Deep Learning – 03 – Placeholders, Tensor board

Placeholders Placeholders என்பவை தரவுகள் வரவிருக்கின்றன எனும் குறிப்பை மட்டும் நமக்கு உணர்த்தப் பயன்படுகின்றன. உண்மையான தரவுகளை session இயங்கிக் கொண்டிருக்கும்போது run-timeல் பெற்றுக்கொள்கின்றன. feed_dict எனும் argument மூலமாக இவை தரவுகளைப் பெற்றுக்கொள்கின்றன. Variables என்பதற்கு ஏதாவதொரு துவக்க மதிப்பு தேவைப்படுகிறது. இதை வைத்துத் தான் பின்னர் இயங்கத் தொடங்கும். ஆனால் placeholdersஇயங்குவதற்கு எந்த ஒரு துவக்க மதிப்பும் தேவையில்லை. session இயங்கிக் கொண்டிருக்கும்போது மதிப்புகளை அளித்தால் போதுமானது. கீழ்க்கண்ட உதாரணத்தில், வெறும் பெயர் மற்றும்… Read More »

SourceTail எனும் கட்டற்ற கட்டணமற்ற கணினிமொழிகளின்மூலக்குறிமுறைவரிகளின் உலாவி

Sourcetrail என்பது ஒரு அனைத்து தளங்களிலும் செயல்படும் ஒரு கட்டற்ற கட்டணமற்ற கணினிமொழிகளின்  மூலக்குறிமுறைவரிகளுக்கான உலாவி பயன்பாட்டுகருவியாகும். இது அறிமுகமில்லாத மூலக் குறிமுறைவரிகளை கூட பயனுள்ள பயன்பாடாக மெருகூட்டிட உதவுகிறது. தற்போது இது சி, சி ++, ஜாவா ,பைதான் போன்ற கணினிமொழிகளின் மூலக் குறிமுறைவரிகளில் நிலையான பகுப்பாய்வைப் பயன்படுத்துகிறது . வரைபட காட்சிப்படுத்தல் ,குறிமுறைவரிகளின் காட்சியை ஊடாடும் வகையில் ஒருங்கிணைக்கும் பயனாளர் இடைமுகத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களை வழிநடத்த அனுமதிக்கிறது. இது ஏறத்தாழ 40% கணினி பயன்பாடுகள்… Read More »

எளிய தமிழில் IoT 1. பொருட்களின் இணையம் (Internet of Things)

நாம் இதுநாள்வரை இணையம் என்று சொல்வது கணினிகளின் இணையத்தைத்தான். நாம் மேசைக்கணினி, மடிக்கணினி, கைக்கணினி மற்றும் திறன்பேசி மூலம் வழங்கிகளைத் (servers) தொடர்பு கொண்டு செய்திகளைப் படிக்கிறோம், காணொளிகளைப் பார்க்கிறோம், மின்னஞ்சல் அனுப்புகிறோம்.  வழங்கிகளும் (Web Servers) உலாவிகளும் (Browsers) கொண்டது இணையம் இவை எல்லாமே கணினிகள்தான். இவை எல்லாமே மின்னிணைப்பில் உட்செருகப் பட்டிருக்கும். அல்லது மடிக்கணினி, கைக்கணினி, திறன்பேசி போன்ற சாதனங்களைப் பயனர்கள் கவனமாக மின்னேற்றி வைத்துக் கொண்டிருப்பார்கள். மேலும் இவை அதிக அளவு தரவு… Read More »

Deep Learning – 02 – TF Constants, Properties, Operators, Variables

TF Constants ஒரு குறிப்பிட்ட நிலையான மதிப்பினைப் பெற்று இயங்குவதற்கு tf.constant() எனும் operatorபயன்படுகிறது. இது string, int, float, bool போன்ற பல்வேறு வகைகளில் தரவுகளைப் பெற்று இயங்கும் தன்மை உடையது. கீழ்க்கண்ட எடுத்துக்காட்டில் இதன் பல்வேறு தரவு வகைகளைக் காணலாம். This file contains hidden or bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file… Read More »

Deep Learning – 01 – TensorFlow

இயந்திர வழிக் கற்றலின் (Machine Learning) ஒரு பகுதியாக நியூரல் நெட்வொர்க்ஸ் என்பது அமையும். அதாவது மனிதனுடைய மூளை எவ்வாறு கற்கிறது என்பதை முன்னோடியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே நியூரல் நெட்வொர்க்ஸ் ஆகும்.முதலில் ஒரு குழந்தை பிறக்கும்போது அதனுடைய மூளைக்கு ஒன்றுமே தெரியாது. சுழியத்திலிருந்து ஆரம்பித்து பின்னர் ஒவ்வொரு விஷயமாகக் கற்கிறது. அதாவது குழந்தையின் மூளையிலுள்ள ஒரு மூளை நரம்பு(நியூரான்) ஒரு புதிய விஷயத்தைக் கற்கிறது. அடுத்ததாக மற்றொரு நரம்பு (மற்றொரு நியூரான்)ஏற்கெனவே கற்றுக் கொண்டுள்ள விஷயத்தோடு சேர்த்து… Read More »

