நிகழ்படத்தின் ஒலி அளவு ஏற்றுதல் (Increase volume in Video) | Tamil

Ffmpeg பயன்படுத்தி எப்படி ஒரு நிகழ்படத்தின் ஒலி அளவை அதிகப்படுத்துதல் என்பதை பற்றி கற்போம் பயன்படுத்திய கட்டளைகள்: படச்செறிவு சிதையாமல் கோப்பின் வடிவம் மாற்றுதல்: ffmpeg -i input.mp4 -lossless 1 output.webm சாதாரனமாக கோப்பின் வடிவம் மாற்றுதல்: ffmpeg -i input.mp4 outputNew.webm ஒலி அளவை 4 மடங்கு உயர்த்துதல்: ffmpeg -i input.webm -vcodec copy -acodec libopus -vol $((256*4)) output.webm நிகழ்படத்தை வழங்கியவர்: தகவல் உழவன், விக்கிமீடியா இணைப்புகள்: ffmpeg.org/ குறிச்சொற்கள்:… Read More »

இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு – திட்டமிடல்

2020 ல் முதல் கட்டற்ற தொழில்நுட்ப மாநாட்டை இணைய வழியில் நடத்தினோம். காணொளிகள் இங்கே – மாநாடு : [நாள் 1] **தொடக்க விழா** கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு | ஓம்தமிழ் – YouTube 1 இந்த வருடம் நேரடி நிகழ்வாக நடத்தலாம். ஆண்டுதோறும் செப்டம்பர் 17 ‘மென்பொருள் விடுதலை விழா’ www.softwarefreedomday.org/ என உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. அதே நாளில் இந்த மாநாட்டை நடத்தலாம். மாநாட்டை ஒருங்கிணைக்க ஆர்வமுள்ளோர், இங்கு பதில் தருக. மாநாட்டின் நிகழ்வுகள்,… Read More »

VGLUG (Villupuram GNU/Linux Users Group) 10 ஆம் ஆண்டு கொண்டாட்டம்!!*
*VGLUG வழங்கும் ரீல்ஸ்/ஷார்ட்ஸ் போட்டி

VGLUG (Villupuram GNU/Linux Users Group) 10 ஆம் ஆண்டு கொண்டாட்டம்!!**VGLUG வழங்கும் ரீல்ஸ்/ஷார்ட்ஸ் போட்டி! கடந்த 10 ஆண்டுகளாக விழுப்புரத்தில் இயங்கி வரும் நமது VGLUG அமைப்பு, தற்போது தனது 10-ஆம் ஆண்டினை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அடுத்த ஓரண்டிற்கு மாதம்தோறும் பல்வேறு வகையான முன்னெடுப்புகளை செயல்படுத்தி கொண்டாட உள்ளோம். முதற்கட்டமாக, இந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து பங்களிக்கும் விதமாக இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கான போட்டி… Read More »

இயந்திரவழி கற்றலுக்கு உதவும் சில திறமூலகருவிகள் (OpenSource Tools)

செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழி கற்றல் ஆழ்த கற்றல் ஆகியவை பல தசாப்தங்களாக மனிதர்கள் செய்யும் விதத்தில் கணினிகள் பணிகளைச் செய்ய உதவுகின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) கணினிகளைப் பயன்படுத்தி மனித மூளையின் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. அவ்வாறு செய்ய இது கணிதமாதிரிகளையும், புள்ளிவிவர மாதிரிகளையும் பயன்படுத்திகொள்கிறது (எ.கா., நிகழ்தகவு). இயந்திரவழி கற்றல் (ML) மனிதமூளை செயல்பாடுகளின் நிரலாக்க மாதிரிகளைப் பயன்படுத்தி AI மாதிரிகளின் நடத்தையை மேம்படுத்துகிறது, மேலும் இந்த மாதிரிகளின் முடிவுகளை எதிர்கால கணிப்புகளுக்காக சேமிக்கிறது.… Read More »

நிகழ்படத்தை Mp4 ல் இருந்து WebM க்கு மாற்றுதல் (Converting Mp4 to WebM) – Tamil

FFmpeg மென்பொருளை பயன்படுத்தி ஒரு நிகழ்படத்தை எப்படி mp4 கோப்பு வடிவில் இருந்து webm கோப்பு வடிவத்திற்கு மாற்றுவது என்பதை இந்த நிகழ்படத்தில் காண்போம் நிகழ்படம் வழங்கியவர்: தகவல் உழவன், விக்கிமீடியா இணைப்புகள்: ffmpeg.org/ குறிச்சொற்கள்: #mp4 #webm #ffmpeg

பைதானின் requests ,Beautiful Soupஆகியதகவமைவின்(module) மூலம் இணையப்பக்கங்களை பகுப்பாய்வு செய்க

