[தினம் ஒரு கட்டளை] POWEROFF இயக்கத்தை நிறுத்து
இரண்டாவது நாளுக்கான கட்டளையாக நாம் பார்க்கவிருப்பது poweroff எனும் கட்டளைதான். POWEROFF – தொடரியல் : hariharan@kaniyam: ~/odoc $ sudo poweroff இந்த கட்டளை இயங்குதளத்தின் இயக்கத்தை நிறுத்த பயன்படும் கட்டளை ஆகும். இந்த கட்டளை இயக்கப்பட்டவுடன் இயங்குதளத்தில் நிகழும் எல்லாவிதமான செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்துகிறது. இவ்வாறு உடனடியாக செயல்பாடுகள் நிறுத்தப்படுவதால் சேமிக்கப்படாமல் இருக்கும் வேலைகள் அனைத்தும் தொலைந்துவிடும். மேலும் இது தற்போது இணைப்பில் உள்ள எல்லா கோப்பு அமைப்புகளின் இயக்கத்தையும் துண்டித்துவிட்டு வன்பொருளின் இயக்கத்தையும்… Read More »