெனவே நிறுவியோரும், இணைய வழியில்… Read More »

குனு/லினக்ஸிற்கானNuTyX எனும் புதிய இயக்கமுறைமை

தற்போது NuTyX எனும் அதிக நெகிழ்வுத்தன்மையுடனான ஒரு முழுமையான குனு/லினக்ஸிற்கான இயக்கமுறைமை வெளியிடப்பெற்றுள்ளது , , . இதனை பயன்படுத்தவிரும்பும் பயனாளர்கள் முதலில் குனு/லினக்ஸ் இயக்கமுறைமையின் அமைப்பைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது. ஏனெனில் இதனுடைய ‘install-nutyx’ எனும் உரைநிரல் , சுதந்திரமான GRUB நிறுவுகையின் செயல்முறை, cards’ எனும்தொகுப்பு மேலாளர், collections, என்பன போன்ற அசல் கருத்துமைவுகள் குனு/லினக்ஸ்பற்றி குறைந்த அனுபவம் உள்ளவர்களுக்கு அதிக தொந்தரவு கொடுக்கக்கூடும். தங்கள் திறமைகளை… Read More »

லினக்ஸின்KDE ,GNOME ஆகியவற்றிற்குஇடையிலான வேறுபாடு

ஒரு தீவிர KDE இன் அடிப்படையிலானPlasma மேசைக்கணினி பயனாளர்கூட, தன்னுடைய அலுவலகப் பணிக்கு மிகமகிழ்ச்சியுடன்GNOME அடிப்படையிலானதைப் பயன்படுத்திகொள்வார். நாம் பாலைவனம் போன்ற பொட்டல்காடான எந்தவொரு பகுதிக்கு அல்லது தனித்த தீவுபோன்ற எந்தவொரு பகுதிக்கு சென்றாலும் லினக்ஸின் இவ்விரண்டு வெளியீடுகளில் எந்த வெளியீடு செயல்படுகின்ற மேசைக் கணினியை அல்லது மடிக்கணினியை கையோடு எடுத்துச் செல்வது என்ற பட்டிமன்ற கேள்விக்கெல்லாம் செல்லாமல் , லினக்ஸின் இயக்க முறைமையின் இரண்டுவகை வெளியீடுகளின் சிறப்பியல்புகளையும் மட்டும்இப்போது காண்போம், மேலும் திறமூலமற்ற மேசைக்கணினி இயக்கமுறைமை… Read More »

புதிய நிரலாக்கமொழியைக் கற்றுக்கொள்வதற்கான உதவிக் குறிப்புகள்

பொதுவாக திறமூலங்களின் வளர்ச்சியடைந்துவரும் தற்போதைய சூழலில் நாம் அனைவரும் நிரலாக்கத்தினை எளிதாக துவங்கலாம், அதிலும் எந்தவொரு நிரலாக்கத்தினையும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எளிதாக தொடங்கலாம் என்பதே தற்போதைய உண்மை நிலவரமாகும். மேலும் தற்போதுகணினி மொழிகளில் குறிமுறைவரிகளை எழுதக் கற்றுக் கொள்வதற்காகவென கணினி அறிவியல் பின்னணியைக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதுதான் லினக்ஸ், திறமூலங்கள் ஆகியவற்றின் தற்போதைய திறனாகும் எவரும் சிறிய அளவில் குறிமுறைவரிகளை எளிதாக எழுத கற்றுக்கொள்ளலாம். எவரும் ஏதேனும்ஒரு புதிய நிரலாக்க மொழியைக் கற்றுக் கொள்ள… Read More »

