உங்களுக்கு மாற்ற முடியாத லினக்ஸ் (Immutable distro) விநியோகங்கள் குறித்து தெரியுமா?

ஆங்கிலத்தில் IMMUTABLE எனும் வார்த்தைக்கு மாற்ற முடியாதது என்று பொருளாகும். எந்த ஒரு பொருள் மாற்றம் இன்றி இருக்கிறதோ அதுவே IMMUTABLE என்று பொதுவாக அறியப்படுகிறது.

இதே அர்த்தத்தை தாங்கி வரக்கூடியது தான்! மாற்ற முடியாத லினெக்ஸ்( immutable distros) விநியோகங்கள்.

லினக்ஸ் இயங்குதளத்தின் பொதுவான விநியோகங்களை(Standard release) நம்மால் மாற்றி அமைக்க(Modification) முடியும்.

ஆனால் மாற்ற முடியாத  விநியோகங்களால்(Immutable distros) என்ன பலன் இருக்கிறது? அதில் விளைந்திருக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதை பற்றி தான், இந்த கட்டுரை விரிவாக அலசுகிறது.

IMMUTABLE DISTRO என்றால் என்ன?

அமைப்பு அடிப்படையிலான மாறுதல்களை(system level modifications), மேற்கொள்ள முடியாத லினக்ஸ் விநியோகங்களே இப்பெயரை(Immutable distro)தாங்கி வருகின்றன.

உங்களால் தரவுகளை சேமிக்கவும், நீக்கவும் முடியும். ஆனால் செயலாக்க அடிப்படையிலான(system files) கோப்புகளை உங்களால் மாற்றி அமைக்க முடியாது. ஒருவேளை அவ்வாறு நீங்கள் மாற்றி அமைத்தாலும் கூட, அவை தற்காலிகமானது தான்.

உங்கள் கணினியை மீள் தொடக்கம்(reboot)  செய்யும்போது, அந்த மாற்றங்கள் அனைத்தும்  தானாக மறைந்து விடும்.

நிறைய பேர் immutable distro களை சாதாரண லினக்ஸ் வினியோகங்களை(LTS ) காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது, என்று கருதுகிறார்கள்.

உண்மையில் இதுவும் அதே லினக்ஸ் விநியோகம் தான். ஆனால், இதில் மாற்றங்களை மேற்கொள்ள(modifications ) முடியாது என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

முக்கியத்துவம்:-

சாதாரண லினக்ஸ் விநியோகங்களை, சிறப்பு நிலை (sudo level ) கருவிகளைக் கொண்டு மாற்றி அமைக்க முடியும். ஆனால், இவ்வாறு செய்யும் போது பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் immutable distro வை உங்களால் மாற்றி அமைக்க முடியாது. நான் முதலில் சொன்னது போல! அவ்வாறே நீங்கள் செய்தாலும், ஒவ்வொரு மீள்தொடக்கத்தின் போதும், நீங்கள் செய்த மாறுபாடுகள் தானாக கணினியில் இருந்து அகற்றப்பட்டு விடும்.

மேலும், இது ஒரு நிலையான(stable) லினக்ஸ் விநியோகமாக இருக்கும். வழக்கமான பொது விநியோகங்களை(LTS) காட்டிலும் சிறந்ததாகவும் இருக்கும்.

மேலும், இது காட்சி அடிப்படையிலான(image based technique )முறையை பின்பற்றுவதால், நீங்கள் இதை நிறுவும் போது ஏற்கனவே இருந்த  இயங்குதளம் முழுவதுமாக புதிய பதிப்பால் மாற்றி அமைக்கப்படும்.

சிறப்பம்சங்கள்:-

1.இதன் மூலம் உங்களுக்கு மிகவும் நிலையான பாதுகாப்பான இயங்குதளம் கிடைக்கும். மேலும், உங்களுடைய தரவுகள் முன்பு இருந்ததை விடவும் மிகவும் பாதுகாப்பாக பாதுகாக்கப்படும்.

2.நிரந்தரமாக, வைரஸ் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியும்.

3.அப்படியே, உங்களது கணினியில் ஏதேனும் வைரஸ் தாக்குதல்கள் இருப்பின், கணினியை  மீள்தொடக்கம்(reboot) செய்து சரி செய்து விட முடியும்.

4.பாதுகாப்பான மற்றும் நம்பகமான வெளியீடுகள் தொடர்ந்து கிடைக்கும்.

5.உங்களுக்கு தெரியாமல் மாறுதல்களை செய்வது நடக்காத காரியம்.(உங்களாலேயே செய்ய முடியாது)

நீங்கள் இதை பயன்படுத்தி பார்க்க விரும்பினால் vanilla os, nix os போன்ற சிறந்த வெளியீடுகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைத் தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள்.

மேற்படி இந்த கட்டுரையானது itsfoss இணையதளத்தில் அங்குஸ் தாஸ் அவர்களால் எழுதப்பட்டது.

இந்த கட்டுரையை மொழிபெயர்த்து எளிமைப்படுத்தி உங்களுக்காக கணியம் இணையதளத்தில் வெளியிடுகிறேன்.

மேற்படி இந்த கட்டுரை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் தயங்காமல் என்னுடைய மின் மடல் முகவரிக்கு தெரிவிக்கவும் உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.

மொழிபெயர்த்தவர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ ,

இளங்கலை இயற்பியல் மாணவர்,

இளநிலை மொழிபெயர்ப்பாளர் மற்றும் எழுத்தாளர்,

கணியம் அறக்கட்டளை

வலைதளம்

மின்மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com

%d bloggers like this: