கணியம் அறக்கட்டளை பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, சூன் 2020 மாத அறிக்கை

Report in Tamil Report in English தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். நிகழ்ச்சிகள் விக்கிமூலம் தொடர் தொகுப்பு நிகழ்வு/ Spell4Wiki ஆன்டிராய்டு செயலி… Read More »

எளிய தமிழில் Computer Vision 4. படத்தை எண்களாகப் பதிவு செய்தல்

படத்தை எண்களாகப் பதிவு செய்யும் (Digital image representation) மூன்று அடிப்படை வழிமுறைகளை இப்படத்தில் காணலாம். இடது பக்கம் இருப்பது வண்ணப் படம் (Color image), நடுவில் இருப்பது சாம்பல் அளவீட்டுப் படம் (Grayscale image) மற்றும் வலது பக்கம் இருப்பது கருப்பு வெள்ளை அல்லது இருமப் படம் (Black and white or binary Image). கருப்பு வெள்ளை அல்லது இருமப் படங்கள்  நாம் பொதுவழக்கில் கருப்பு வெள்ளைப் படங்கள் என்று சொல்பவை தொழில்நுட்ப ரீதியாக… Read More »

ரெஸ்குவில்லா(Rescuezilla)

ரெஸ்குவில்லா என்பது ஒரு குறுவட்டில் நேரடியாக இயங்கிடும் திறன்மிக்க வரைகலை இடைமுகத்துடன் கூடிய ஒரு கட்டணமற்ற திறமூலவெற்று உலோக மீட்டெடுப்பு( Bare-metal restore) தீர்வாகும் ,இது மேக், விண்டோஸ், லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது. இது முழு Clonezilla இல்பொருந்தக்கூடிய தன்மையை நோக்கமாகக் கொண்ட ஒருசில மேம்பாடுகளுடன் மீண்டும் செயல்படுத்தக் கூடிய மீட்புக்கான ஒரு முட்கரண்டி ஆகும். இது கணினி மீட்புக்கு மிகவும் எளிதில் பயன்படுத்தக்கூடிய வரைகலைச் சூழலாகும், இதுமுழு கணினி காப்புப்பிரதி, வெற்று… Read More »

எளிய தமிழில் Computer Vision 3. படத்தைப் பதிவு செய்யும் (Image recording) வழிமுறைகள்

தமிழில் வடிவம் மற்றும் உருவம் போன்ற சொற்களை shape க்குப் பரவலாகப் பயன்படுத்துகிறோம். படம் என்ற சொல்லே image க்கு ஒப்பானது. ஆனால் படம் என்றால் ஓவியம் மற்றும் திரைப்படம் என்றும் புரியக்கூடும். ஆகவே பொருள்மயக்கம் வரக்கூடிய இடங்களில் பிம்பம் என்ற சொல்லையும் பயன்படுத்தலாம். படம் என்றால் என்ன? மிக எளிதாகச் சொல்லப்போனால் படம் என்பது முப்பரிமாண உலகத்தை ஒரு குறிப்பிட்ட கணத்தில் இரு பரிமாணங்களில் பதிவு செய்வதுதான். இந்த பதிவைச் செய்வதற்கு பலவிதமான தொழில்நுட்பங்கள் உள்ளன.… Read More »

ஈ கலப்பை மென்பொருளை C++ இலிருந்து Python மொழிக்கு மாற்ற உதவுங்கள்

அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். கடந்த வாரம் நடந்த virtual conference மிகச் சிறப்பான முயற்சி. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ஒருங்கினைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். Opensourceஇல் பங்களிக்க புதிய உத்தவேகத்தை கொடுத்துள்ளது. தற்போதைய இ-கலப்பை மென்பொருள் C++ மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதனை பைத்தான் மொழியில் மாற்றுவதற்கான வேலைகளை சில ஆண்டுகளுக்கு முன்பு பரிசோதனை முயற்சியாக ஆரம்பித்தோம். நன்பர்கள் விஜய்(github.com/gvijaydhanasekaran) மற்றும் மோகன்(github.com/mohanrex) ஆகியவர்களின் சிறப்பான பங்களிப்பினால் பைத்தான் மொழியினாலான core funcionalities… Read More »

தமிழும் ஒருங்குறியும் – இணைய உரையாடல் – ஜீலை 11 மாலை 7.30 – 8.30 IST – இசூம்

வரும் சனிக்கிழமை (11/07/2020) மாலை 7.30 – 8.30 மணிக்கு (இந்திய நேரம்) “தமிழும் ஒருங்குறியும்” என்ற தலைப்பில் ஓர் இணையவழி உரையாடல் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த கால வரலாறும், இற்றைநிலையும், எதிர்காலத்தில் செய்யவேண்டியவைகளும் பற்றி உரையாட எண்ணியுள்ளேன். இப்புலனத்தில் ஆர்வம் உள்ளோர், நேரம் இயன்றால் பங்கு கொள்ளுங்கள். கலந்து கொள்வதற்கான இணைப்பு விவரம் படத்தில் உள்ளது.

