Tag Archives: Open source

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 7. நீங்கள் ஒரு அற்புதமான நிரல் பங்களிப்பாளராக ஆகலாம்

இங்கு நியூயார்க் நகரில் ஒரு சுறுசுறுப்பான காலை நேரம். என் மின்னஞ்சல் அகப்பெட்டியில் பார்த்தால் இனிமையான ஆச்சரியங்கள் பல உள்ளன. முதலில் என்னுடைய திறந்த மூல திட்டங்களில் ஒன்றுக்கு ஒரு நிரல் ஒட்டு (patch) வந்துள்ளது. இரண்டாவது ஒட்டு இன்று பிற்பகல் வரும். மூன்றாவது ஒருவேளை இன்றிரவோ அல்லது நாளையோ ஒரு புதிய பங்களிப்பாளரிடமிருந்து வர வேண்டும். என் வேலை நேரம் போக, நான் சில திறந்த மூல திட்டங்களுக்கு பங்களிக்கிறேன் மற்றும் அவற்றை நிர்வகிக்கிறேன். நான்… Read More »

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 6. புதுமுகங்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள்

“திறந்த மூலம் கல்லூரி வளாகத்துக்கு வருகிறது” என்ற ஒரு தொடர் நிகழ்வை ஓபன்ஹாட்ச் (OpenHatch) நடத்துகிறது. கல்லூரி மாணவர்களுக்கு திறந்த மூலக் கருவிகளையும், திட்டங்களையும் மற்றும் கலாச்சாரத்தையும் அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கம். இந்நிகழ்ச்சியில் எங்களுக்கு ஒரு புதிய கேள்வி கிடைத்தால், நாங்கள் அதைக் குறித்துக்கொண்டு எங்கள் வலைப்பதிவில் இன்னும் முழுமையாக அதற்கு பதில் தருகிறோம். இங்கே குறிப்பாக, திறந்த மூலத்துக்கு புதிதாக வருபவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்ற கேள்விகளைத் தொகுத்துத் தருகிறோம். கேள்வி: நான் கற்றுக்குட்டி என்பதால்… Read More »

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 5. ஏன் திறந்த மூல நிரலாளர்களுக்கு வேலை கிடைப்பது எளிது?

2012 இல் நான் முதல் திறந்த மூல மாநாட்டுக்கு சென்றதிலிருந்து எனக்கு தொழில்நுட்பம் மிகவும் பிடித்துவிட்டது. ஆட்சேர்ப்பு செய்வதில் பல ஆண்டுகள் அனுபவத்துடன் பெருந்தரவு (big data) தனித்துறையாக உள்ள கிரேதார்ன் (Greythorn) நிறுவனத்தில் வேலையில் சேர முடிவு செய்தேன். நான் ஆஸ்கான் (OSCON) மாநாட்டுக்கு முன் சில மாதங்களாகவே பெருந்தரவைப் பற்றிக் கற்றுக்கொள்ள முயற்சி எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் மாநாட்டுக்கு சென்றவுடன் அது அதிவேகமாக நடந்தது. அங்கு பல நிபுணர்கள் ஒரே இடத்தில் இருந்தனர், அது… Read More »

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 4. நிரல்தான் என்று இல்லை, பங்களிக்க எளிய வழிகள் பல!

நிரல் எழுதாமல் ஒரு திறந்த மூல திட்டத்துக்கு பங்களிக்க 10 வழிகள் சமீபத்திய ஒரு opensource.com கட்டுரையில் பின்னூட்டம்  அளித்த ஒருவர், தான் திறந்த மூல திட்டங்களுக்கு உதவியளிக்க விரும்புவதாகவும் ஆனால் நிரல் எழுதத் தெரியவில்லையே என்றும் அங்கலாய்த்தார். உண்மையில், நிரல் எழுதுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், வரவேற்கிறோம். ஆனால் திறந்த மூல திட்டங்களுக்கு பங்களிக்க மற்ற பல வழிகளும் உள்ளன. முதலில் திறந்த மூல திட்டங்கள் பற்றி நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் இரண்டு… Read More »

கட்டற்ற மென்பொருளும் அறிவியலும் – பகுதி 5

Jmol – முப்பரிமாண வேதியியல் மூலக்கூறுகளை காண உதவும் கட்டற்ற மென்பொருள் அறிமுகம் J mol (Java molecular) ஒரு வேதியியல் மூலக்கூறுகளை முப்பரிமாணத்தில் காண உதவும் கட்டற்ற மென்பொருள். இது ஜாவா நிரலாக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. எனவே இதனை அனைத்து இயங்குதளங்களிலும், Applet ஆக ஜாவா உதவியுடன் அனைத்து இணைய உலாவிகளிலும் (Browsers) பயன்படுத்தலாம். மேலும் Jmol viewer – development toolkit ஐ பயன்படுத்தி மற்றி ஜாவா மென்பொருளுடன் இணைத்துக்கொள்ளலாம். இம்மென்பொருளின் பல்வேறு சிறப்பம்பசங்களால்… Read More »