Calculator N+ எனும் கட்டற்ற பயன்பாடு

Calculator N+ என்பது ந ம்முடைய திறன்பேசிக்கான அறிவியல் கணக்கீட்டிற்காக உதவிடும் ஒரு கட்டற்ற பயன்பாடாகும். இந்தஆண்ட்ராய்டு பயன்பாடானது நம்முடைய கைகளில் உள்ள திறன்பேசிவாயிலாக பலவிதமான மேம்பட்ட கணித செயல்பாடுகளை செயல்படுத்திடுகின்றது. பொதுவாக தற்போது நாமனைவரும் பயன்படுத்தி கொண்டுவருகின்ற செல்லிடத்து பேசிகள் ஒவ்வொரு நாளும் மிகவும் சக்திவாய்ந்ததாக உயர்ந்து கொண்டே வருகின்றன, எனவே அவை தொலைதூரத்தில் இல்லாத பெரும்பாலான கணினிகளை வெல்ல முடியும் என்பதில் ஆச்சரியமில்லை. இதன் பொருள் அவற்றில் கிடைக்கும் கருவிகள் ஒவ்வொரு நாளும் அதிக… Read More »

BeeBEEP எனும்கட்டற்ற கட்டணமற்ற அலுவலக செய்தியாளர் ஒரு அறிமுகம்

தனிப்பட்ட செய்திகளை வெளிப்புற சேவையகங்கள் மூலம் அனுப்புவதில் சோர்வடைகிறீர்களா? நம்முடைய நண்பர்களுடன் பல கோப்புகளைப் பகிர வேண்டுமா? நம்முடைய அலுவலகத்திற்கு வெளியேஉள்ள மேககணினி சேவைகளை நம்பவில்லையா? கவலையேபடவேண்டாம் இவையனைத்திற்கும் சரியான தீர்வு BeeBEEPஎன்பதுதான் இந்த BeeBEEP என்பது peer to peerஎனும் பயனாளர்களுக்கு இடையேயான ஒரு பாதுகாப்பான அலுவலக செய்தியாளராகும் .இந்த BeeBEEP செயல்படுவதற்குஎன தனியாக ஒரு சேவையகம் எதுவும் தேவையில்லை. அதாவது இது செயல்படுவதற்காகவென தனியாக சேவையாளர் கணினிஎன்ற ஒன்று எதுவும் இல்லாமலேயே நம்முடைய அலுவலகம்,… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 22. பாகங்களின் பட்டியல் (Bill of Materials)

சரி, பாகங்களை வரைந்து விட்டீர்கள். அவற்றைத் தொகுத்துப் பார்த்து விட்டீர்கள். தொகுத்த பின் இயக்கியும் பார்த்து விட்டீர்கள். பொறியியல் பகுப்பாய்வு செய்தாகிவிட்டது. அடுத்து தயாரிப்பைத் தொடங்க வேண்டும் அல்லவா? ஆகவே, வடிவமைப்பு மற்றும் வளராக்கத் துறையிலிருந்து (design and development department) உற்பத்தித் துறைக்கு (production department) இந்தத் தயாரிப்பை வெளியீடும் செய்து விட்டீர்கள். பாகங்களின் பட்டியலை எடுத்து உற்பத்தித் துறையினர் எந்தெந்த பாகங்களைத் தங்கள் தொழிற்சாலையிலேயே தயார் செய்வது மற்றும் எந்தெந்த பாகங்களை வெளியிலிருந்து வாங்குவது… Read More »

இணையம் (Internet) முடக்கப்படும் போது தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்த வேண்டிய செயலிகள்.

இணையம் (Internet) முடக்கப்படும் போது தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்த வேண்டிய செயலிகள். F-Droid Briar Manyverse Trebleshot மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து செயலிகளும் கட்டற்ற மென்பொருட்களே. இணையம் முடக்கப்படும் போக்கு இந்திய அரசங்கத்தால் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இது வெறும் கூற்று அல்ல என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆயினும் ஆதாரங்களுக்கு இங்கே செல்லவும். சரி மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு செயலிகள் குறித்து பார்ப்போம். 1. F-Droid ஒட்டுமொத்தமாக இணையத்தை முடக்குவது அல்லது குறிப்பிட்ட சில… Read More »

FSFTN-ன் திண்டுக்கல் FOSS குழுவின் சார்பாக GNU/Linux Install Fest

அனைவருக்கும் வணக்கம், இந்த ஞாயிறு நமது FSFTN-ன் திண்டுக்கல் FOSS குழுவின் சார்பாக GNU/Linux Instal Fest நடைபெறவுள்ளது. நிகழ்விற்க்கு வரும் அனைவருக்கும் GNU/Linux நிறுவுவது எப்படி மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி விளக்கப்படும். இந்த நிகழ்வில் பல்வேறு வகையான GNU/Linux Distro-கள் அனைவருக்கும் பகிரப்படும். நவம்பர் மாதம் துவக்கப்பட்ட திண்டுக்கல் FOSS குழுவில் இதுவே முதல் நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வை நடத்துவதற்க்கு திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அரசு ஊழியர்கள் சங்கம் நமது… Read More »