தமிழ் 99 விசைப்பொறி

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட, தமிழில் தட்டச்சு செய்வதற்கான கணினி விசைப்பொறி வடிவம் தான் தமிழ் 99 கணினி விசைப்பொறி. முன்பு, தமிழக அரசாங்கத்தால் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளில், தமிழ் 99 விசைப்பொறி பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்காலத்தில் வெளியாக கூடிய எந்த ஒரு கணிப்பொறியிலோ, மடிக்கணினியிலோ தமிழ் 99 விசைப்பொறி வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக, தற்கால மாணவர்களுக்கு தமிழ் 99 விசைப்பொறி குறித்து அடிப்படை தகவல்கள் தெரிந்திருப்பதில்லை. அடிப்படையில், நாம் ஆரம்பக் கல்வியில் பயின்று தமிழ்… Read More »

மின் தூண்டிகள் என்றால் என்ன ? அவை குறித்த அடிப்படை தகவல்கள் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 10

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் தொடர்ந்து டையோடுகள் குறித்து பல கட்டுரைகளில் விவாதித்து இருந்தோம். இன்றைக்கு நாம் விவாதிக்க இருக்கக்கூடிய தலைப்பு மின் தூண்டிகள்(inductors). நீங்கள் என்னுடைய, இதற்கு முந்தைய எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்கவில்லை என்றால்! கீழே வழங்கப்பட்டிருக்கும் பட்டனை பயன்படுத்தி பழைய கட்டுரைகளையும் பார்வையிடுங்கள். அடிப்படையில் சில சென்டிமீட்டர் அளவில் ஆன வயரை, சுருள் போன்ற அமைப்பில் சுற்றி வைத்து இருப்பது போல காட்சி அளிக்கும் இதுதான் மின் தூண்டிகள். பொதுவாக தாமிர கம்பிகளை, இரும்பு… Read More »

இணையபயன்பாடுகளை உருவாக்குவதற்கும் மேம்படுத்துதலுக்கும் ஜாவாஸ்கிரிப்ட் , டைப்ஸ்கிரிப்ட் இவ்விரண்டில் எதனைத் தேர்ந்தெடுப்பது?

இந்த கட்டுரையில், டைப்ஸ்கிரிப்ட் , ஜாவாஸ்கிரிப்ட் ஆகியஇரண்டின் வசதி வாய்ப்புகள், நன்மைகள் , தீமைகள் ஆகியவற்றினை நாம் விவாதிக்க விருக்கின்றோம், இதன் மூலம் புத்திசாலித்தனமாக இவ்விரண்டில் சிறந்தவொன்றைதேர்வு செய்யலாம். தற்போதைய சுறுசுறுப்புடன்,இணைய மேம்பாட்டிற்கு ஜாவாஸ்கிரிப்ட் அல்லது டைப்ஸ்கிரிப்ட் ஆகியவற்றில் எந்த நிரலாக்க மொழியைப் பயன்படுத்துவது என்பது தற்போது முடிவில்லாத விவாதங்களில் ஒன்றாகும்: . ஜாவாஸ்கிரிப்ட் , டைப்ஸ்கிரிப்ட் ஆகியன பற்றி தெரிந்து கொள்ளுதல் ஜாவாஸ்கிரிப்ட் என்பது பல்வேறு நிரலாக்க வழிகளை ஆதரிக்கின்ற பல்துறை கணினிமொழியாகும். இதன்மூலம் நிகழ்வுகளைக்… Read More »

காஞ்சி லினக்ஸ் கூட்டமைப்பு- வாராந்திர கூட்டம் ( 08/09/2024)

காஞ்சி லினக்ஸ் கூட்டமைப்பின் வாராந்திர கூட்டம், நாளை(செப்டம்பர் 8 2024 அன்று) நடைபெறவிருக்கிறது. இந்திய நேரப்படி, மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை இணையவழியில்  கூட்டம் நடைபெறும். மேற்படி நிகழ்வில் சிறப்பு உரையாக திரு சையது ஜாஃபர் அவர்கள் About: Just another Dev. Write blog post on parottasalna.com  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தவிருக்கிறார்கள். நிகழ்வில், லினக்ஸ் தொடர்பான பல தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், அது… Read More »

