நாள் 23: touch
touch : இந்த கட்டளை பெரும்பாலும் ஒரு கோப்பினை உருவாக்க பயன்படுகிறது மேலும் இதே கட்டளையைப் பயன்படுத்தி எற்கனவே இருக்கும் கோப்புகளுக்கு அந்த கோப்பு மாற்றப்பட்ட அல்லது கடைசியாக அணுகப்பட்ட நேரத்தினை மாற்ற இயலும்.
தொடரியல்:
touch filename.extenstion
தெரிவுகள்:
touch -d : இந்த தெரிவுஆனது ஒரு குறிப்பிட்ட நேரத்தை கடைசியாக கோப்பு அணுகப்பட்ட நேரமாகவோ அல்லது கோப்பு கடைசியாக மற்றப்பட்ட நேரமாகவோ இருக்கும்படி மாற்ற வழிசெய்கிறது. நேரம் எப்படிபட்டதாக இருப்பினும் அதாவாது கோப்பு உருவாக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக இருந்தாலும் அல்லது இயங்குதளமே நிறுவப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே இருப்பினும் அந்த நேரத்தினை மாற்றிஅமைக்க கூடியது.
பின்வரும் எடுத்துகாட்டு ஒரு தேதி சரத்தினை கோப்பின் கடைசியாக அணுகப்பட்ட (அ) மாற்றப்பட்ட நேரமாக மாற்றுகிறது.
Syntax: touch -d “2024-01-16 23:54:36” filename
பிறதெரிவுகள்:
இதே போல பிற தெரிவுகளும் உள்ளன அதற்கான எடுத்துகாட்டுகளை அளிக்க போவதில்லை மாற்றாக சிறு குறிப்பினை மட்டும் அளிக்கிறேன் புரிதலுக்காக.
touch -a : அணுகல் நேரத்தை மட்டும் மாற்றுகிறது.
touch -c : கோப்பு உருவாக்கத்தை தவிற்கிறது.
touch -m : கோப்பு மாற்றப்பட்ட நேரத்தினை மாற்றுகிறது.
touch -r : மற்றொறு கோப்பின் மாற்றப்பட்ட நேரத்தினை பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்கிறது.
touch -t : நேரமுத்திரையை பயன்படுத்துகிறது [[CC]YY]MMDDhhmm[.ss]
பின்னூட்டம் அளிக்க தவறாதீர்!
Programmer Life – programmerlife1.wordpress.com