எளிய தமிழில் IoT 20. பழுதடைவதை முன்னறிந்து பராமரித்தல் (Predictive maintenance)

பழுதடைந்தவுடன் பராமரித்தல் (Breakdown Maintenance) தொழிற்சாலைகளில் சிலநேரங்களில் எந்திரங்களின் மின்பொறி (electric motor) அளவுக்கு மேல் சூடாகி எரிந்து போய் விடுவது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதிக செலவு செய்து செப்புக்கம்பியை மீள்சுற்று (rewinding) செய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல. உறுதி கூறிய நேரத்தில் வேலையை முடித்துக் கொடுக்க இயலாமல் வாடிக்கையாளர்களையும் இழக்க நேரலாம். இதைத் தவிர்க்க என்னென்ன வழிகள் உள்ளன என்று பார்க்கலாம். பழுதடைவதைத் தவிர்க்கப் பராமரித்தல் (Preventive Maintenance) கவனமாக மேலாண்மை செய்யும் நிறுவனங்கள்… Read More »

பைத்தான் – இணையவழி, இலவசப் பயிற்சிப் பட்டறை

பயிலகமும் நியூஸ் 18 தமிழ்நாடும் இணைந்து தமிழில் பைத்தான் – இணையவழி, இலவசப் பயிற்சிப் பட்டறையை நடத்தவிருக்கின்றன.  வகுப்புகள் வரும் மே 6ஆம் நாளில் வகுப்புகள் தொடங்குகின்றன.  தினமும் ஒரு மணிநேரமாக (காலை 7.30 இல் இருந்து 8.30) , ஒரு மாதம் இந்த வகுப்புகள் நடக்கவிருக்கின்றன.  வகுப்புகளின் பதிவுகள் – யூடியூப் தளத்தில் பயிலகம் பக்கத்தில் பதிவேற்றப்படும். யார் யார் படிக்கலாம்? பைத்தான் படிக்க விரும்பும் யாரும் படிக்கலாம் நான் ஐடி துறை இல்லை. படிக்கலாமா?… Read More »

Q4OS

Q4OS என்பது ஒரு பாரம்பரிய மேஜைக்கணினி பயனாளர் இடைமுகத்தை வழங்குகின்ற தற்போதைய சூழலில் சமீபத்திய தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட மிகவிரைவான சக்திவாய்ந்த தொரு இயக்க முறைமையாகும். மிகமுக்கியமாக சரிபார்க்கப்பட்ட புதிய வசதி வாய்ப்புகளைகொண்ட பாதுகாப்பு, நம்பகத்தன்மை, நீண்டகால நிலைத்தன்மை பழமைவாத ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் இந்த இயக்க முறைமையானது அதிக கவனம் செலுத்துகின்றது. இது கணினியில் செயல்படும் வேகம் , செயல்படுவதற்கான மிகக் குறைந்த வன்பொருள் தேவை ஆகியவற்றால் மற்ற இயக்கமுறைமைகளிலிருந்து முற்றிலும் இது வேறுபடுகின்றது, புத்தம் புதிய… Read More »

எளிய தமிழில் IoT 19. நிறுவனத்தின் சொத்துக்கள் மேலாண்மை

சொத்துக்களின் பயன்படுத்துதல் (utilization) விழுக்காடு பல நேரங்களில் நிறுவனத்தின் பணியாளர்கள் மரமேடைத்தூக்கி வண்டி (pallet truck) மற்ற உற்பத்தி இயந்திரங்கள் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறுவன உரிமையாளரின் முன்வைப்பார்கள். கைவசம் இருக்கும் ஒப்பந்தங்களைச் செய்து முடிக்க இந்த இயந்திரம் அவசியம் தேவைப்படுகின்றது என்று சொல்வார்கள். ஆனால் ஏற்கனவே இருக்கும் இயந்திரங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்று தெரிந்து கொள்ளாமல் எப்படி மேலும் வாங்குவது? கைக்கருவிகளை யாருக்குக் கொடுத்தோம், எங்கே இருக்கிறது? நாம் சரக்கு மேலாண்மையில் பார்த்ததுபோல… Read More »

தமிழ் IRC – மே 2, 2020 சந்திப்பு – 8-9 PM IST – #tamilirc – irc.freenode.net

தமிழ் IRC – மே 2, 2020 அன்று இந்திய நேரம் மாலை 8 – 9  (8 PM IST) நடைபெறும். கணிணித் தமிழ் தொடர்பான உங்கள் பங்களிப்பு விவரங்கள், புது முயற்சிகள், திட்டங்கள், புது திட்ட வேண்டுகோள்கள் ஆகியன பற்றி உரையாடலாம். அனைவரும் வாருங்கள். webchat.freenode.net/ க்கு இணைய உலாவியில் செல்லுங்கள். Nickname என்பதில் உங்கள் உண்மையான பெயர் அல்லது வலையில் நீங்கள் பயன்படுத்தி வரும் பெயரைத் தாருங்கள். Channels என்பதில் #tamilirc என்று… Read More »