லிப்ரெஓபிஸ் 4.3: இன்று, அதினும் சிறந்த அலுவலகத் தொகுதி இல்லை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3, 2014 இன்று தமிழா! குழுவினர் லிப்ரெஓபிஸ் 4.3 இன் வெளியீட்டை அறிவித்தனர். உலகெங்கிலும் பரவிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்களின் உடனுழைப்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வந்த லிப்ரெஓபிஸ், இன்று எல்லாவிதத் தேவைகளையும் நிறைவு செய்யும் ஒரு மிகச் சிறந்த அலுவலகத் தொகுதியாக வளர்ந்திருக்கிறது. ‘லிப்ரெ’ என்றால் விடுதலை என்று பொருள்பட அமைந்துள்ள லிப்ரெஓபிஸ் ஒரு கட்டற்ற திறமூல மென்பொருள் ஆகும். அது முழுக்க முழுக்க தமிழில் அமைந்திருப்பது மட்டுமல்லாது, அனைவருக்கும் இலவசமாகவே… Read More »

கட்டற்ற மென்பொருளும் அறிவியலும் – பகுதி 4

நானோ தொழில்நுட்பத்திற்கான கட்டற்ற மென்பொருள் CNT அறிமுகம் Carbon Nanotube (மீநுண் கரிக்குழல்) என்பதன் சுருக்கமே CNT. குழல் போன்ற அமைப்பைக் கொண்ட CNT கரிமத்தால் (Carbon) ஆனது. ஏறக்குறைய 3-10 nm விட்டமும், சில நூறு மைக்ரான்கள் நீளமும் கொண்டது. (நானோமீட்டர் – 10^(-9) அதாவது ஒரு சென்டிமீட்டரை ஒரு கோடி கூறுகளில் ஒரு பங்கு. நம் தலைமுடியின் தடிமன் 100 மைக்ரான், இது நானோ மீட்டரில் 100000nm.) இது எதற்கு பயன்படும்? இதை வைத்து… Read More »

கட்டற்ற மென்பொருளும் அறிவியலும் – பகுதி 3

மின்சுற்று வரைபடங்கள் கல்லூரியில் பயிலும் இயற்பியல் மாணவர்கள் தங்கள் செய்முறை வகுப்புகளில் சில அடிப்படை மின்சுற்றுகளை அமைத்து வேலை செய்யும் விதத்தை அறிந்திருப்பர். பல்தொழில்நுட்பம், பொறியியலில் பயிலும் ECE, EEE மாணவர்கள் மின்சுற்றுகளைப் பற்றி அதிகம் அறிந்திருப்பர். இதுபோன்ற மின்சுற்றுகளுக்கும், மின்சுற்று ஒப்புச் செயலாக்கத்திற்கும் (Circuit Simulation) ஆட்டோகேட் (Auto CAD) போன்ற வர்த்தக மென்பொருள்களைப் பயன்படுத்தி வருகின்றனர். லினக்ஸிலும் இதுபோன்று மின்சுற்றுக்களை அமைப்பதற்கும், அமைக்கப்பட்ட மின்சுற்றினைச் சோதிப்பதற்கும், இறுதியாக உருவாக்கப்பட்ட மின்சுற்றினைப் பொருத்துவதற்கு, அச்சிட்ட மின்சுற்றுப்… Read More »

இதயத்தில் ஒரு கசிவு (Heart Bleed)

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு – திருக்குறள் இன்றைய காலக்கட்டத்தில் மென்பொருள் பயன்பாடுகளுக்கு மேற்கண்ட குறள் மிகவும் பொருந்தும். பலரும் தங்கள் அறிவையும், நேரத்தையும் செலவிட்டு உருவாக்கும் மென்பொருட்களில், நாம் அறியாது இருக்கும் சிறு வழு (Bug) கூட வலுவானதாகி, மாபெரும் அச்சுறுத்தல் ஆகி விடுகிறது. அப்படி, சமீபத்தில் கண்டறியப்பட்டு உலகத்தையே ஒரு கலக்கு கலக்கிய பாதுகாப்பு குறைபாடுதான் இதயக் கசிவு (Heart Bleed) ஆகும். இதயக் கசிவு ஒரு வழு (Bug)… Read More »

கட்டற்ற மென்பொருளும் அறிவியலும் – பகுதி II

லினக்ஸில் கட்ட வரைபடங்கள் (Graph Plotting Tools in Linux) Graph என்று சொல்லப்படும் வரைபடங்களை பள்ளி வகுப்புகளிலிருந்து அனைவரும் அறிந்திருப்பர். பெறப்பட்ட தரவுகளை (Data) வரைபடத்திற்கு மாற்றுவதன் மூலம் எளிதாக தரவுகளை ஆராயவும் மேலும் பல தகவல்களையும் பெறவும் முடியும். இது புள்ளியியல் (Statistics) துறையிலிருந்து அறிவியல் சார்ந்த பல துறைகள் வரை பயன்படுகிறது. மிக அதிகப்படியான தரவுகளை (Very large data analysis) வரைபடத்திற்கு மாற்றவும், ஒப்பு செயலாக்கத்திற்கும் (Simulation) மீகணினிகள் (Super Computer)… Read More »