Tag Archive: கட்டற்ற மென்பொருள்

பேராலயமும் சந்தையும் 4. பயனர்கள் இருப்பதன் முக்கியத்துவம்

பயனர்களைச் சரியாகப் பண்படுத்தினால் அவர்கள் இணை உருவாக்குநர்களாகவும் ஆகலாம் இப்படியாக நான் பாப்கிளையன்ட்டைப் பெற்றேன். அதைவிட முக்கியமாக, நான் பாப்கிளையன்ட்டின் பயனர் அடித்தளத்தைப் பெற்றேன். பயனர்கள் நமக்குத் தேவையான அற்புதமான நபர்கள். நாம் ஓர் உண்மையான தேவைக்குச் சேவை செய்கிறோம், எதையோ சரியாகச் செய்துள்ளோம் என்பதை அவர்கள் நிரூபிப்பதால் மட்டுமல்ல. சரியாகப் பண்படுத்தினால், அவர்கள் இணை…
Read more

பேராலயமும் சந்தையும் 3. அஞ்சல் போய்ச் சேர்ந்தாக வேண்டும்

1993 ஆம் ஆண்டு முதல் பென்சில்வேனியாவின் வெஸ்ட் செஸ்டரில் செஸ்டர் கவுண்டி இண்டர்லிங்க் (CCIL) என்ற சிறிய இலவச இணைய சேவையகத்தின் தொழில்நுட்ப வேலையைச் செய்து வருகிறேன். நான் CCIL இன் நிறுவனர்களில் ஒருவன். எங்களின் தனித்துவமான பல பயனர் அறிக்கைப் பலகை (multiuser bulletin-board) மென்பொருளையும் நானே எழுதினேன். நீங்கள் அதை locke.ccil.org க்கு…
Read more

பேராலயமும் சந்தையும் 2. பேராலயமும் சந்தையும்

நூல் சுருக்கம்  மென்பொருள் பொறியியல் பற்றிய சில ஆச்சரியமான கோட்பாடுகளை லினக்ஸின் ( Linux) வரலாறு அறிவுறுத்தியது. இவற்றை சோதனை செய்வதற்காகவே நான் நடத்திய வெற்றிகரமான திறந்த மூல திட்டமான ஃபெட்ச்மெயிலைக் (fetchmail) கூறுபடுத்தி ஆய்வு செய்கிறேன். வணிக உலகில் பெரும்பாலும் “பேராலயம்” பாணியில்தான் மென்பொருள் உருவாக்கப்படுகிறது. லினக்ஸ் உலகின் “சந்தை” பாணி இதற்கு அடிப்படையிலேயே…
Read more

பேராலயமும் சந்தையும் 1. முகவுரை: இதில் நீங்கள் ஏன் அக்கறை காட்ட வேண்டும்

மூலநூல்: The Cathedral and the Bazaar by Eric S. Raymond – Musings on Linux and Open Source by an Accidental Revolutionary – version 3.0 பேராலயமும் சந்தையும் – எரிக் ரேமண்ட் – ஒரு தற்செயலான புரட்சியாளரின் லினக்ஸ் மற்றும் திறந்த மூலம் பற்றிய சிந்தனைகள் –…
Read more

பயிலகத்தில் நடந்த லிப்ரேஆபிஸ் டெஸ்டிங் ஹேக்கத்தான்

என்ன நடந்தது: லிப்ரேஆபிஸ் டெஸ்டிங் ஹேக்கத்தான். எப்போது நடந்தது: ஜனவரி 29, 2023 8.30 முதல் 1.30 மணி வரை எங்கு நடந்தது: பயிலகம், வேளச்சேரி யார் நடத்தினார்கள்: பயிலகத்தின் முன்னாள் மாணவர்கள் யாகப்பிரியன், அலெக்சாண்டர், பாஸ்கர் யார் கலந்து கொண்டார்கள்: பயிலகம் மாணவர்கள் [இடமின்மை காரணமாகப் பொது நிகழ்வாக நடத்த இயலவில்லை] வழுக்கள் பற்றி:…
Read more