நம்மில் பெரும்பாலானவர்கள் பொழுதுபோக்குவதற்காகவே இணையத்தில் மிக அதிக நேரம் உலாவருகின்றோம். ஆனால் இவ்வாறான இணய உலாவருவதற்கான ஒவ்வொரு செயலையும் நம்முடைய கையால் சொடுக்குதல் செய்வதன் வாயிலாக மட்டுமே இவ்வாறு இணைய உலாவரமுடியும் என்பது ஒரு மோசமான செயல்முறை, அல்லவா? இவ்வாறு இணைய உலாவருவதற்காக ஒரு இணைய உலாவியைத் செயல் படுத்திடவும். குறிப்பி்ட்டதொரு இணையதளத்திற்குச் செல்லவும். தேவையான பொத்தான்களை சொடுக்குதல் செய்தல், சுட்டியை நகர்த்தி செல்லுதல் ஆகிய. பணிகள் மிகஅதிகமானவைகளாகும் அதனால் . அதனை குறைத்து குறிமுறை வரிகளின்… Read More »

மொசில்லா பொதுக்குரல் – அரைமணிநேர அறிமுகக் கூட்டம்

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதன் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம். இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் இணையவழி நடக்கவிருக்கிறது. நாள்: 31.07.2022 ஞாயிறு – காலை 9.00… Read More »

சேவையகமற்ற கணினிக்கு மாற வேண்டுமா (மேககணினி தொழில்நுட்பம்)?

அடிப்படையில், சேவையகமற்ற கணினி என்பது மேககணினியை செயல்படுத்திடு கின்ற ஒரு மாதிரி-கணினி யாகும், அங்கு மேககணினி வழங்குநரால் கணினியின் வளங்கள் தேவைக்கேற்ப ஒதுக்கப்படுகின்றன, இது வாடிக்கையாளர்களின் சார்பாக சேவையகங்களையும் கவனித்துக்கொள்கிறது. எனவே, பயன்பாட்டிற்கு ஏற்றவாறு பின்புலத்தில் சேவைகளை வழங்குகின்ற வழிமுறையாகவும் இதனைக் குறிப்பிட லாம். இதன் நன்மை என்னவென்றால், சேவைகளைப் வழங்குகின்ற நிறுவனங்களானவை பயனாளர்கள் பயன்படுத்தி கொள்கின்ற பயன்பாட்டின் அடிப்படையில் மட்டுமே கட்டணம் விதிக்கின்றன, மேலும் நிலையான அளவு அலைவரிசை அல்லது பயன்படுத்தப் படும் சேவையகங்களின் எண்ணிக்கை… Read More »

குறைந்த குறிமுறைவரிகளின் இயங்குதளங்கள் தொழில்முறை நிரலாளர்களுக்கு உதவியாக உள்ளனவா?

தற்போதைய சூழலில்குறைந்த குறிமுறைவரிகள் (Low-Code) அல்லது குறிமுறைவரிகளில்லாதவை(No-Code)  குறித்து விவாதங்கள் துவங்கிவிட்டன கடந்த பல ஆண்டுகளில், மென்பொருள் தயாரிப்பு மேம்பாட்டின் ஒட்டுமொத்த செயல்முறையை புதுமைப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் நிறுவனங்கள் நிறைய நேரத்தையும் சக்தியையும் முதலீடு செய்துள்ளன. அதனை தொடர்ந்து Agile பணிமுறைகள் மென்பொருள் உற்பத்தி வளர்ச்சியின் செயல்முறையை மிகவும் மென்மையாக்க உதவியது. இருப்பினும், மேம்படுத்துநர்கள் இன்னும் விரைவாகவும் எளிதாகவும் உயர்ந்து கொண்டே போகும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சவாலை எதிர்கொள்கின்றனர். மொத்தத்தில் மேம்படுத்துநர்களுக்குக் தற்போதைய தேவைகள் அனைத்தையும்… Read More »

பயனர் இடைமுகத்துடனான தந்திரமான தரவுத்தளம்(Magic data BASE with User Interface)

MUIbase என சுருக்கமாக அழைக்கப்பெறும் பயனர் இடைமுகத்துடனான தந்திரமான தரவுதளம்(Magic data BASE with User Interface )என்பது வரைகலை பயனர் இடை முகத்துடனான, நிரலாக்கம் செய்து பயன்படுத்திகொள்ளக்கூடிய தரவுத்தளமாகும். மேலும் MUIbase ஆனது ஒரு விரைவான நெகிழ்வான தரவுத்தள அமைப்பாகும். வசதியான, சக்திவாய்ந்த முறையில் தரவை நிர்வகிக்க விரும்பும் மேம்பட்ட மேசைக்கணினி பயனர்களை இது இலக்காகக் கொண்டது. இந்தMUIbase என்பதை கொண்டு எந்த வகையான தரவையும் நிர்வகிக்க முடியும், எ.கா. முகவரிகள், உரைவடிவிலான தொடர்கள், திரைப்படங்கள்,… Read More »