Category Archives: linux softwares

பேராலயமும் சந்தையும் 12. திறந்த மூல மென்பொருளின் சமூக சூழல்

ஒரு முக்கியமான பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்றால் உங்களுக்கு சுவாரசியமான ஒரு பிரச்சினையில் தொடங்கவும் இது என்றுமே பொய்யாகாது: சிறந்த நிரல்கள் படைப்பாளரின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தனிப்பட்ட தீர்வுகளாகத் தொடங்குகின்றன. பின்னர் இந்தப் பிரச்சினை ஒரு பெரிய வகுப்பினருக்குப் பொதுவானதாக இருப்பதால் பரவுகிறது. இது விதி 1 இன் கருத்துக்கு நம்மை மீண்டும் அழைத்துச் செல்கிறது, மிகவும் பயனுள்ள வகையில் இவ்வாறு மாற்றியும் கூறலாம்: மணிமொழி 18. ஒரு முக்கியமான பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமானால், உங்களுக்கு… Read More »

பேராலயமும் சந்தையும் 11. சந்தை பாணிக்கு அவசியமான முன்தேவைகள்

நிரலாளர்கள் ஓட்டிப்பார்த்து சோதிக்கக்கூடிய நிரல் தொடக்கத்திலேயே இருக்க வேண்டும் இந்தக் கட்டுரைக்கான ஆரம்பகால மதிப்பாய்வாளர்கள் மற்றும் சோதனை பார்வையாளர்கள் வெற்றிகரமான சந்தை-பாணி வளர்ச்சிக்கான முன்தேவைகள் குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பினர். இதில் திட்டத் தலைவரின் தகுதிகள் மற்றும் திட்டத்தை வெளியீடு செய்து இணை-நிரலாளர்கள் சமூகத்தை உருவாக்கத் தொடங்கும் போது உள்ள நிரலின் நிலை ஆகியவை அடங்கும். சந்தை பாணியில் அடிப்படையிலிருந்து ஒருவரால் நிரல் எழுத முடியாது என்பது மிகவும் தெளிவாக உள்ளது. சந்தை பாணியில் ஒருவர் சோதனை… Read More »

பேராலயமும் சந்தையும் 10. ஃபெட்ச்மெயில் கற்பித்த மேலும் சில பாடங்கள்

பொதுவான மென்பொருள்-பொறியியல் சிக்கல்களுக்குச் செல்வதற்கு முன், ஃபெட்ச்மெயில் அனுபவத்திலிருந்து இன்னும் சில குறிப்பிட்ட பாடங்கள் உள்ளன. தொழில்நுட்பத்தில் நாட்டமற்ற வாசகர்கள் இப்பகுதியைத் தவிர்க்கலாம். rc (கட்டுப்பாடு) கோப்பின் தொடரியல் (syntax) விருப்பமைவு செய்யக்கூடிய ‘இரைச்சல்’ குறிச்சொற்களை உள்ளடக்கியது. இவை பாகுபடுத்தியால் (parser) முற்றிலும் புறக்கணிக்கப்படும். இவை அனுமதிக்கும் ஆங்கிலம் போன்ற தொடரியல், பாரம்பரிய சுருக்கமான குறிச்சொல்-மதிப்பு இணைகளை (terse keyword-value pairs) விட, பெரும்பாலும் படிக்கக்கூடியதாக உள்ளது. rc கோப்பு அறிவிப்புகள் எந்த அளவு ஒரு குறுமொழியை… Read More »

பேராலயமும் சந்தையும் 9. ஃபெட்ச்மெயில் முதிர்ச்சி அடைகிறது

இப்படியாக ஃபெட்ச்மெயில் நேர்த்தியான மற்றும் புதுமையான வடிவமைப்புடன் மேம்பட்டு வந்தது. நான் தினமும் பயன்படுத்தியதால் எனக்குத் தெரிந்து நிரல் நன்றாக வேலை செய்தது. மேலும் பீட்டா பட்டியல் வளர்ந்து வந்தது. வேறு ஒரு சிலருக்கு மட்டுமே பயன்படக்கூடிய அற்பமான தனிப்பட்ட நிரல் திட்டத்தில் நான் ஈடுபடவில்லை என்பது படிப்படியாக எனக்குப் புரிந்தது. யூனிக்ஸ் கணினி மற்றும் SLIP/PPP அஞ்சல் இணைப்பு கொண்ட ஒவ்வொரு கொந்தருக்கும் உண்மையில் தேவைப்படும் ஒரு நிரலைத்தான் நான் கையில் எடுத்துள்ளேன். SMTP மேலனுப்புதல்… Read More »

பேராலயமும் சந்தையும் 8. பாப்கிளையன்ட் ஃபெட்ச்மெயில் ஆகிறது

SMTP போர்ட்டுக்கு அஞ்சலை அனுப்பும் அம்சம் – ஒரு பயனர் கொடுத்த அற்புதமான யோசனை பயனர் கணினியின் SMTP போர்ட்டுக்கு அஞ்சலை அனுப்புவதற்காக ஹாரி ஹோச்ஹெய்சர் (Harry Hochheiser) தனது துண்டு நிரலை எனக்கு அனுப்பியதுதான் திட்டத்தில் உண்மையான திருப்புமுனையாக அமைந்தது. இந்த அம்சத்தை நம்பகமான முறையில் செயல்படுத்தினால், மற்ற எல்லா அஞ்சல்  கொண்டு சேர்க்கும் முறைகளும் வழக்கற்றுப் போய்விடும் என்பதை நான் உடனடியாக உணர்ந்தேன். பல வாரங்களாக நான் ஃபெட்ச்மெயிலை கொஞ்சம் கொஞ்சமாக மேம்பாடு செய்து… Read More »

பேராலயமும் சந்தையும் 7. ரோஜா எப்போது ரோஜா அல்ல?