Category: irc

PlantUML எனும் கட்டற்றகருவி

PlantUml என்பது ஒரு எளிய உரை விளக்க மொழியைப் பயன்படுத்தி ஒரு சில UML வரைபடத்தை விரைவாக உருவாக்க அனுமதிக்கின்ற ஒரு திறமூல கருவியாகும். இது எளிய மனிதர்களால் படிக்கக்கூடிய உரை விளக்கத்தை மட்டுமே பயன்படுத்தி UML வரைபடங்களை வரைய உதவுகின்றது. இதில் வரைபடத்தினை வரையும்போது மிககவனமாக இருக்கவேண்டும், ஏனென்றால் சீரற்ற வரைபடங்களை வரைவதிலிருந்து இது நம்மைத் தடுக்காது (எடுத்துக்காட்டாக, இரண்டு இனங்கள் ஒன்றுக்கொன்று மரபுரிமையாகக் கொண்டிருப்பது போன்றவை). எனவே இது ஒரு மாதிரி கருவியை விட… Read More »

eXp OSஎனும் இயக்கமுறைமை ஒரு அறிமுகம்

eXp OS என சுருக்கமாக அழைக்கப்பெறும் செயல்முறையிலான இயக்க முறைமை (eXperimental Operating System) என்பது இணைய வாயிலான நேரடி கல்வி தளமாகும், இது ஒரு சிறிய பல்லடுக்கு நிரலாக்க இயக்க முறைமையாகும் . , இது ஒரு புதிய இளங்கலை கணினி அறிவியல் மாணவனை ஒரு சில மாதங்களில் புதிய இயக்கமுறைமை ஒன்றினை உருவாக்கி செயல்படுத்தி பயிற்சி பெறுவதற்கு அனுமதிக்கிறது, அதாவது இது புதிய இளங்கலை மாணவர்களுக்கு ஒரு இயக்க முறைமைஎவ்வாறு செயல்படுகின்றது என நேரடியாக… Read More »

எளிய தமிழில் IoT 18. சரக்கு மேலாண்மை (Inventory Management)

சரக்கு மேலாண்மையில் IoT யை கொள்முதல் தொடர் (supply chain) மற்றும் இடைவழியில் கண்காணிக்கவும் (transit tracking) பயன்படுத்தலாம். இங்கு நாம் தொழிற்சாலைக்குள் சரக்கு மேலாண்மை எப்படி செய்வதென்று மட்டும் பார்ப்போம். நாம் முந்தைய இரண்டு கட்டுரைகளில் பார்த்ததுபோல பட்டை மற்றும் கட்டக் குறியீடு (Barcode and QR code) மற்றும் வானலை அடையாளம் (RFID) பயன்படுத்தி சரக்கு மேலாண்மை மென்பொருட்களில் உள்ளீடு செய்வதை எளிதாக்கலாம். தொழிற்சாலையில் சரக்கு வகைகள் தொழிற்சாலைக்குள் இருக்கும் சரக்குகள் கீழ்க்கண்ட விதங்களில்… Read More »

யூடியூப் “செயலி”யை மூடிய பிறகும் கேட்பது, விளம்பரம் இல்லாமல் கேட்பது எப்படி?

யூடியூப் தான் இன்றைய நிலையில் இரண்டாவது மிகப் பெரிய தேடுதல் பொறி. சமையலில் தொடங்கி, படம் வரைவது, படம் பார்ப்பது, பாடம் படிப்பது என்று யூடியூபைப் பல காரணங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், யூடியூப் தளத்தைப் பயன்படுத்துவதற்கும் யூடியூப் செயலியை அலைபேசியில் பயன்படுத்துவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. யூடியூப் தளத்தைக் கணினியில் பார்க்கும் போது நாம் வேறு தத்தல்(Tab)களில் வேறு வேலைகள் பார்க்கலாம். யூடியூபைச் சுருக்கி(minimize) வைத்துக் கொள்ளலாம். ஆனால் இதெல்லாம் யூடியூப் செயலியில் செய்யவே முடியாது. யூடியூபைத்… Read More »

விக்கிமூலம் : பழைய தமிழ் புத்தகங்களுக்கு புது வடிவம் – தமிழ் ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

  தற்போது ஊரடங்கு நீடித்துள்ள நிலையில், இந்த ஊரடங்கு காலத்தை எப்படி கழிக்கப் போகிறோம் என்பதே பெரும்பாலானோருக்கு கவலையாக உள்ளது. இந்த ஊரடங்கில் சமூக வலைதளங்கள்/தொலைக்காட்சியில் மூழ்கிக் கிடந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அதுவும் எரிச்சலாகிவிடுகிறது. ஒரு சிலர் இந்த ஊரடங்கை பயனுள்ள வகையில் செலவிட்டாலும், பலருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சரி. என்ன செய்யலாம் ? தங்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளதா ? அப்படி இல்லையென்றாலும் இக்காலகட்டத்தில் புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.… Read More »