Build your own lisp using C – part 1

அசல் புத்தக இணைப்பு: buildyourownlisp.com/ மொழிபெயர்த்தது தங்க அய்யனார் அத்தியாயம் 1 – அறிமுகம் புத்தகத்தை பற்றி இந்தப் புத்தகத்தில் நீங்கள் சி(C) நிரலாக்க மொழியைக்(Programming language) கற்றுக்கொள்வீர்கள், அதே நேரத்தில் ~உங்கள் சொந்த நிரலாக்க மொழி~, சிறிய லிஸ்ப்(LISP), 1000 வரிகளுக்குக் கீழ் எவ்வாறு உருவாக்குவது என்பதை அறிந்து கொள்வீர்கள்!ஆரம்பத்தில் சிலவற்றைச் செய்ய நாம் ஒரு நூலகத்தைப்(library) பயன்படுத்துவோம், எனவே வரி எண்ணிக்கையில் நான் கொஞ்சம் ஏமாற்றுகிறேன், ஆனால் மீதமுள்ள நிரல் முற்றிலும் அசலாக இருக்கும்,… Read More »

தமிழ் 99 விசைப்பொறியை மொபைல் ஃபோனிலும் பயன்படுத்தலாம்!

F droid ஆப் ஸ்டோரில் காணப்படக்கூடிய செயலிகள் குறித்து பார்க்க வருகிறோம். தமிழ் 99 விசை பொறி தொடர்பாக, முன்பு ஒரு கட்டுரையில் விவாதித்து இருந்தோம். அந்தக் கட்டுரையையும் பார்வையிடவும் F droid ஆப் ஸ்டோரில் காணப்படக்கூடிய indic keyboard எனும் செயலியை பயன்படுத்தி, உங்களால் தமிழ் 99 விசைபொறியை மொபைல் போனில் பயன்படுத்த முடியும். அதையும் கடந்து, மொபைல் ஃபோன்களுக்கான ஒரு கட்டற்ற,திறந்த நிலை விசைப்பொறியை நம்மில் பலரும் தேடிக் கொண்டிருப்போம். ஆனால் ப்ளே ஸ்டோரில்… Read More »

நமக்கு இந்த ஆறு முக்கிய வேறுபாடுகள் மட்டும் தெரிந்தால் போதும் விண்டோவிற்கு பதிலாக லினக்ஸைப் பயன்படுத்துவது எளிதாகும்

எந்தவொரு இயக்க முறைமையையும் புதியதாக பயன்படுத்திட துவங்குவது என்றால் நமக்கு அதிகபயமாகவும் வெறுப்பாகவும் இருக்கும், ஏனென்றால் புதிய சூழலில் செயலிகளும், பயன்பாடுகளும் நாம் இதுவரை பழகிய விதத்தில் செயல்படா. அவ்வாறான நிலையில் விண்டோவிலிருந்து லினக்ஸிற்கு மாறவிரும்புவோர் விண்டோவிற்கும் லினக்ஸுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளைக் கற்றுக்கொள்வது அவ்வாறான வெறுப்பை விருப்பமாக மாற்றிவிடும். பொதுவாக நாம் புதியதான ஒரு பகுதிக்கு செல்லும் போது, ​​தண்ணீரிலிருந்து தரையில் வீசிய மீன் போன்று மிகவும் போராட்டமாக இருக்குமோ என்ற கவலை எழுவது இயல்புதான். அவ்வாறு… Read More »

கட்டற்ற ஆண்ட்ராய்டு கணிப்பான்

ஆண்ட்ராய்டு கருவிகளுக்கான, கணிப்பான்(calculator) செயலிகளை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். தற்காலத்தில், பிரத்தியேகமாக கணிப்பான்களை வாங்கும் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது. ஓரளவுக்கு கல்லூரி மாணவர்கள், வயதானவர்கள் மற்றும் சில கடைகளில் மட்டுமே கணிப்பான்களை பார்க்க முடிகிறது. பெரும்பாலானவர்கள், மொபைல் ஃபோன்களில் இருக்கக்கூடிய கணிப்பான்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால், உங்களுக்கு மொபைல் போன்களில் இயல்பாக இருக்கக்கூடிய கணிப்பான்கள் அவ்வளவு சிறப்பாக பணியாற்றுவதில்லை. நீங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து வேறு கணிப்பான்களை நிறுவினாலும்! அதில் நிமிடத்திற்கு நிமிடம் விளம்பரங்களை பார்க்க வேண்டிய… Read More »

