உங்களுக்கு Dark Pattern பற்றித் தெரியுமா? ஸ்வேச்சா – நாள் 7

இன்று காலை VS Codium மென்பொருள் நிறுவல் இருந்தது. VS Codium என்பது VS Code மென்பொருளின் கட்டற்ற வடிவம் என்பதை விரிவாகச் சொன்னார்கள். அதைத் தொடர்ந்து HTML, CSS வகுப்புகளும் நடந்தன. பிற்பகலில் இரஞ்சித் ராஜ் – தரவு, தரவின் முக்கியத்துவம், தரவுகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றிப் பேசினார். இந்திய அரசின் தரவுகளைப் பார்க்க data.gov.in/ போய்ப் பார்க்கலாம் என்று காண்பித்தார். லிங்கிடுஇன் போன்ற தளங்கள் எப்படி நம்முடைய தரவுகளைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள், அதற்கு… Read More »

ஸ்வேச்சா நாள் 6 – கிட்லேப் ஓர் அறிமுகம்

திட்டப்பணி செய்வதற்குப் பதிப்பு மேலாண்மை கருவியின் தேவை என்ன? திட்டப்பணி செய்ய ஒரு குழுவை உருவாக்கிவிட்டோம். பிறகு ஒவ்வொருவரும் திட்டப்பணியில் வேலை செய்யத் தொடங்குவோம் அல்லவா! இவற்றை எல்லாம் எப்படி ஒருங்கிணைப்பது? ஒவ்வொருவரும் தனித்தனி வேலை செய்வதை ஒருங்கிணைப்பதே பெரிய வேலை. சில சமயங்களில் ஒரே வேலையில் (அல்லது ஒரு நிரலில்) பலரும் இணைந்து வேலை செய்ய வேண்டியது வரும் அல்லவா! அதையெல்லாம் ஒருங்கிணைக்கும் ஓரிடம் தான் பதிப்பு மேலாண்மை செயலி(கருவி)யின் வேலை. கோப்புகளில்(நிரல்களில்) உள்ள மாற்றங்களைப்… Read More »

கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு – மாநாட்டுக் குறிப்புகள்

இரண்டு நாட்களாக இயங்கலையில் நேரலையில் களை கட்டியிருந்த கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு இன்று மாலையுடன் இனிதே நிறைவு பெற்றது. மாநாட்டுக் குறிப்புகள்: 1) திறமூலத் தமிழ் நிரல் தொகுப்பில் தொடங்கிய அமர்வுகள், தமிழ் இணையக் கல்விக் கழக அமர்வில் நிறைவடைந்தன. மொத்தம் பதினோரு அமர்வுகள். 2) ஒவ்வோர் அமர்வும் தித்திக்கும் தேனாக இருந்தது. நேரலையில் கவனித்த தமிழ் மக்களுக்குத் திகட்டத் திகட்ட தொழில்நுட்பப் பகிர்வுகள் இருந்தன. 3) தமிழிலேயே நிரல் எழுதும் எழில் பற்றிய அமர்வு,… Read More »

ஸ்வேச்சா நாள் 5: சமூகத்திற்குப் பயன்படும் திட்டப்பணிகள்

இன்று ஸ்வேச்சா பயிற்சிப்பட்டறையின் ஐந்தாவது நாள். நேற்று தனித்தனி அணிகளை உருவாக்கினார்கள். நான் இருப்பது பதினோராவது அணி. அதற்கெனத் தனியே கட்செவி(வாட்சப்) குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. அணி உறுப்பினர்களாகவே தனியாக இணைந்து இந்தக் குழுவை உருவாக்கியிருக்கிறார்கள். காணொளி இயங்கலையில் பிக் புளூபட்டன், விவாதங்களுக்கு discuss.swecha.org, படிப்பதற்கு மூடுல்(moodle) என எல்லாவற்றிலும் கட்டற்ற மென்பொருட்களை எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் செய்து வரும் ஸ்வேச்சா வாட்சப் குழு உருவாக்கச் சொல்லவில்லை. இருந்தாலும் உறுப்பினர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு கட்செவிக் குழுவை… Read More »

தயார்நிலை இயக்கமுறைமை (instant OS)

இன்றைய அவசரமான உலகில் வாழ்வந்து வருகின்ற நாம் தண்ணீருடன் காஃபிஅல்லது தேநீர் துகள்களை கலந்து கொதிக்கவைத்து வடிகட்டிய பின்னர் பால் சர்க்கரை கலந்து காஃபி அல்லது தேநீர் தயார்செய்வதற்கு அதிக கால அவகாசம் எடுத்து கொள்ளும்என்பதால் instant coffe , instant tea என்பவற்றை பாலும் சர்க்கரையும் கலந்து காஃபி அல்லது தேநீரை விரைவாக தயார்செய்து பயன்படுத்தி கொள்வோம் அதேபோன்று ஒரு கணினியில் புதியதாக ஒரு இயக்கமுறைமையை நிறுவுகை செய்து அதனை இயக்கியபின்னர் நாம்விரும்பும் செயல்களை செய்வதற்கு… Read More »

