எளிய தமிழில் Electric Vehicles 2. மின்னூர்தி வகைகள்

மின்கல மின்னூர்திகள் (Battery Electric Vehicles – BEV) இவை முற்றிலும் மின்கலத்தில் ஏற்றப்பட்ட திறன் மூலம் இயங்குபவை. ஊர்தியை ஓட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம் ஒரு பெரிய மின்கலத் தொகுப்பில் சேமிக்கப்படுகிறது, அதை மின் சாக்கெட்டில் செருகி மின்னேற்றம் செய்யலாம். இந்த மின்கலத் தொகுப்பு மின் மோட்டார்களுக்கு காரை இயக்க சக்தியை வழங்குகிறது. இவற்றை முழுமையான மின்னூர்திகள் (All-Electric Vehicles – AEV) என்றும் சொல்கிறார்கள். கலப்பின மின்னூர்திகள் (Hybrid Electric Vehicle – HEV) இவற்றில்… Read More »

உள்நுழைவு செய்பவரின் தகவலை PHP இல் காண்பிக்க வேண்டுமா?

இந்தக் கட்டுரையில், PHPயையும், அதன் பல்வேறு உள்கட்டமைப்பு முறைகளையும் பயன்படுத்தி ஒரு இணைய பக்கத்தில் உள்நுழைவு செய்த பயனாளரின் தகவலைக் காண்பிப்பது எவ்வாறு என்பதை அறிந்துகொள்வோம். உள்நுழைவு செய்பவரின் ஏற்புகை தேவைப்படுகின்ற இணையப் பயன்பாட்டை உருவாக்கும்போது, இணைய பக்கத்தில் உள்நுழைவு செய்த பயனரின் தகவல்களை பல்வேறு பக்கங்களில் காண்பிப்பது அவசியமாகும். e-commerce இணையதளங்கள், வங்கியின் இணையதளங்கள் போன்ற பல்வேறு பயன்பாடுகளில் இது பயனுள்ளதாக இருக்கும். PHPஉம் அதன் செயலிகளின் உதவியுடனும் இதை எளிதாக செயல்படுத்தலாம்.சில எடுத்துக்காட்டுகளின் உதவியுடன்… Read More »

தமிழ் விக்கிப்பீடியா சந்திப்பு

தமிழ் விக்கிப்பீடியா சந்திப்பு மே மாதத்திற்குரிய இணையவழிக் கலந்துரையாடல்  Sunday, 26 May • 11:00–12:00 ISTGoogle Meet joining infoVideo call link: meet.google.com/uvu-uuoa-ypw வாய்ப்பிருப்பவர்கள் கலந்துகொண்டு தமிழ் விக்கிப்பீடியாவின் தொடர் முன்னேற்றத்திற்கு உதவுங்கள்.

கற்றுக்கொள்க லின்கஸின்உருவாக்கமைய நிரலாக்கத்தின் அடிப்படைகளை

ஒரு இயக்க முறைமையின் மையமும் மையக் கூறும் உருவாக்கமையம்(kernel) என அழைக்கப்படுகிறது. பணி மேலாண்மை ,வட்டு மேலாண்மை போன்ற அனைத்து அடிப்படை வன்பொருள் நிலையிலான செயல்பாடுகளும் இயக்க முறைமையின் உருவாக்கமையத்தால் கண்காணிக்கப்படுகின்றன. ஒரு பயனர்-நிலையில் செயல்முறைக்கு வன்பொருள் கூறுகளுக்கு நேரடி அணுகல் தேவைப்படும் போது, அது உருவாக்கமையத்திற்கு ஒரு கோரிக்கையை அனுப்புகிறது, இது கணினியின் அழைப்பு என குறிப்பிடப்படுகிறது. உருவாக்கமையம் ஆனது மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ளது, அனுமதிஅளிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே அணுக முடியும். இதன்மூலம் வன்பொருளை… Read More »