திறந்த நிலை மின் மடல் வசதிகளை வழங்கும் புரோட்டான் மின்மடல்

நம்மில் பலரும் கூகுள் நிறுவனத்தின் மின் மடலை(Gmail)பயன்படுத்தி வருகிறோம். சிலர் யாகூ(yahoo )போன்ற, பிற நிறுவனங்களின் மின்மடல் வசதிகளை பயன்படுத்தி வருவீர்கள். Google மின் மடல் தொழில்நுட்பத்தில், அதிகப்படியான விளம்பரங்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் நம்மை அடிக்கடி கவலைக்கு உள்ளாக்குகின்றன. மேலும், சமீப காலத்தில் மின் மடல் மூலமாக உங்களுடைய கணிப்பொறி அல்லது மொபைல் ஃபோன்களுக்கு வைரஸ்கள்(malware) அனுப்பி வைக்கப்படுவதாக தகவல்களும் பரவி வருகின்றன. மேலும், உங்களுடைய முக்கியமான தகவல்கள்(confendial information)இங்கு திருடப்படும் அபாயமும் அதிகமாக உள்ளது.… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 17. வணிக மின்னேற்றிகள்

15 ஆம்பியர் 3-துளை மின் சாக்கெட் பயன்படுத்தும் 3 kW வீட்டு மின்னேற்றி முழு இரவு மின்னேற்றம் செய்யத் தோதானது என்று பார்த்தோம். ஆனால் நாம் வெளியூர் செல்லும்போது வழியில் அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது. ஆகவே மின்னேற்றத்தைத் துரிதப்படுத்த வேறு என்ன வழிகள் உள்ளன என்று பார்ப்போம். காரிலுள்ள மின்னேற்ற சாக்கெட் பெரும்பாலான கார்கள் CCS2 (Combined Charging System 2) என்ற தரநிலைப்படி மின்னேற்ற சாக்கெட் வைத்து வருகின்றன. ஏனெனில் நாம் செல்லுமிடங்களில் மையங்களிலுள்ள… Read More »

ஒளி உமிழ் டையோடுகளும் அவை செயல்படும் விதமும் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 9

எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை எழுத ஆரம்பித்த நாளிலிருந்து, டையோடுகளுக்கும் நமக்கும் நல்ல உடன்பாடு இருக்கிறது போலும்! நான் எப்பொழுது கட்டுரையை எழுத தரவுகளை சேகரித்தாலும், டையோடுகள் எனது கண்களில் இருந்து தவறுவதில்லை. கடந்த ஒரு கட்டுரையில், ஒளி மின் டையோடு(photo diode) குறித்து பார்த்திருந்தோம். அதாவது, வெளியில் இருக்கும் ஒளியின் அளவைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யவல்ல டையோடு தான் ஒளிமின் டையோடு. இவற்றைப் பெரும்பாலும் உணர்விகளில் பயன்படுத்தலாம் என்று நான் குறிப்பிட்டிருந்தேன். அந்த வகையில் நாம் கொடுக்கின்ற… Read More »

இந்த AI ஆல் செயல்படுகின்ற லினக்ஸ் முனைம பயன்பாடானது, கட்டளைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிய உதவுகின்றது

தற்போது லினக்ஸின் சூழலிலும் வரைகலைபயனர்இடைமுகப்புகள்(GUI) அனைத்தும் நன்றாக மாறியிருப்பதால் வேறு எந்தவொரு கட்டளைவரியையும் இயக்காமல் செல்ல முடியும் பொதுவாக இதன்பயனாளர்களில்சிலர் செயல்களை விரைவாகச் செய்ய விரும்பும் போது முனைமத்தில் கட்டளைவரி இடைமுகப்பினை (command line interface (CLI)) சார்ந்து இருப்பார்கள். . தற்போது அனைவரும் வரைகலைபயனர்இடைமுகப்பினை(GUI) பயன்படுத்தி கொள்வதால் கட்டளை வரியை நன்கு அறிந்திருக்கவில்லை, ஆயினும் சிலர் கட்டளைவரியை அதிகமாக பயன்படுத்திகொள்கிறார்கள். ஒரே நேரத்தில் கற்றுக்கொள்வதையும் அதனை தம்முடைய அன்றாட பயன்பாட்டில்செயல்படுத்துவதையும் சாத்தியமாக்குகின்ற பல்வேறு புதிய பயன்பாடுகள்… Read More »

காஞ்சி லினக்ஸ் வாராந்திர கூட்டம் (01/09/2024)

காஞ்சி லினக்ஸ் கூட்டமைப்பின் வாராந்திர கூட்டம் நாளை(செப்டம்பர் 1 2024 அன்று) நடைபெறவிருக்கிறது. இந்திய நேரப்படி, மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை இணையவழியில்  கூட்டம் நடைபெறும். நிகழ்வில், லினக்ஸ் தொடர்பான பல தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், அது தொடர்பாகவும் கேட்டு தெரிந்து கொள்ள முடியும். மேற்படி கூட்டத்தில் பங்கேற்க எவ்வித நுழைவு கட்டணமும் இல்லை. Jitsi ஆண்ட்ராய்டு செயலி அல்லது உங்களிடம் இருக்கும் உலாவி(browser) மூலம், இந்த… Read More »