விசுவல் ஸ்டூடியோ கோடியம் – கோட் – வேறுபாடு என்ன?

விசுவல் ஸ்டூடியோ கோட்(Visual Studio Code) என்பதன் திறந்த மூல வடிவம் தான் விசுவல் ஸ்டூடியோ கோடியம்(Visual Studio Codium) .  இல்லையே! விசுவல் ஸ்டூடியோ கோட்(VS Code) என்பதே கட்டற்ற மென்பொருள் தானே! என்று யோசிப்பவர்களா நீங்கள்! நானும் உங்களைப் போலத் தான் இன்று வரை நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று ஸ்வேச்சா பயிற்சிப்பட்டறையில் விசுவல் ஸ்டூடியோ கோடியத்தை நிறுவச் சொன்னார்கள். அதென்ன கோடியம்(Codium) என்று தேடும் போது தான் தெரிந்தது – விசுவல் ஸ்டூடியோ கோட்… Read More »

உங்களுக்கு Dark Pattern பற்றித் தெரியுமா? ஸ்வேச்சா – நாள் 7

இன்று காலை VS Codium மென்பொருள் நிறுவல் இருந்தது. VS Codium என்பது VS Code மென்பொருளின் கட்டற்ற வடிவம் என்பதை விரிவாகச் சொன்னார்கள். அதைத் தொடர்ந்து HTML, CSS வகுப்புகளும் நடந்தன. பிற்பகலில் இரஞ்சித் ராஜ் – தரவு, தரவின் முக்கியத்துவம், தரவுகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றிப் பேசினார். இந்திய அரசின் தரவுகளைப் பார்க்க data.gov.in/ போய்ப் பார்க்கலாம் என்று காண்பித்தார். லிங்கிடுஇன் போன்ற தளங்கள் எப்படி நம்முடைய தரவுகளைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள், அதற்கு… Read More »

ஸ்வேச்சா நாள் 6 – கிட்லேப் ஓர் அறிமுகம்

திட்டப்பணி செய்வதற்குப் பதிப்பு மேலாண்மை கருவியின் தேவை என்ன? திட்டப்பணி செய்ய ஒரு குழுவை உருவாக்கிவிட்டோம். பிறகு ஒவ்வொருவரும் திட்டப்பணியில் வேலை செய்யத் தொடங்குவோம் அல்லவா! இவற்றை எல்லாம் எப்படி ஒருங்கிணைப்பது? ஒவ்வொருவரும் தனித்தனி வேலை செய்வதை ஒருங்கிணைப்பதே பெரிய வேலை. சில சமயங்களில் ஒரே வேலையில் (அல்லது ஒரு நிரலில்) பலரும் இணைந்து வேலை செய்ய வேண்டியது வரும் அல்லவா! அதையெல்லாம் ஒருங்கிணைக்கும் ஓரிடம் தான் பதிப்பு மேலாண்மை செயலி(கருவி)யின் வேலை. கோப்புகளில்(நிரல்களில்) உள்ள மாற்றங்களைப்… Read More »

கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு – மாநாட்டுக் குறிப்புகள்

இரண்டு நாட்களாக இயங்கலையில் நேரலையில் களை கட்டியிருந்த கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு இன்று மாலையுடன் இனிதே நிறைவு பெற்றது. மாநாட்டுக் குறிப்புகள்: 1) திறமூலத் தமிழ் நிரல் தொகுப்பில் தொடங்கிய அமர்வுகள், தமிழ் இணையக் கல்விக் கழக அமர்வில் நிறைவடைந்தன. மொத்தம் பதினோரு அமர்வுகள். 2) ஒவ்வோர் அமர்வும் தித்திக்கும் தேனாக இருந்தது. நேரலையில் கவனித்த தமிழ் மக்களுக்குத் திகட்டத் திகட்ட தொழில்நுட்பப் பகிர்வுகள் இருந்தன. 3) தமிழிலேயே நிரல் எழுதும் எழில் பற்றிய அமர்வு,… Read More »