வாராந்திர செய்திகள் (Weekly News) – 2024-05-19 | Tamil

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள். Parameshwar’s News – 9to5linux.com/manjaro-linux-24-0-wynsdey-officially-released-with-linux-kernel-6-99to5linux.com/pipewire-1-2-release-candidate-adds-explicit-sync-and-snap-support9to5linux.com/raspberry-pi-5-official-m-2-hat-now-available-for-nvme-drives-and-ai-accelerators

எளிய தமிழில் Electric Vehicles 1. உயர் நிலைக் கண்ணோட்டம்

சந்தையில் வளர்ந்து வரும் விற்பனை  2023 இல் உலகம் முழுவதிலும் விற்பனையான புதிய கார்களில் 18% கார்கள் மின்சாரக் கார்களாகும். இந்தியாவில் 2023-24 இல் 9 லட்சம் இரு சக்கர ஊர்திகள் விற்பனை செய்யப்பட்டன. இந்தியாவில் 2023-24 இல் 5.8 லட்சம் மூன்று சக்கர ஊர்திகள் விற்பனை செய்யப்பட்டன. இது மொத்த மூன்று சக்கர ஊர்திகள் விற்பனையில் பாதிக்கு மேல் (54%). இவ்வாறு மின்னூர்திகள் (Electric Vehicles – EV) விற்பனை அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.… Read More »

வாராந்திர செய்திகள் (Weekly News) – 2024-05-12 | Tamil

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள். Parameshwar’s News Ubuntu 24.10 (Oracular Oriole) Daily Build ISOs Are Now Available for Download Fedora Asahi Remix 40 Is Now Available for Apple Silicon Macs with KDE Plasma 6 Steam Client Update Adds 150%… Read More »

பைத்தானின் தொகுப்புகள்(Collections)

பைத்தானில், தொகுப்புகள் என்பவை தரவைச் சேமிப்பதற்காகப் பயன்படுத்தப் படுகின்ற கொள்கலன்களாகும். tuples, lists, sets , dictionaries ஆகியன பைத்தானில் உள்ளமைக்கப்பட்ட தரவு கட்டமைப்புகளின்தொகுப்புகளாகும் இந்த தொகுப்புகளின் இனமானது, உள்ளமைக்கப்பட்ட தரவு கட்டமைப்புகளைத் தவிர கூடுதலான தரவு கட்டமைப்புகளையும் வழங்குகின்றது அவை பின்வருமாறு:. Counter, namedTuple, orderedDict , defaultDict, Deque, chainMap, ஆகியன பைத்தானில்’தொகுப்புகளின்’ தகவமைவில் உள்ள சில தரவு கட்டமைப்பு களாகும் இவைகள் குறித்த விளக்கங்களை இப்போது காண்போம், 1.Counter()எனும்செயலி இது ஒருதொகுப்பு வகையாகும்,… Read More »

எளிய தமிழில் Car Electronics 27. ஊர்தித் திரள் மேலாண்மை

நீங்கள் ஒரு நிறுவனத்தின் சரக்கு அல்லது பயணிகள் ஊர்தித் திரளுக்கு (fleet) மேலாளராக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஓட்டுநரின் கவனக்குறைவால் ஒரு விபத்து ஏற்பட்டால் நிறுவனம் தான் பொறுப்பு. மேலும் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துவதும், ஊர்தியின் தேய்மானமும் ஓட்டுநரின் செயல்பாடுகளைப் பொறுத்து உள்ளது. உங்கள் அலுவலகத்தில் இருந்து கொண்டே எங்கெங்கோ ஓடும் உங்கள் ஊர்திகளை எல்லாம் எவ்வாறு நீங்கள் கண்காணிக்க முடியும்? இதற்குத் தொலைக்கண்காணிப்புத் (Telematics) தொழில்நுட்பம் உதவி செய்கிறது. ஓட்டுநர் செலுத்திய பாதை, செயலற்று… Read More »