எளிய தமிழில் VR/AR/MR 6. VR அசைவூட்டத்துக்குக் கட்டற்ற திறந்தமூலக் கருவிகள்
முப்பரிமாண அசைவூட்டம் (3D animation) 3D அசைவூட்டம் உருவாக்கும் செயல்முறையை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது மாதிரியமைத்தல் (modelling). முப்பரிமாணப் பொருட்களை அல்லது வடிவங்களை உருவாக்கி ஒரு காட்சியில் (scene) வைக்கிறோம். அடுத்து இடுவெளி (layout) மற்றும் அசைவூட்டம். இது காட்சியில் உருவங்கள் எவ்வாறு நகர்கின்றன மற்றும் திரும்புகின்றன போன்றவற்றைக் குறித்தல். கடைசியாக முழு அசைவூட்டத்தையும் தோற்ற அமைவாக (rendering) வெளியிடுதல். மாதிரியமைத்தலில் பொருட்கள் அல்லது உருவங்களின் வெளிப்பரப்பைக் காட்ட படத்தில் காண்பதுபோல் நாற்கோணக் கண்ணிகளை (quadrilateral… Read More »