எளிய தமிழில் Electric Vehicles 21. இரு சக்கர மின்னூர்திகள்

மின்சாரத்தில் ஓடும் மிதிவண்டிகள் (bicycles), சிறுவர்களுக்கான உதைக்கும் ஸ்கூட்டர்கள் (kick scooters) போன்ற இலகுரக இரு சக்கர ஊர்திகள் பல பத்தாண்டுகளாக சந்தையில் உள்ளன. அடுத்து தற்போது சந்தையில் புதிய போக்கு என்னவென்றால் மின்சார ஸ்கூட்டர்கள் மின்சாரக் கார்களை விட அதிவேகமாக விற்பனை ஆகின்றன. வளரும் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யப் புதிய மாதிரிகளும் புதிய நிறுவனங்களும் பல சந்தையில் வந்துள்ளன. மின் ஸ்கூட்டர் மோட்டார்கள் சில குறைந்த திறன் கொண்ட ஸ்கூட்டர்களும், மோபெட்களும் சக்கரத்திலேயே மோட்டார்… Read More »

Build your own lisp using C – part 2

அத்தியாயம் 2 – நிறுவுதல் (Installation)   அசல் புத்தக இணைப்பு: buildyourownlisp.com/ மொழிபெயர்த்தது தங்க அய்யனார் அமைப்பு சி இல் நிரலாக்கத்தை தொடங்குவதற்கு முன், நாம் ஒரு சில விஷயங்களை நிறுவ வேண்டும்,மற்றும் நமது பணிச்சூழல்(environment) அமைக்க வேண்டும் அதனால் நமக்கு தேவையான அனைத்தும் பூர்த்தியாகிவிடும். முக்கியமாக நாம் இரண்டு விஷயங்களை நிறுவ வேண்டும். ஒன்று உரைத்தொகுப்பி (Text editor) மற்றொன்று நிரல்மொழிமாற்றி(Compiler) உரைத்தொகுப்பி (Text Editor) உரை திருத்தி என்பது நிரலாக்கத்திற்கு ஏற்ற வகையில்… Read More »

விக்கி மாரத்தான்-2024

கட்டற்ற தரவு களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியா தளத்தில், தமிழ் கட்டுரைகளை நிறைக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட நாளில் அதிகப்படியான கட்டுரைகளை எழுதக்கூடிய மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளக்கூடிய!  விக்கிபீடியா மாரத்தான் நிகழ்வுகள் ஒவ்வொரு நாடுகளிலும் நடத்தப்படுகிறது. தமிழ் மொழிக்கான விக்கி மாரத்தான் 2024 நிகழ்வானது,அக்டோபர் 13 2024 அன்று தொடங்குகிறது. அன்று காலை 6:00 மணியிலிருந்து, அடுத்த நாள் காலை 6 மணி வரை சரியாக 24 மணி நேரம்… Read More »

வாராந்திர செய்திகள் (Weekly News) – 2024-09-29 | Tamil

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள். Thanga Ayyanar’s News – www.swift.org/blog/adwaita-swift/kaniyam.com/build-your-own-lisp-using-c-chp1/www.phoronix.com/news/Linux-6.9-RAM-HugeTLB-Boot-Fastwww.gamingonlinux.com/2024/09/frog-protocols-announced-to-try-and-speed-up-wayland-protocol-development/www.gamingonlinux.com/2024/09/valve-appear-to-be-testing-arm64-and-android-support-for-steam-on-linux/ Parameshwar – 9to5linux.com/mpv-0-39-0-released-with-nvidia-rtx-and-intel-vsr-scaling-support9to5linux.com/dxvk-2-4-1-improves-support-for-god-of-war-gta-san-andreas-and-other-games – GNU celebrated another anniversary at 27th Sept – bbs.archlinux.org/viewtopic.php?id=299799 Syed Jafer – www.linuxfoundation.org/press/valkey-8-0 Hariharan –… Read More »

Sim அட்டைகள் எவ்வாறு வேலை செய்கிறது ?  | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 15.

நான் எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை எழுத தொடங்கி, இரண்டு மாதங்கள் ஆகிறது. அந்த வகையில் இது என்னுடைய 15 வது எலக்ட்ரானிக்ஸ் கட்டுரை. கடந்த கட்டுரையில் உள்ளார்ந்த மின்சுற்றுகள் குறித்து பார்த்திருந்தோம். அதுபோன்று என்னுடைய பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை பார்வையிட கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். இன்றைக்கு நாம் பார்க்க இருக்கக்கூடிய தலைப்பு சிம் கார்டுகள். சிம் கார்டுகளுக்கும் எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்திற்கும் அப்படி என்ன சம்பந்தம் இருக்கு போகிறது? என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். அடிப்படையில், சிம்… Read More »

செநு(AI) பயன்பாடுகளை உருவாக்க ஜாவாஸ்கிரிப்ட் நமக்கு உதவுமா?

