ஏற்கனவே மின்தேக்கிகள் மற்றும் மின்தடைகள் குறித்து இரண்டு கட்டுரைகளில் விவாதித்திருந்தேன். அந்தக் கட்டுரைகளை படிக்கவில்லை எனில், இந்த கட்டுரையை படித்துவிட்டு அதையும் பார்வையிடவும். சரி! இன்றைய தலைப்புக்கு வருவோமா? குறை கடத்திகள் அப்படி என்றால் என்ன? ஏன் அவை குறைவாக கடத்த வேண்டும்? என அடுக்கடுக்கான கேள்விகள் உங்களுக்குள் வரலாம். அடிப்படையில் திடப்பொருட்கள் மூன்று வகையில் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகைப்பாடானது, திடப் பொருட்களின் ஆற்றல் மட்ட கோட்பாட்டின்( Band theory of solids) அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. அவையாவன,… Read More »
பலதரப்பட்ட செயலிகளை நிறுவுவதற்கும் , சில நுணுக்கமான செயல்பாடுகளை செய்வதற்கும் உங்களுடைய கணினியின் ubuntu version(வெளியீடு) ஐ அறிந்து கொள்வது அவசியமாகிறது. தொடக்க நிலை பயனாளர்களுக்கு Ubuntu version ஐ அறிந்து கொள்வதில் சிக்கல் நீடிப்பதை காண முடிகிறது. வாருங்கள்! வழிமுறைகள் ஒவ்வொன்றையும், ஒன்றும் பின் ஒன்றாக பார்க்கலாம். முதலாவதாக முனையத்தில்(terminal) கீழ்காணும் கட்டளையை அரங்கேற்றவும். lsb_release -a மேற்படி கட்டளையை முனையத்திற்கு அழைத்த பிறகு கீழ்காணும் வகையிலான வெளியீடை நீங்கள் பெற முடியும். Distributor ID:… Read More »
இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள். [Parameshwar’s News] [Thanga Ayyanar News]
கடந்த கட்டுரையில் மின் தேக்கி குறித்து பார்த்திருந்தோம். அந்த கட்டுரையை தற்போது வரை நீங்கள் படிக்கவில்லை எனில், இந்த கட்டுரை படித்து முடித்துவிட்டு அதையும் பார்வையிடவும். சரி! இன்றைய தலைப்பிற்கு உள்ளாக வருவோம். மின்தடை என்றால் என்ன? பெயரிலேயே இருக்கிறதே! மின்சாரத்தை தடை செய்யக்கூடிய பொருள் என்று பதில் அளித்தால் அது சரிதான். சரி! எத்தகைய பொருட்கள் மின்சாரத்தை தடை செய்யும்? மின்சாரத்தை தடை செய்ய வேண்டும் என்றால் மின்சாரத்தை கடத்தாத பொருட்களை தானே பயன்படுத்த வேண்டும்… Read More »
காஞ்சி லினக்ஸ் கூட்டமைப்பின் வாராந்திர கூட்டம், இன்று (ஆகஸ்ட்4 2024 அன்று) நடைபெறவிருக்கிறது. இந்திய நேரப்படி, மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை இணையவழியில் கூட்டம் நடைபெறும். நிகழ்வில், லினக்ஸ் தொடர்பான பல தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், அது தொடர்பாகவும் கேட்டு தெரிந்து கொள்ள முடியும். மேற்படி கூட்டத்தில் பங்கேற்க எவ்வித நுழைவு கட்டணமும் இல்லை. Jitsi ஆண்ட்ராய்டு செயலி அல்லது உங்களிடம் இருக்கும் உலாவி(browser) மூலம், இந்த… Read More »
A-Frame என்பது WebVR என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற மெய்நிகர் உண்மை அனுபவங்களை உருவாக்குவதற்கான திறமூல இணைய கட்டமைப்பாகும். இந்த A-Frameஇன் மூலம் HTML உடன் WebVR ஐ உருவாக்கலாம் Vive, Rift, Daydream ,போன்ற பலவற்றில் உறுப்பு-கூறின்( entity-component )பணிகளை உருவாக்கலாம். கைபேசி, மேசைக்கணினி, Vive, Rift, போன்ற தளங்களில் நம்மை இயக்குவதற்கு தேவையான 3D , WebVR ஆகியவற்றினைக் கையாள்வதன் மூலம் A-Frame மெய்நிகர் உண்மைநிலையை எளிதாக்குகிறது. இதனை HTML இலிருந்தே பயன்படுத்தலாம் என்பதால், விரும்பும்… Read More »
வழக்கமாக சமிக்ஞைகளையும் (signals) தரவுகளையும் (data) அனுப்பவும் செயல்படுத்தவும் (processing), சேமிக்கவும்தான் நாம் மின்னணுவியல் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். இந்த வேலைகளுக்கு ஆற்றல் (power) அதிகம் தேவையில்லை. கணினிகள், தொலைக்காட்சி, விளையாட்டு முனையங்கள் (game console) ஆகியவற்றின் மின்னோட்டத் தரநிலை (rating) ஒரு ஆம்பியருக்குக் (ampere) குறைவுதான். மின்னூர்திகளில் திறன் மின்னணுவியல் இழுவைக்குப் பெரும்பாலும் மூன்றலை மாறுமின் (3-phase AC) மோட்டார்களைப் பயன்படுத்துகிறோம். மின்கலத்தில் கிடைக்கும் 300 க்கும் அதிகமான வோல்ட் மின்னழுத்த நேர்மின்சாரத்தை (DC) மூன்றலை மாறுமின்சாரமாக… Read More »
கட்டற்ற தரவுகளின் களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியாவில், எண்ணில் அடங்காத தமிழர்களுக்கும் தரவு தரும் அயராத பணியை செய்யும், பல தன்னலமில்லாத மாமனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் மிகவும் குறுகிய காலத்தில், விக்கிபீடியா தளத்தில் 8000 கட்டுரைகள் தொடக்கம் எனும் உயரிய நிலையை அடைந்திருக்கும் சாதனையாளர் தான் “திரு.சத்திரத்தான்“ மேலும், விக்கிப்பீடியா அமைப்பால் நடத்தப்பட்ட பெண்ணியமும் நாட்டுப்புறவியலும் எனும் கட்டுரை எழுதும் போட்டியில் சிறப்பு பரிசையும் பெற்றிருந்தார். அன்னாரை போன்றவர்களால் தான், உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களால்… Read More »
நாம் அனைவருமே புகைப்படங்களை சேமித்து வைக்க, google புகைப்படங்களை(Gphotos) பிரதானமாக பயன்படுத்துகிறோம். மாற்று செயலிகள் குறித்து நாம் யோசித்துக் கொண்டு பார்ப்பதில்லை. ஆனால், கூகுள் புகைப்படங்களோடு ஒப்பிடக்கூடிய, மேலும் அதைவிட சில சிறப்பம்சங்களை உடைய, இரண்டு புகைப்பட செயலிகள் பற்றி தான் இந்தக் கட்டுரையில் விவாதிக்க இருக்கிறோம். இதற்கான தரவுகள் itsfoss இணையதளத்தில் திரு.அங்குஸ்தாஸ் அவர்களால் எழுதப்பட்ட, கட்டுரையிலிருந்து பெறப்பட்டுள்ளது. 1.IMMICH கிட்டதட்ட பார்ப்பதற்கு google புகைப்படங்கள் செயலியை அச்சடித்து வைத்தது போல் தான் இருக்கும், இந்த… Read More »