Tamil

எளிய தமிழில் 3D Printing 16. துரித முன்மாதிரி மற்றும் பெருந்திரள் தனிப்பயனாக்குதல்

3D அச்சிடுதல் முதன்முதலில் துரித முன்மாதிரிக்கான (prototyping) வழிமுறையாகத்தான் உருவாக்கப்பட்டது பாரம்பரிய உட்செலுத்து அச்சு (injection moulding) மூலம் வடிவமைக்கப்பட்ட முன்மாதிரியைத் தயாரிக்க, பல லட்சங்கள் செலவாகும் மற்றும் பல வாரங்கள் எடுக்கும்.  ஒவ்வொரு புதிய மறு செய்கையிலும் வடிவமைப்பை மேம்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்றால் அது ஒருக்காலும் நடைமுறைக்கு ஒத்தே வராது. 3D அச்சிடுதல் தொழில்நுட்பம்…
Read more

பாடப்பொருளாக “எளிய தமிழில் Robotics” நூல்

ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், மயிலாப்பூர், சென்னை சென்னை மயிலாப்பூரில் விவேகானந்தா கல்லூரி வளாகத்தை ஒட்டி உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், சுமார் 650 அனாதை மற்றும் ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி, உணவு மற்றும் தங்குமிடத்துடன் சேவை செய்து வருவது பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதன் செயலாளர் சுவாமி சத்யஞானானந்தா. நடமாடும் எந்திரனியல்…
Read more

எளிய தமிழில் 3D Printing 15. கல்வி மற்றும் பயிற்சியில் 3D அச்சிடல்

இனிவரும் கட்டுரைகளில் முப்பரிமாண அச்சிடல் எம்மாதிரி வேலைகளுக்குப்  பயன்படுகிறது என்பது பற்றி விவரமாகப் பார்ப்போம். பல பள்ளிகள் தங்கள் பாடத்திட்டங்களில் 3D அச்சு முறைகளை இணைத்து வருகின்றன.  கல்விக்கான 3D அச்சின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், விலையுயர்ந்த கருவிகள் தேவையில்லாமல் மாணவர்கள் முன்மாதிரிகளை உருவாக்க முடியும். இதன் மூலம் மாணவர்களை அவர்களின் எதிர்காலத்திற்கு சிறப்பாகத் தயார்படுத்த…
Read more

எளிய தமிழில் 3D Printing 14. பாகத்தை வருடி வரைபடம் தயாரித்தல்

பாகத்தின் வரைபடம் இருந்தால் பொருள் சேர் உற்பத்தி மூலம் நம்மால் அந்த பாகத்தைத் தயாரிக்க முடியும். ஆனால் நம்மிடம் பாகத்தின் வரைபடம் இல்லை, அதற்கு பதிலாக தேய்ந்த அல்லது உடைந்த பாகம் மட்டுமே உள்ளது என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்வது? இம்மாதிரி தருணங்களில் பாகத்தை வருடி வரைபடம் தயாரித்தல் நமக்குக் கை கொடுக்கும். மீள்நோக்குப்…
Read more

எளிய தமிழில் 3D Printing 13. புனைதல் செயல்முறையின் பாவனையாக்கல் (Simulation)

நாம் முதல் முறையாக ஒரு பாகத்தை 3D அச்சு புனைதல் செய்யும் போது வரும் பிரச்சினைகளுக்குத் தகுந்தவாறு வடிவமைப்பையோ அல்லது செயல்முறையையோ மாற்றியமைத்துத் திரும்பவும் புனைவோம். ஆனால் திரும்பத்திரும்ப முயற்சி செய்து பார்த்துப் பிழையை சரி செய்வதில் (trial and error) செலவும் அதிகம் மற்றும் நேரமும் வீணாகும். இம்மாதிரி புனைதல் செய்து செய்து பார்த்துக்கொண்டிராமல்…
Read more

எளிய தமிழில் 3D Printing 12. அச்சடித்த பின் வரும் வேலைகள் (Post-processing)