களை கட்டிய கட்டற்ற மென்பொருள் திருவிழா – நிகழ்வுக் குறிப்புகள்

எப்படித் தொடங்கினோம்? முதன்முதலில் கட்டற்ற மென்பொருளுக்கு என நிகழ்வு ஒருங்கிணைக்கலாமா என தமிழறிதத்தின் செயலாளர் சரவண பவானந்தன் ஐயா தமிழ் இணையம் 100 நிகழ்ச்சியில் கேட்டார். கணியம் சீனிவாசன், இங்கே இருக்கிறார், அவரிடம் கேளுங்கள் என்று சொன்னேன். அன்று விழுந்தது தான் இவ்விதை! அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக, சரவண பவானந்தன் ஐயா, சீனிவாசனிடம் கேட்டுக் கொண்டே…
Read more

கட்டற்ற மென்பொருள் உருவாக்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?

கட்டற்ற மென்பொருள் உருவாக்கும் போது ரொம்ப முக்கியமானது – அந்த மென்பொருளைப் பற்றி என்னென்ன தெரியும் என்று எழுதி வைப்பது. ஏன் இப்படி எழுதி வைக்க வேண்டும்? நாம் வேலை செய்யப்போவது கட்டற்ற மென்பொருள் அல்லவா! அதனால் பலரும் பங்களிக்க வருவார்கள். அப்படிப் பங்களிக்க வருபவர்களுக்கு உதவியாக, 1. மென்பொருள் என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது? 2….
Read more

யூடியூப் “செயலி”யை மூடிய பிறகும் கேட்பது, விளம்பரம் இல்லாமல் கேட்பது எப்படி?

யூடியூப் தான் இன்றைய நிலையில் இரண்டாவது மிகப் பெரிய தேடுதல் பொறி. சமையலில் தொடங்கி, படம் வரைவது, படம் பார்ப்பது, பாடம் படிப்பது என்று யூடியூபைப் பல காரணங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், யூடியூப் தளத்தைப் பயன்படுத்துவதற்கும் யூடியூப் செயலியை அலைபேசியில் பயன்படுத்துவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. யூடியூப் தளத்தைக் கணினியில் பார்க்கும் போது நாம் வேறு…
Read more

பொறியியல் வரைபடம் – திறந்த மூல லிபர்கேட் (LibreCAD)

திறந்த மூல லிபர்கேட் மென்பொருளை உபுண்டு 16.04 இல் எப்படி நிறுவுவது என்று இங்கே பார்க்கலாம். இவர்கள் சொன்ன மூன்று கட்டளைகளையும் கொடுத்தவுடன் லிபர்கேட் 2.2.0 வை நிறுவியது. முதன்முதலாக ஓட்டும்போது மெட்ரிக் அளவை முறையில் மிமீ என்று தேர்ந்தெடுக்கவும். மொழித் தேர்வில் ஆங்கிலத்தை அப்படியே விட்டுவிடலாம். பின்னால் மாற்றவேண்டுமென்றால் தேர்வுப் பட்டியலில் Options (தேர்வுகள்)…
Read more

ஆன்டிராய்டு திறன்பேசியில் பாதுகாப்பும் அகவுரிமையும்

கூகிள் விளையாட்டு அங்காடி (Google Play Store) தீங்குநிரல்கள் நிறைந்து, பாதுகாப்பு மற்றும் அகவுரிமைக்கு மிகவும் பாதகமாகிவிட்டது ஆன்டிராய்டு இயங்கு தளத்துடன் சேர்ந்தே கூகிள் அங்காடி வருகிறது, ஆகவே தனியாகப் பதிவிறக்கம் செய்து நிறுவத் தேவை இல்லை. இதில் மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட செயலிகள் உள்ளன. உங்களால் கற்பனை செய்யக்கூடிய எல்லா வேலைகளுக்கும் இதில் செயலிகள்…
Read more