லினக்ஸின் உருவாக்கமையத்தின் பொதுவாக அறிந்தகொள்ளாத முப்பது செய்திகள்

இந்த ஆண்டு லினக்ஸின் உருவாக்கமையத்திற்கு 30 வயதை எட்டுகிறது. இது மூன்று தசாப்தங்களின் முன்னோடியான ஒரு திறமூல மென்பொருளாகும், பயனாளர்கள் கட்டணமற்ற மென்பொருளை இயக்கவும், இயங்குகின்ற பயன்பாடுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொண்டதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. லினக்ஸின் உருவாக்கமையம் இல்லாமல், இன்று நாம் அனுபவிக்கின்ற திறமூல கட்டணமற்ற மென்பொருட்களின் ஆடம்பரங்கள் ஆகிய எவைகளும் நாம் அடைந்திருக்முடியாது . ஆப்பிள் , மைக்ரோசாப்ட் , கூகுள் ஆகியவை லினக்ஸ் வினையூக்கியாக இல்லாமல் திறமூலத்திற்கு அடியெடுத்துவைத்திருப்பது என்பது மிகவும் சாத்தியமற்றதாகும்.… Read More »

30 ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள் – லினக்சு

ஆகஸ்டு 25, 1991 ல் லினஸ் டோர்வார்ட்சு பின்வரும் மின்னஞ்சலை அனுப்பினார்.   இது ஒரு மாபெரும் புரட்சியை உண்டாக்கும் என்று அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. அப்போது ரிச்சர்ட் ஸ்டால்மேன், GNU திட்டத்தை அறிவித்திருந்தார். GCC, Emacs ஆகிய கருவிகளையும் அளித்திருந்தார். மனிதர் யாவரும் பயனுறும் வகையில், மூல நிரலையும் பகிர்ந்தார். மூல நிரலை யாவரும் எங்கும் பகிரலாம், தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம், மாற்றங்களையும் பகிரலாம் என்ற உரிமையில் அவர் தொடங்கிய மென்பொருட்கள், மாபெரும் அறிவுப்… Read More »

லினக்ஸ் எனும் இயக்கமுறைமைய பயன்படுத்திகொள்ள முயற்சித்திடுக

ஏதேனுமொரு நபர் லினக்ஸைப் பற்றிய விவரங்களைகூறிடுமாறு நம்மிடம் கேட்கும்போது, அதை பயன்படுத்தி கொள்வதற்கான ஏதேனுமொரு காரணத்தைக் கண்டிப்பாக தனக்கு கூறுமாறு நம்மிடம் அடிக்கடி கோருகின்றார் எனக்கொள்க. இவ்வாறுகாரணங்களை கோராத விதிவிலக்கானவர்களும் ஒருசிலர்உள்ளனர், கண்டிப்பாக. “லினக்ஸ்” என்ற சொல்லினை ஒருபோதும் கேள்விப்படாதவர்கள் கூட இந்த சொல்லின் நேரடி வரையறை யாது என நம்மிடம் கோருகின்றனர். பெரும்பாலான நம்முடைய நண்பர்களும் தோழர்களும் தாங்கள் பயன்படுத்தி கொண்டுவரும் தற்போதைய விண்டோ இயக்க முறைமையில் கொஞ்சம் அதிருப்தி அடைந்துள்ளனர் என தெரியவருகின்றது, இந்நிலையில்… Read More »

தயார்நிலை இயக்கமுறைமை (instant OS)

இன்றைய அவசரமான உலகில் வாழ்வந்து வருகின்ற நாம் தண்ணீருடன் காஃபிஅல்லது தேநீர் துகள்களை கலந்து கொதிக்கவைத்து வடிகட்டிய பின்னர் பால் சர்க்கரை கலந்து காஃபி அல்லது தேநீர் தயார்செய்வதற்கு அதிக கால அவகாசம் எடுத்து கொள்ளும்என்பதால் instant coffe , instant tea என்பவற்றை பாலும் சர்க்கரையும் கலந்து காஃபி அல்லது தேநீரை விரைவாக தயார்செய்து பயன்படுத்தி கொள்வோம் அதேபோன்று ஒரு கணினியில் புதியதாக ஒரு இயக்கமுறைமையை நிறுவுகை செய்து அதனை இயக்கியபின்னர் நாம்விரும்பும் செயல்களை செய்வதற்கு… Read More »