Python

பைதானின் requests ,Beautiful Soupஆகியதகவமைவின்(module) மூலம் இணையப்பக்கங்களை பகுப்பாய்வு செய்க

நம்மில் பெரும்பாலானவர்கள் பொழுதுபோக்குவதற்காகவே இணையத்தில் மிக அதிக நேரம் உலாவருகின்றோம். ஆனால் இவ்வாறான இணய உலாவருவதற்கான ஒவ்வொரு செயலையும் நம்முடைய கையால் சொடுக்குதல் செய்வதன் வாயிலாக மட்டுமே இவ்வாறு இணைய உலாவரமுடியும் என்பது ஒரு மோசமான செயல்முறை, அல்லவா? இவ்வாறு இணைய உலாவருவதற்காக ஒரு இணைய உலாவியைத் செயல் படுத்திடவும். குறிப்பி்ட்டதொரு இணையதளத்திற்குச் செல்லவும். தேவையான…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 21 – காத்து வாக்குல ரெண்டு காதல்

மதன், கார்த்திகா இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் மென்பொறியாளர்கள். மதனுக்கு லினக்ஸ் அத்துப்படி! கார்த்திகாவுக்கு மதனைக் காட்டிலும் வேலை அனுபவம் குறைவு! விண்டோசே கதி என்று இருந்த கார்த்திகாவுக்கு லினக்சின் ஒவ்வொரு படியாக மதன் காட்ட, கார்த்திகா, லினக்சில் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தாள். லினக்சைக் காதலித்த மதனுக்கு, லினக்சைக் காதலிக்கத் தொடங்கிய கார்த்திகாவையும் பிடித்துத்…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 20 – நீங்களும் துப்பறியலாம்!

அண்ணன் தம்பிகளான வியன், பாரி இருவரின் வயதை எப்படிக் கண்டுபிடிப்பது? கதையில் நமக்குக் கிடைத்திருக்கும் துப்புகள்[தடயங்கள்] என்னென்ன? 1. வியன் பள்ளிக்கூடம் போகும் சிறுவன். பாரி, இன்னும் பள்ளிக்குப் போகாத மழலை. 2. வியனுக்கும் பாரிக்கும் இடையில் வயது வேறுபாடு ஆறு வயது. 3. இரண்டு பேரின் வயதிற்குமான பொது வகுத்தி வியனின் வயது. இந்தக்…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 19: வியன், பாரி வயதைக் கண்டுபிடித்த அன்வர்

யாழினி, குழலி, நிறைமதி மூவரும் தோசை சாப்பிட்ட கதையைப் பார்த்தோம் அல்லவா? அதில் யார் யார் எத்தனைத் தோசை தின்றார்கள் என்று பார்த்து விடுவோமா? கடைசியில் மீதம் இருந்த தோசை 8. இது நிறைமதி தின்றது போக மீதி வைத்த எண்ணிக்கை. நிறைமதி தின்றது மூன்றில் ஒரு பங்கு. அப்படியானால் இப்போது இருக்கும் எட்டுத் தோசை…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 18 – யார், எத்தனை தோசை சாப்பிட்டார்கள்??

முந்தைய பதிவில் வியனின் அப்பா, அவனுடைய அறிவைப் பார்த்து வியந்தார் என்று சொன்னேன் அல்லவா! அதற்குக் காரணம் இருக்கிறது. முதலில் வியன் என்ன கேட்கிறான்? இன்னும் பத்து நாட்கள் பள்ளிக்கூடம் போக வேண்டும்; ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய் எனப் பத்து நாளும் தாருங்கள் எனக் கேட்கிறான். இப்படிக் கொடுத்தால் கடைசியில் 50 ரூபாய் செலவாகியிருக்கும்….
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 17 – வென்றது வியனா? அப்பாவா?

மன்னரிடம் நெல்மணிகள் கேட்ட கதையில் வென்றது மோகனா? மன்னரா? கண்டுபிடித்து விட்டீர்களா? மோகன் தான் எனக் கண்டுபிடித்திருப்பீர்கள். முதல் சதுரத்திற்கு ஒரு நெல்மணி, இரண்டாவது சதுரத்திற்கு இரண்டு நெல்மணி, மூன்றாவது சதுரத்திற்கு நான்கு நெல்மணி என அறுபத்து நான்குக் கட்டங்களுக்கும் கண்டுபிடித்தால் மொத்தம் 18,446,744,073,709,551,615 நெல்மணிகள் தேவைப்படும். இந்த நெல்மணிகளை எடுத்து வைக்க மட்டுமே மன்னருக்கு…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 16 – மோகனா? மன்னனா? வென்றது யார்?

பயணம் தொடரட்டும், பாதை மலரட்டும் என்றெல்லாம் போன பதிவில் முடித்திருந்தீர்கள். நாங்களும் நீண்ட நாட்களாகக் காத்திருக்கிறோம், நீங்கள் வேறு பயணத்திற்குள் நுழைந்து விட்டீர்களா? ஆளையே காணோமே என்று நண்பர்கள் சிலர் செல்லமாகக் கடிந்து கொண்டார்கள். ஆமாம், உண்மை தான்! கல்வெட்டுப் பயிற்சி ஒன்றைத் தமிழ்நாட்டு அரசின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்தி வருகிறது. அந்தப் பயிற்சிக்குள்…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 15 – while 2

முந்தைய பதிவில் வீட்டுப்பாடம் கொடுத்திருந்தோமே! செய்து விட்டீர்களா? முதல் வீட்டுப்பாடம், முந்தைய பதிவில் பார்த்த நிரலுக்குப் பாய்வுப்படம் வரைவது. முதல் நிரல்: This file contains bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க! 14 – while

இது வரை if elif else பார்த்திருக்கிறோம். இந்தப் பதிவில் while பார்க்கப் போகிறோம். while என்னும் ஆங்கிலச் சொல்லின் பொருள் என்ன? எப்போது என்பது! இதை எதற்கு நிரல் மொழிகளில் பயன்படுத்துகிறார்கள்? ஓர் எடுத்துக்காட்டு சொல்கிறேன் பாருங்களேன். 1 என்று ஐந்து முறை அச்சிட வேண்டும் எப்படி நிரல் எழுதுவது? இந்த நிரல் சரியா…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க! 13 – if elif else

“நீங்கள் மூன்று எண்களில் பெரிய எண்ணைக் கண்டுபிடிக்க ஒரு பாய்படம் வரைந்திருந்தீர்கள். ஆனால், நான் வேறொரு படம் வரைந்திருந்தேன். இந்தப் படம் சரியென எனக்குப் படுகிறது. இதற்குப் பைத்தான் நிரல் எழுத முடியுமா?” என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். உறுதியாக முடியும். பைத்தான் படிக்க வேண்டும் என்னும் அவருடைய முயற்சி பாராட்டுதலுக்குரியது. அவர் வரைந்த பாய்படம்(Flowchart),…
Read more