Tag Archives: Security

அமேசான் இணையச்சேவைகள் – அடையாள அணுக்க மேலாண்மை

ஓர் அடுக்குமாடிக்குடியிருப்பின் பராமரிப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது என சற்று சிந்தித்துப்பார்க்கலாம். அநேகமாக எல்லா அடுக்குமாடிக்குடியிருப்புகளிலும் பாதுகாப்புப் பணியாளர்கள் இருப்பர். அக்குடியிருப்புக்குள் வந்துபோகிற நபர்களையும், வாகனங்களையும் கண்காணித்து, பதிவுசெய்துகொள்வது அவர்கள் வேலை. மேலும், தோட்டப்பராமரிப்புக்கும், துப்புரவுக்கும், மின்சார உபகரணங்கள் பராமரிப்புக்கும், நீர் மேலாண்மைக்கும் என பல்வேறு பணியாளர்கள் அக்குடியிருப்புக்குள் வந்து அவர்கள் வேலைகளைச் செவ்வனே செய்யவேண்டியுள்ளது. இவர்களனைவரும் தங்களுக்குரிய வேலையைத் தவிர்த்து வேறொரு வேலையில் ஈடுபடமுடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கவேண்டும். இதேபோன்றதொரு தேவை, அமேசான் இணையச்சேவைகளுக்கும் உண்டு. பெருநிறுவனங்களில்… Read More »

அமேசான் இணையச்சேவைகள் – பாதுகாப்புக்குழுக்கள்

சொந்த தரவுநிலையங்களிலிருந்து இயக்கினாலும் சரி, மேகக்கணினியிலிருந்து இயக்கினாலும் சரி, நம் செயலிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டியது நமது கடமை. பத்தடி அகலமுள்ள சுவர்களுக்குள் வைத்து, உலகத்தரம்வாய்ந்த பூட்டுகளைகொண்டு பூட்டிவைத்தெல்லாம், இவற்றைப் பாதுகாக்கமுடியாது. நமது செயலியின் சேவையகங்களையும், தரவுதளங்களையும், யாரெல்லாம் அணுகமுடியும், எங்கிருந்து அணுகமுடியும் என்பதுபோன்ற விதிகளை சரியானமுறையில் கட்டமைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அமேசானிலுள்ள மேகக்கணினிகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள்: மெய்நிகர் தனிப்பட்ட மேகக்கூட்டம் (Virtual Private Cloud – VPC) துணை இணையங்கள் (Subnet) பாதுகாப்புக்குழுக்கள் (Security Groups)… Read More »

OSSEC-HIDS – மேகக்கணினி சூழலிற்கான பாதுகாப்பு அரண்

எழுத்து: ச.குப்பன் பல பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தங்களுடைய தரவுகளைத் தேக்கி வைத்துக் கொள்ளவும், பல்வேறு பணிகளைக் கையாளவும், மேகக்கணினி (Cloud Computing) எனும் சேவைக்கு மாறி வருகின்றன. மேகக்கணினி சேவையில் ஏராளமான அபாயங்களும், பாதுகாப்பு குறைபாடுகளும் உள்ளன என்பது கண்கூடாக தெரிந்ததே! இந்த மேகக்கணினியின் சேவையினை கீழ்காணுவது போல மூன்றாகப் பிரித்தரியலாம்: கட்டமைவு சேவை (Infrastructure as a service (IaaS)) தளச்சேவை (Platform as a Service(PaaS)) மென்பொருள் சேவை (Software as… Read More »