Category Archives: VR/AR/MR

எளிய தமிழில் VR/AR/MR 16. AR உருவாக்கும் திறந்தமூலக் கருவிகள்

பார்வைக்கோணத்தைப் பின்தொடர்தல் (viewpoint tracking) மிகை மெய்ம்மையில் ஒரு முக்கியப் பிரச்சனை பார்வைக்கோணத்தைப் பின்தொடர்தல். நாம் நம்முடைய வரவேற்பறையிலுள்ள மேசையின் மேலுள்ள பொருட்களின் நடுவில் ஒரு கோவில் கோபுரத்தின் மெய்நிகர் வடிவத்தை வைத்துவிட்டோம். நாம் இப்போது அந்த மேசையைச் சுற்றிவந்தால் அந்த கோபுரத்தின் வெவ்வேறு பக்கங்கள் தெரியவேண்டுமல்லவா? இதைத்தான் பார்வைக்கோணத்தைப் பின்தொடர்தல் என்று சொல்கிறோம். இதற்கு நம் கருவிகள் வழிசெய்யவேண்டும். AR.js ஸ்டுடியோ எந்த இணைய உலாவியிலும் ஓடக்கூடிய மிகை மெய்ம்மை (AR) உருவாக்கும் எளிய வழி… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 15. விடுநிலைகள் (Degrees of freedom – DoF)

மூழ்கவைக்கும் அனுபவமும் விடுநிலைகளும் மூழ்கவைக்கும் அனுபவத்தை அடைய பார்வைப் புலம் (Field of View – FoV) என்ற கருத்துருவை முன்னர் பார்த்தோம். நாம் நகர்ந்தாலும், திரும்பினாலும் நாம் பார்க்கும் காட்சி அதற்கேற்றாற்போல் நகரவேண்டும் மற்றும் திரும்பவேண்டும். அதாவது பெயர்ச்சிக்கான (translation) இடநிலை பின்தொடர்தல் (positional tracking) மற்றும் சுழற்சிக்கான (rotation) நோக்குநிலை பின்தொடர்தல் (orientation tracking) இரண்டுமே மூழ்கவைக்கும் அனுபவத்தை அடைய அவசியம் தேவை. இவற்றைப் புரிந்துகொள்ள நாம் விடுநிலைகள் என்ற கருத்துருவைப் புரிந்துகொள்ள வேண்டும்.… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 14. மிகை மெய்ம்மை (AR) வகைகள்

குறிப்பி (marker) அடிப்படையிலான மிகை மெய்ம்மை (AR) குறிப்பி அடிப்படையிலான (Marker-based) மிகை மெய்ம்மை அனுபவங்களுக்கு ஒரு தொடக்கல் (triggering) படம் தேவைப்படுகிறது. குறிப்பி என்பது QR குறியீடு போலவேதான், ஆனால் இன்னும் எளிமையாக இருக்கும். இதை ஒருவர் தங்கள் திறன்பேசியைப் பயன்படுத்தி AR செயலியின் மூலம் வருடலாம் (scan). படம் ஒத்திருந்தால் முன்கூட்டியே தயாரித்த AR காணொளி அல்லது அசைவூட்டத்தைக் காட்டலாம். குறிப்பி அடையாளம் காணல் வேலையை சாதனத்திலேயே செய்யலாம். அல்லது இணைய வழியாக மேகக்கணிமைக்கும்… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 13. மிகை மெய்ம்மை (Augmented Reality – AR)

VR இல் நாம் முழுவதும் மெய்நிகர் உலகத்திலேயே சஞ்சரித்தோம். அது கல்விக்கும், பயிற்சிக்கும், உட்புற வடிவமைப்புக்கும் மற்றும் பல வேலைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறதென்று பார்த்தோம். இருப்பினும் நம்மைச் சுற்றியுள்ள மெய்யான உலகை எடுத்து அதன்மேல் தேவையைப் பொருத்து சில மெய்நிகர் உருவங்களையும், வரைபடங்களையும், உரைகளையும் காட்ட இயன்றால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இதுதான் மிகைப்படுத்திய அல்லது மிகை மெய்ம்மை. இது மேலும் பல வேலைகளுக்குப் பயன்படுமல்லவா? போக்கிமான் கோ (Pokemon Go) என்ற… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 12. VR மற்ற சில பயன்பாடுகள்

உற்பத்தி (Manufacturing) வானூர்தியில் இருக்கும் இடத்தைத் திறம்படப் பயன்படுத்த வேண்டும். பயணிகளுக்கும் சௌகரியமாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் இடத்தையும் வீணாக்கக் கூடாது. ஆகவே இருக்கும் தளவமைப்பில் (layout) சிறு மாற்றங்கள் செய்வதும் மிகக் கடினம். இந்த வேலைக்கு VR காட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பயணிகள் இருக்கை தளவமைப்பு தோற்ற மெய்ம்மை (VR) மாதிரியில் (model) தேவையான மாற்றங்களை செய்து பல கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து பார்க்கலாம். மூச்சுக்குழாய் முகவணி (oxygen mask) கீழே தொங்கினால் எட்டிப்… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 11. வீடு பார்க்கவும் உட்புற வடிவமைப்புக்கும் VR