Piezo electric(அழுத்த மின்)விளைவு என்றால் என்ன? |எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 13

எளிய எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான பல கட்டுரைகளை பார்த்து வருகிறோம். நாம் அனுதினமும் கடந்து வரக்கூடிய ஒரு மிக முக்கியமான விளைவு தான்; இந்த பிசோ எலக்ட்ரிக் விளைவு. இது குறித்து நம்மில் பல அறிந்திருப்பதில்லை. இதுகுறித்து விரிவாக பார்ப்பதற்கு முன்பாக, என்னுடைய பிறை எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை பார்வையிட, கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி கொள்ளவும். kaniyam.com/category/basic-electronics/ பிசோ எலக்ட்ரிக் விளைவு தமிழில் அழுத்தமின் விளைவு என அறியப்படுகிறது. ஒரு பொருளின் மீது குறிப்பிட்ட அழுத்தத்தை வழங்கும்போது, அதிலிருந்து… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 19. மின்னூர்திப் பாதுகாப்பு

மின்கலத்திலும் மின்சார அமைப்பிலும் அதிக மின்னழுத்தமும் மின்னோட்டமும் இருப்பதன் காரணமாக மின்னூர்திகளுக்கு மின்சாரப் பாதுகாப்பு ஒரு முக்கியப் பிரச்சினையாக உள்ளது.  AIS 156 சான்றிதழ் AIS 156 என்பது இந்தியத் தானுந்து ஆராய்ச்சிக் கழகம் (ARAI) வழங்கும் சான்றிதழாகும், இது இந்தியாவில் இலகுரக மின்னூர்திகளுக்கான (light electric vehicles) பாதுகாப்புத் தரநிலை ஆகும். இந்தியாவில் விற்கப்படும் அனைத்து இலகுரக மின்னூர்திகளுக்கும் AIS 156 சான்றிதழைப் பெறுவது கட்டாயம். ஏனெனில் இது வளர்ந்து வரும் மின்னூர்தி சந்தையின் பாதுகாப்பையும்… Read More »

காரைக்குடியில் கணியம் அறக்கட்டளை மற்றும் நுட்பகம் திறப்பு விழா நிகழ்வு

கணியம் அறக்கட்டளையின் காரைக்குடி கிளை திறப்பு விழா நிகழ்வு செப்டம்பர் 22, 2024 ஞாயிறு அன்று நடைபெற இருக்கிறது. இதனுடன் ‘நுட்பகம்’ என்ற சமுதாயக் கூடம் ஒன்றையும் ஆரம்பிக்க இருக்கின்றோம். இந்த நிகழ்வில் மென்பொருள் சுதந்திர தினமும் கொண்டாடப்பட இருக்கிறது. இது காரைக்குடியில் நிகழும் முதல் மென்பொருள் சுதந்திர தினம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்விற்கு Open Street Map பங்களிப்பாளர்கள் பலர் வருவதால் செப்டம்பர் 21, 2024 சனி அன்று படமிடல் நிகழ்வு (Mapping Party) ஒன்றையும்… Read More »

F-droid என்றால் என்ன?

திறந்தநிலை பயன்பாடுகள் தொடர்பாக நான் கட்டுரைகள் எழுத ஆரம்பித்ததில் இருந்து, மிகவும் கவனித்த ஒரு விஷயம்! பொதுவாக கணிணிகளில் இயங்கக்கூடிய, திறந்த நிலை பயன்பாடுகள் குறித்து பெரும்பாலும் கட்டுரைகளை பார்க்க முடியும். ஆனால், உண்மையில் நாம் மொபைல் போன்களில் பெரும்பாலும் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கூட ஒரு திறந்த நிலை தொழில்நுட்பம் தான். அதனால்தான், உலகம் எங்கும் இருக்கக்கூடிய எந்த ஒரு மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமும், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்த முடியும். அதற்காக, அந்த நிறுவனங்கள்… Read More »