Python Training in Tamil – session – 1 – Meet & Greet
Python Training in Tamil – session – 1 – Meet & Greet
Python Training in Tamil – session – 1 – Meet & Greet
கட்டற்ற தரவுகளின் களஞ்சியமான, விக்கிபீடியா குறித்து நாம் அனைவருமே அறிந்திருப்போம். நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் இருந்து, விக்கிபீடியாவில் இருந்து தான் என்னுடைய அனைத்து பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளுக்கு தரவுகளை சேகரிப்பேன். ஒரு குறிப்பிட்ட காலம் வரை, பெரும்பாலான விக்கிபீடியா கட்டுரைகள் தமிழில் கிடைப்பதற்கு அரியதாக இருந்தது. ஆனால், அந்த குறைகளை நீக்கும் விதமாக! பல தமிழ் ஆர்வலர்களும் விக்கிபீடியா இணையதளத்தில் களம் புகுந்தனர். அதில் மிகவும் குறிப்பிடத்தக்க சாதனை நாயகர் தான் “திரு.ஸ்ரீ.பாலசுப்பிரமணியன்”.… Read More »
மின்னூர்திகளில் மின்சாரத்தை சேமித்து வைக்க நமக்கு ஒரு செயல்திறன் மிக்க நம்பகமான மின்கலம் தேவை. ஆகவே மின்கலங்கள் எந்த அடிப்படையில் வேலை செய்கின்றன என்று முதலில் பார்ப்போம். மின் வேதியியல் வினை (Electrochemical reaction) மின் வேதியியல் மின்கலம் என்பது வேதிவினைகளிலிருந்து மின் ஆற்றலை உருவாக்கும் ஒரு சாதனம் ஆகும். ஒரு முதன்மை (primary) மின்கலம் மீளமுடியாத வேதிவினைகளால் மின்னோட்டத்தை உருவாக்குகிறது. எ.கா. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் மின்கலங்கள். இவற்றை மீள்மின்னேற்றம் (recharge) செய்ய முடியாது. இரண்டாம்… Read More »
வணக்கம், கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக் கழகத்தின் நிகழ்வு இது. கணினியில் தமிழைப் பயன்படுத்த நீங்கள் சவால்களை எதிர்நோக்குகிறீர்களா? கணினியில் தமிழ் உள்ளடக்கத்தோடு வேலைசெய்தல் (27 July 2024) மெய்நிகர் நிகழ்வில் இது தொடர்பான தேவைகள், பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் பற்றிய நிகழ்த்துகைகளும் (presentations) கலந்துரையாடல்களும் (discussions) இடம்பெறும். கணினியில் தமிழ் உள்ளடக்கத்தோடு வேலைசெய்பவர்களுக்கு இந்த நிகழ்வு பயன்மிக்கதாக அமையும். மேலதிக விபரங்களுக்கு: tamil.digital.utsc.utoronto.ca/ta/kanainaiyaila-tamaila-ulalatakakatataotau-vaelaaicaeyatala-27-july-2024 தயவு செய்து கணியிலும் நுண்பேசியிலும் தமிழைப் பயன்படுத்துவது தொடர்பான பின்வரும் பெயரிலா… Read More »
நம்மில் பலருக்கும், சிறு வயதிலிருந்தே புகைப்படம் எடுக்கும் பழக்கம் இருந்திருக்கும் அல்லது குறைந்தபட்சம் ஸ்டுடியோக்களுக்கு சென்றாவது புகைப்படங்கள் எடுத்து இருப்போம். அந்த புகைப்படங்களை தற்காலத்திற்கு ஏற்ற, உயர்தரத்தில்(HD quality) மெருகேற்ற முடியும். உங்களிடம் எத்தனை வருடங்கள் பழமையான புகைப்படமும் இருக்கட்டும். அதை மெருகேற்ற, எளிமையான வழியை தான் இப்பொழுது பார்க்கவிருக்கிறோம். இது தொடர்பான சில ஆண்ட்ராய்டு செயலிகள் இணைய வெளியில் கிடைத்தாலும், அவை பெரும்பாலும் விளம்பரங்களால் நிரம்பி வழியும் அல்லது அதிகப்படியான தொகையை கொடுத்து, அவற்றை வாங்க… Read More »
சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக, நாம் எடுக்கும் புகைப்படங்களில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினை! அதன் பின்னணியாக(background) தான் இருக்கும். புகைப்படங்களின் நேர்த்தியை, மோசமான பின்னணிகள் குறைத்து விடும். புகைப்படங்களின் பின்னணியை நீக்க, ஆண்ட்ராய்டு செயலிகள் குப்பை போல கொட்டி கிடக்கின்றன. ஆனால், அவற்றின் பெரும்பாலானவை விளம்பரங்களாய் நிரம்பி வழிகின்றன. சிலவற்றிற்கு, அதிகப்படியான தொகையை செலவிட வேண்டி உள்ளது. மேலும், அவை யாவும் திறந்த நிலை(open source) பயன்பாடுகள் அல்ல. ஆனால், இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமைந்திருப்பது தான்!… Read More »
உங்களுடைய கணினியில், பல்வேறுபட்ட திறன்மிகு மொழி மாதிரிகளை(LLM) இயக்கி பார்ப்பதற்கான, ஒரு திறந்த நிலை திட்டம்(OPEN SOURCE PROJECT)தான் “OLLAMA” (ஒல்லமா). நிரல் மொழிகளை இயக்குவதற்காக, CODESTRAL அல்லது Chat gpt போன்ற அனுபவத்தை பெறுவதற்காக,LLaMa 3 போன்ற திறன்மிகு மொழி மாதிரிகளை உங்கள் கணினியில் இயக்குவதற்கு ஒரு சிறந்த வழி தான் OLLAMA(ஒல்லமா). அதை எவ்வாறு செய்வது? எங்கிருந்து தரவிறக்குவது?உள்ளிட்ட அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் விடை அளிக்கிறது இந்த கட்டுரை. ollama என்றால் என்ன? லினக்ஸ்{Linux… Read More »
திறமூலசெநு(OpenAI) ஆனது2022இல் ChatGPT ஐ வெளியிட்ட பிறகு, நாம் வாழும் இவ்வுலகம் புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கண்டுவருகின்றது, மேலும் இவ்வாறான தொழில்நுட்பவளர்ச்சிக்கு முடிவே இல்லை என்றும் தெரிய வருகிறது. AIஇன் Chatbotsஆனவை Google, Microsoft, Meta, Anthropic போன்ற நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வனைத்து சாட்போட்களும் பெரிய மொழி மாதிரிகளின் (LLM) மூலமாகவே இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பெரிய மொழி மாதிரி என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது? என்ற கேள்விகள் நம்மனதில் எழும் நிற்க இதனைப்(LLM)பற்றிய விவரங்களை இந்த… Read More »
கணியம் இணையதள வாசகர்களுக்கு வணக்கம்………………. உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனங்களில், பலவிதமான கோப்பு மேலாளர்களை பயன்படுத்தி இருப்பீர்கள். காலத்திற்கு ஏற்ப கோப்பு மேலாளர்களும் பலகட்ட மாறுதல்களை சந்தித்து இருக்கின்றன. பலரும் ES கோப்பு மேலாளர் (ES FILE MANAGER) ,solid explorer போன்றவற்றை பயன்படுத்தி இருப்பீர்கள். இதற்கு மிக முக்கியமான காரணம், நம்மில் பலருக்கும் கூகுள் நிறுவனம் வழங்கும் கோப்பு மேலாளர் திருப்தி அளிப்பது இல்லை. ஆனால், மேற்கூறிய தனியார் கோப்பு மேலாளர்களில், பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் அதிகப்படியான… Read More »
தூண்டல் மோட்டாரின் (Induction Motor) அம்சங்களையும் தொடியற்ற நேர்மின் மோட்டாரின் (Brushless DC Motors – BLDC) அம்சங்களையும் மாறுமின் நிலைக்காந்த ஒத்தியங்கு மோட்டார் (AC Permanent Magnet Synchronous Motor – PMSM) ஓரளவு கொண்டது. இதன் வடிவமைப்பு தொடியற்ற நேர்மின் மோட்டார் போன்றதே. சுற்றகத்தில் (rotor) நிலைக்காந்தங்களும் நிலையகத்தில் (stator) கம்பிச்சுருள்களும் இருக்கும். ஆனால் இதற்கு மூன்றலை (3 Phase) மாறுமின்சாரம் (AC) கொடுத்து இயக்குகிறோம். ஒத்தியங்கு மோட்டார் என்றால் என்ன? நிலையகத்திலுள்ள கம்பிச்சுருள்களில்… Read More »