லினஸின் செயல்முறையை நுட்பமாக ஆய்வு செய்து, அது ஏன் வெற்றிகரமாக இருந்தது என்பது பற்றிய ஒரு கோட்பாட்டை உருவாக்கினேன். பிறகு, எனது புதிய திட்டத்தில் (லினக்ஸ் அளவுக்குச் சிக்கலானதோ அல்லது பெரிய அளவிலானதோ இல்லை என்றாலும் கூட) இக்கோட்பாட்டைச் சோதிக்கத் தெரிந்தே ஒரு முடிவை எடுத்தேன். நிரலை மையமாகவும், தரவுக் கட்டமைப்புகளை நிரலுக்கு ஆதரவாகவும் கருதினார் ஆனால் நான் செய்த முதல் வேலை, பாப்கிளையன்டை மறுசீரமைத்து எளிமைப்படுத்துவதுதான். கார்ல் ஹாரிஸின் செயலாக்கம் மிகவும் நன்றாக இருந்தது, ஆனால்… Read More »

பேராலயமும் சந்தையும் 6. எத்தனை பேர் கவனம் வைத்தால் சிக்கலை அடக்கியாள முடியும்

வழுத்திருத்தம் மற்றும் நிரல் வளர்ச்சியை சந்தை பாணி பெரிதும் துரிதப்படுத்துகிறது என்பதை மேம்போக்காக கவனிப்பது ஒன்று. தினசரி நிரலாளர் மற்றும் சோதனையாளர் நடத்தையின் நுண்மட்டத்தில் அது எப்படி, ஏன் வேலை செய்கிறது என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்வது மற்றொரு சங்கதி. இக்கட்டுரையில் (முதல் ஆய்வுக் கட்டுரைக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டது. அதைப் படித்து, தங்களின் சொந்த நடத்தையை மறுபரிசீலனை செய்த நிரலாளர்களின் நுண்ணறிவைப் பயன்படுத்தி) உண்மையான இயங்குமுறைகளை நாம் மிகக்கவனமாக ஆராய்வோம். தொழில்நுட்பத்தில் நாட்டமற்ற வாசகர்கள் இதை… Read More »

பேராலயமும் சந்தையும் 5. முன்னதாக வெளியிடுக, அடிக்கடி வெளியிடுக

முன்னதாக வெளியிடுதல் மற்றும் அடிக்கடி வெளியிடுதல் லினக்ஸ் மேம்பாட்டு மாதிரியின் முக்கியமான அங்கமாகும். பெரும்பாலான நிரலாளர்கள் (நானும்தான்) மிகச்சிறியது தவிர மற்ற திட்டங்களுக்கு இது மோசமான கொள்கை என்று நம்பினர். ஏனெனில் தொடக்கப் பதிப்புகளில் வழு நிறைந்திருக்கும். உங்கள் பயனர்களின் பொறுமையை சோதிக்க விரும்ப மாட்டீர்கள். இக்கருத்துதான் பேராலயம்-பாணி வளர்ச்சிக்கான பொதுவான நம்பிக்கையை வலுப்படுத்தியது. பயனர்கள் முடிந்தவரை குறைந்த அளவு வழுக்களைப் பார்ப்பதே முக்கிய நோக்கமாக இருந்தால், நீங்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது அதைவிடக்… Read More »

பேராலயமும் சந்தையும் 4. பயனர்கள் இருப்பதன் முக்கியத்துவம்

பயனர்களைச் சரியாகப் பண்படுத்தினால் அவர்கள் இணை உருவாக்குநர்களாகவும் ஆகலாம் இப்படியாக நான் பாப்கிளையன்ட்டைப் பெற்றேன். அதைவிட முக்கியமாக, நான் பாப்கிளையன்ட்டின் பயனர் அடித்தளத்தைப் பெற்றேன். பயனர்கள் நமக்குத் தேவையான அற்புதமான நபர்கள். நாம் ஓர் உண்மையான தேவைக்குச் சேவை செய்கிறோம், எதையோ சரியாகச் செய்துள்ளோம் என்பதை அவர்கள் நிரூபிப்பதால் மட்டுமல்ல. சரியாகப் பண்படுத்தினால், அவர்கள் இணை உருவாக்குநர்களாகவும் ஆகலாம். யூனிக்ஸ் பாரம்பரியத்தின் மற்றொரு பலம், பல பயனர்கள் கொந்தர்களாகவும் (hackers) உள்ளனர். இதையே லினக்ஸ் நல்ல உச்சநிலைக்குக்… Read More »

பேராலயமும் சந்தையும் 3. அஞ்சல் போய்ச் சேர்ந்தாக வேண்டும்

1993 ஆம் ஆண்டு முதல் பென்சில்வேனியாவின் வெஸ்ட் செஸ்டரில் செஸ்டர் கவுண்டி இண்டர்லிங்க் (CCIL) என்ற சிறிய இலவச இணைய சேவையகத்தின் தொழில்நுட்ப வேலையைச் செய்து வருகிறேன். நான் CCIL இன் நிறுவனர்களில் ஒருவன். எங்களின் தனித்துவமான பல பயனர் அறிக்கைப் பலகை (multiuser bulletin-board) மென்பொருளையும் நானே எழுதினேன். நீங்கள் அதை locke.ccil.org க்கு டெல்நெட் (telnet) செய்து பார்க்கலாம். இன்று இது முப்பது இணைப்புகளில் சுமார் மூவாயிரம் பயனர்களை ஆதரிக்கிறது. இந்த வேலை CCIL… Read More »