உட்புற வடிவமைப்பைக் (interior design) கற்பனை செய்து பார்ப்பது மிகக் கடினம்  செயற்குறிப்பில் (proposal) கொடுத்துள்ள கட்டடத்தின் நீள அகல வரைபடம் (plan) மற்றும் முகப்புப் படம் (elevation) ஆகியவற்றை வைத்து அதன் அளவுகளை வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியியலாளர்களால் உருவகிக்க முடியும். ஆனால் சாதாரண வாடிக்கையாளர்களுக்குக் கட்டடத்தின் அளவுகளைக் கற்பனை செய்து பார்ப்பதே மிகக்கடினம். மேலும் அறைகலன்கள், திரைச்சீலைகள், சுவர் அலங்காரம் ஆகியவற்றையும் சேர்த்து உருவகிப்பது குழப்பமான வேலையாகிறது. ஆகவே வாக்குறுதி கொடுத்தபடி வேலையை செய்து முடிக்கவில்லை… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 10. கல்வி மற்றும் பயிற்சிக்கு VR

கற்றதைத் தக்கவைக்க (learning retention) மூழ்கவைக்கும் அனுபவங்கள் உதவுகின்றன நீங்கள் சிறுவர்களுக்கு பூகோளப் பாடம் எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உலகப்படம் (Atlas) காட்டிக் கற்பித்தல் ஓரளவுதான் புரியும். எனினும் கோளத்தை (Globe) வைத்து சுழற்றிக் காட்டினால் பூமியின் உருண்டை வடிவம் தெளிவாகப் புரியும் அல்லவா? இதைவிட மேலாக தோற்ற மெய்ம்மையின் (VR) மூழ்க வைக்கும் அனுபவங்கள் (immersive experiences) மூலம் கற்றல் ஆழமாகப் பதிகிறது. மேலும் பயில்வோர் ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துகின்றனர். உள் விவரங்களையும் வெட்டுத்… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 9. நிகழ்பட ஆட்டம் மற்றும் வரைகலைப் பொறிகள்

நிகழ்பட ஆட்டம் மற்றும் வரைகலைப் பொறிகள் (Game and graphics engines) ஏன் தேவை? நீங்கள் ஒரு பின்னணியையும் ஒரு உருவத்தையும் தயார் செய்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த உருவம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது போல் அசைவூட்டம் செய்ய வேண்டும். இந்தப் பொறிகள் நீங்கள் கொடுத்த தரவுகளிலிருந்து கால்கள் மற்றும் கைகளின் அசைவு மற்றும் தலை திரும்புதல் போன்ற படங்களைக் கணக்கிட்டு அவற்றை வரைய உதவுகின்றன.  நாம் முன்னர் பார்த்த ஓபன்ஸ்பேஸ்… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 8. VR தலையணி (headset) வகைகள்

கணினி அல்லது விளையாட்டு முனையம் (gaming console) VR தலையணி கணினி அல்லது விளையாட்டு முனையத்தில் (game console) ஓடும் விளையாட்டு அல்லது செயலிக்கு காட்சி சாதனமாக செயல்படும் கம்பியால் இணைக்கப்பட்ட தோற்ற மெய்ம்மை (VR) தலையணிகள். எல்லா வேலைகளையும் கணினி அல்லது விளையாட்டு முனையம் செய்து விடும். ஆகையால் தலையணி எடை குறைவாக இருக்கும். ஆனால் கம்பியால் இணைத்திருப்பது தொந்தரவாக இருக்கலாம். திறன்பேசி (smartphone) VR தலையணி திறன்பேசியைப்  பொருத்தக்கூடிய வில்லை (lens) வைத்த அட்டைப்பெட்டி… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 7. VR அசைவூட்ட வளங்கள் பதிவிறக்கம்

VR அசைவூட்டங்கள் தயாரிக்க உங்களுக்கு முப்பரிமாண மாதிரிகள் (models), இழையமைப்புகள் (textures) மற்றும் நிழலமைப்புகள் (shaders) போன்ற வளங்கள் தேவை. உங்கள் திட்டத்தையொத்த அசைவூட்டங்களே glTF கோப்பாகக் கிடைத்தாலும் பயனுள்ளதே. இவற்றைத் தங்கள் வேலைகளுக்காகத் தயாரித்த பலர் உரிமக் கட்டுப்பாடுகள் இல்லாமல் இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். தோற்ற மெய்ம்மை (VR) அசைவூட்ட glTF கோப்புகள் நம்முடைய திட்டத்துக்கு அருகாமை அசைவூட்டக் கோப்புகளே திறந்த உரிமங்களில் கிடைத்தால் நம் வேலை எளிதாகக்கூடும்.  glTF கோப்பு வகையை அசைவூட்டத் தொகுப்பிகளில்… Read More »