சில மாதங்களுக்கு முன்பு, DeepLearning.AI இன் நிறுவனர் Andrew Ngஎன்பவர் , LangChAIn.js உடன் இணைந்து LLM பயன்பாடுகளை உருவாக்குவதற்கான ஒரு பாடத்திட்டத்தை கொண்டு வந்தார். இது LLM இல் சூழல்–விழிப்புணர்வு பயன் பாடுகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தியது, மேலும் இணைய அபிவிருத்தி சந்தையை ஆளும் திறன்மிக்க ஒருநிரலாக்க மொழி செநு(AI) பயன்பாடுகளை உருவாக்குகின்ற திறனையும் எவ்வாறு கொண்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியது. சில வாரங்களுக்கு முன்பு, இரண்டு மூத்த மேம்படுத்துநர்களான, தேஜஸ் குமார் , கெவின்… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 20. சறுக்குப்பலகை அடித்தளம்

தற்போது சந்தையிலுள்ள பெரும்பாலான மின்னூர்திகள் பெட்ரோல் டீசல் ஊர்தி மாதிரியை (model) அடிப்படையாகக் கொண்டவை. பெரும்பாலான மாதிரிகளை நீங்கள் பெட்ரோல் டீசல் ஊர்தியாகவோ அல்லது மின்னூர்தியாகவோ வாங்கலாம். ஆகவே இவற்றில் பெட்ரோல் டீசல் ஊர்தியின் அடிச்சட்டகத்தையே (chassis) எடுத்து அதற்குள் மின்கலம், மோட்டார், திறன் மின்னணு சாதனங்களை எங்கு வைப்பது என்று ஓரளவு தக்கவாறு அமைத்து வடிவமைப்பு செய்கிறார்கள். ஆகவே இவற்றை இருப்பதை வைத்து சமாளித்த வடிவமைப்பு என்றுதான் சொல்லமுடியும். மின்னூர்திகளுக்காகவே உருவாக்கிய ஆகச்சிறந்த வடிவமைப்பு என்று… Read More »

உள்ளார்ந்த மின் சுற்றுகள்(IC) என்றால் என்ன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 14

நம்முடைய பெரும்பாலான எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளில் மின்தடைகள்,மின் தேக்கிகள், டையோடுகள்,ட்ரான்சிஸ்டர்கள் உட்பட பலவிதமான எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்து பார்த்திருக்கிறோம். என்னுடைய பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்க: kaniyam.com/category/basic-electronics/ இத்தகைய எலக்ட்ரானிக் பொருட்களை, வெறும் ஒரு சிறிய எலக்ட்ரானிக்ஸ் சாதனத்திற்குள் அடக்கி விட முடியுமா? என்று கேட்டால் மிகவும் கடினமான ஒன்றுதான் என்று உங்களுக்கு தோன்றலாம். உதாரணமாக, உங்களுடைய மொபைல் ஃபோன்களிலும் மின்தேக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரம், நமது வீட்டில் பயன்படுத்தக்கூடிய மின்விசிறிகளில் கூட மின்தேக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதே அளவில்… Read More »

திறந்த நிலை, கட்டற்ற தொழில்நுட்பங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல்!

தற்காலத்தில் பெரும்பாலும் கட்டற்றத் தரவுகள் குறித்து, பெரும்பாலான பொதுஜன மக்களுக்கு தெரிந்திருப்பதில்லை. அவ்வாறே தெரிந்திருந்தாலும், அது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. துறைசார் அறிவு கொண்ட வல்லுநர்கள் மட்டுமே கட்டற்ற தொழில்நுட்பங்களை சரியாக பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, பல கனவுகளோடு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உருவாக்கப்படும் இத்தகைய கட்டற்ற படைப்புகள் சில மாதங்களிலேயே பராமரிப்பு இன்றி போகின்றன. மேற்கொண்டு அவற்றை பராமரித்து முறையான புதிய வெளியீடுகளை வழங்க, போதியமான நிதி இருப்பதில்லை. இந்த வாரம் நான் its… Read More »