எளிய தமிழில் Computer Vision 2. தொழில்துறையில் முக்கியப் பயன்பாடுகள்

தொழில்துறையில், அதிலும் குறிப்பாக உற்பத்தியில், கணினிப் பார்வைக்கு என்ன முக்கியமான பயன்பாடுகள் உள்ளன என்று பார்ப்போம். கைமுறைத் தொகுப்பு வேலைக்கு உதவுதல் (Aiding Manual Assembly) முன்னேறியுள்ள இன்றைய தொழில்நுட்பத்தின் உதவியால் சில உற்பத்திப் பொருட்கள் தானியங்கியாகத் தொகுக்கப்படுகின்றன. எனினும் பெரும்பாலான பொருட்கள் இன்னும் கைமுறையாகவே தொகுக்கப்படுகின்றன. துல்லியமாகத் தொகுக்க வேண்டிய பொருட்களில் கணினிப் பார்வை பிழைகளைத் தடுக்க உதவும். ஒவ்வொரு செயலுக்கும் பின்னர், தொகுப்பவர் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கு முன்பு, அது சரியாகவும் முழுமையாகவும் மேற்கொள்ளப்பட்டதா… Read More »

கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்ப முதலாவது தமிழ் மாநாடு – ஜீலை 4-5 – மாதிரி காணொளிகள்

சி.ம.இளந்தமிழ் – கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு கி.முத்துராமலிங்கம் – கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு   கலீல் ஜாகீர் – கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு   நீச்சல்காரன் – கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு பரதன் தியாகலிங்கம் – கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு குணசேகரன் கந்தசுவாமி – கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு   நித்யா துரைசாமி – கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு முத்து அண்ணாமலை – கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ்… Read More »

கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்ப முதலாவது தமிழ் மாநாடு – ஜீலை 4-5 – நிகழ்ச்சி நிரல்

மலேசிய உத்தமம், ஓம்தமிழ் ஏற்பாட்டில், கணியம் அறக்கட்டளை, தித்தியான் டிஜிட்டல், மொசில்லா தமிழ் குழுமம், உபுண்டு தமிழ் குழுமம், தமிழ் லிப்ரெஓபிஸ் இணை ஏற்பாட்டில் தமிழில் உலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்ப மாநாடு” இணையம் வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்டிராய்டு, பைதான், மொசில்லா, இணையப் பாதுகாப்பு, கணினி மொழியியல், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, பொருட்களின் கணினி போன்ற தலைப்புகளில் கணிஞர்கள் படைப்பினை வழங்குவர். சில படைப்புகள் பட்டறைகளாக நடத்தப்படும். மாநாட்டு பேராளர் கட்டணம் இலவசம். மின்… Read More »

ஸ்வேச்சா – இணையவழி பயிற்சிப் பட்டறை – நாள் 3

ஸ்வேச்சாவின் ஆறு வார இணையவழி பயிற்சிப் பட்டறை நீங்கள் அறிந்ததே!  (தெரியாதவர்கள் swecha.org போய்ப் பார்க்கலாம்!) இன்று அப்பயிற்சிப் பட்டறையின் மூன்றாவது நாள்.  அதன் குறிப்புகளை உங்களுடன் இங்கே பகிர்கிறேன். முதல் 45 நிமிடங்கள் நேற்றைய லினக்ஸ் மேலாண்மையை மீண்டும் சுருக்கமாகச் செய்து காட்டுவதாக இருந்தது. பிறகு ஹரிசாய்,பவபுத்தி(Bhavabhuthi) இருவரும் மென்பொருள் வாழ்க்கை வட்டம் (SDLC) பற்றி முக்கால் மணிநேரம் சொல்லிக் கொடுத்தார்கள். ஒவ்வொரு மணிநேரத்திற்கும் கால் மணிநேரம் இடைவெளி கொடுத்து ஒருங்கிணைத்திருந்தார்கள். இந்த முறை மிகச்… Read More »

வலைப்பூ(Blog) உருவாக்கலாம் வாங்க!

மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் மன்றத்தின் – ஒரு மணிநேர அறிவியல் தமிழ் இணையவழிக் கருத்தரங்க நிகழ்வு.   ஒரு மணி நேரத்தில் வலைப்பூ(Blog) உருவாக்கம் பற்றிய செயல்முறை வகுப்பு.  வலைப்பூ உருவாக்கித் தமிழில் எப்படித் தட்டச்சிடுவது என்பது பற்றிச் செயல்முறை வகுப்பாக இருக்கும்.  எனவே, பங்கேற்போர் கணினி / மடிக்கணினி மூலம் பங்கேற்பது ஏற்புடையதாக இருக்கும்.  தவிர்க்க இயலாத நிலையில் அலைபேசி மூலம் கலந்து கொள்ளுங்கள். நிகழ்ச்சிக்கான ஜூம்(Zoom) இணைப்பு எண்: 6249776207 கடவுச்சொல்: 133… Read More »