தாங்கும் பொருட்களை நீக்குதல் (Support Removal) மற்றும் பிசினை சுத்தம் செய்தல் இழையை உருக்கிப் புனைதல் (FDM) முறையில் அச்சு எந்திரத்தின் அடித்தட்டிலிருந்து எடுத்து ஆறியபின் முதலில்  பாகங்களின் தாங்கும் பொருட்களை அகற்றவேண்டும். ஒளித் திண்மமாக்கல் (stereo lithography) முறையில் ஒளி பட்டால் திண்மமாகும் நெகிழி (photopolymers) திரவங்களைப் பயன்படுத்துவோம் என்று பார்த்தோம். ஆகவே இம்முறையில்…
Read more

எளிய தமிழில் 3D Printing 11. அச்சிடுகையில் தாங்கும் பொருட்கள்

உள்கூடான (hollow) பாகங்கள் உற்பத்திக்குத் தாங்கும் பொருட்கள் (Support Substances) இன்றியமையாதவை சிலநேரங்களில் நாம் உள்கூடான பாகங்களை உற்பத்தி செய்ய வேண்டி வரலாம். உருவாக்கும் பாகம் நன்கு இறுகியபின் வலிமையாக இருக்கும். ஆனால் உருக்கிப் புனையும்போது கீழே தாங்கும் பொருட்கள் இல்லையென்றால் வளைந்து உருக்குலைந்து விடும் அல்லவா? இம்மாதிரி பாகங்களை அச்சிடுகையில் தாங்கும் பொருட்கள் அவசியம்…
Read more

எளிய தமிழில் 3D Printing 10. பொருள்சேர் உற்பத்தியா, பொருள்நீக்கு உற்பத்தியா?

சிக்கலான உள் வடிவியல் கொண்ட பாகங்களுக்கு முப்பரிமாண அச்சிடல் இன்றியமையாதது பொருளை அகற்றுவதற்குப் பதிலாக அடுக்குகளை உருவாக்குவதன் மூலம் பொருள்சேர் உற்பத்தி வேலை செய்கிறது. ஆகவே இத்தொழில்நுட்பம் சுழல் காற்றுக்குழல்கள் (spiral vents) மற்றும் உள்ளுக்குள் உள்ளான கூடுகள் (nested hollow cores) போன்ற சிக்கலான உள் வடிவியல் கொண்ட தயாரிப்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. …
Read more

எளிய தமிழில் 3D Printing 9. படிவுத் துகளை உருக்கி இணைத்தல்

சிட்டங்கட்டல் (Sintering) முறையில் துகள்களை முழுவதும் திரவமாக உருக்காமல் நமக்குத் தேவையான வடிவத்தை உருவாக்கலாம் என்று பார்த்தோம். உலோகம் போன்ற துகள்களை படிவம் படிவமாக உருக்கி இணைப்பதன் (Powder bed fusion) மூலமும் உருக்கிப் பீச்சுதல் (Material Jetting) மூலமும் நமக்குத் தேவையான வடிவங்களை உருவாக்கலாம். உலோகங்களை இளக்குவதும், கையாளுவதும் மிகக் கடினமான வேலை வெப்பத்தால்…
Read more

எளிய தமிழில் 3D Printing 8. சீரொளி சிட்டங்கட்டல் (laser sintering)

சிட்டங்கட்டல் என்பது துகள்களை முழுவதும் திரவமாக உருக்காமல் வெப்பம் மற்றும் அழுத்தம் கொடுத்து இறுக்குதல் அல்லது கெட்டித்தல் மூலம் ஒரு திடமான பொருளை உருவாக்கும் செயல்முறை. இது துகள்களை ஒன்றாக இணைத்து ஒரு திடமான பாகத்தை உருவாக்குகிறது. சீரொளி தேர்வு சிட்டங்கட்டல் (selective laser sintering – SLS) மற்றும் நேரடி உலோக சீரொளி சிட்டங்கட்டல்…
Read more