Tag Archives: wikisource

சத்திரத்தான் 10,000 கட்டுரைகள் | விக்கிப்பீடியா நாயகர்கள்

தமிழ் விக்கிப்பீடியா வரலாற்றில் மற்றும் ஒரு சாதனையாக பத்தாயிரம் கட்டுரைகளை நிறைவு செய்து இருக்கிறார், விக்கிப்பீடியா எழுத்தாளர் சத்திரத்தான் அவர்கள் . உலக அளவில் தமிழின் பெருமையை கொண்டு செல்லும் நோக்கில், தன்னலம் கருதாத பல உள்ளங்கள் விக்கிபீடியா தளத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தகவல்களை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். திருத்திக் கொண்டிருக்கிறார்கள். புகைப்படங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து சிறப்பித்து வந்திருக்கிறோம். திரு. பாலசுப்பிரமணியம், திரு.சத்திரத்தான், திரு.தாஹா புகாரி, எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ, திரு.மூர்த்தி என பலர்… Read More »

அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ அவர்களுடன் ஒரு நேர்காணல்

நமது கணியம் இணையதளத்தில், விக்கிமூல பங்களிப்பாளர்கள் பலர் குறித்தும், கட்டுரைகள் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறோம். சமீபத்தில் கூட, விக்கி மூல பங்களிப்பாளர் திரு.தாஹா புகாரி அவர்களிடம், எழுத்து வடிவில் ஒரு நேர்காணலையும் மேற்கொண்டு இருந்தோம். அந்த வகையில், இன்றைக்கு நாம் நேர்காணல் செய்யவிருக்கக் கூடிய விக்கி மூல பங்களிப்பாளர்; வெறும் விக்கி மூலதோடு தன்னுடைய பணியை நிறைவு செய்துவிடவில்லை. விக்கி மூலத்திற்கு முன்பாகவே சுமார் 25 ஆண்டுகளாக, அறிவியல் எழுத்தாளராக அறியப்படக்கூடியவர் ஏற்காடு இளங்கோ அவர்கள். 1992… Read More »

விக்கி மூல பங்களிப்பாளர் திரு. புகாரி அவர்களுடன் ஒரு நேர்காணல்

விக்கி மூலத்திற்கு பங்களிக்கக்கூடிய பலர் குறித்தும் நாம் கட்டுரைகளில் பார்த்திருந்தோம். அந்த வகையில் திரு.தாஹா புஹாரி அவர்கள் குறித்து, விக்கி மூலத்திற்கு பங்களிக்கக்கூடிய மற்றொரு பயனராகிய திரு.பாலாஜி அவர்களின் மூலம் அறிய நேர்ந்தது. நானும் எனக்குத் தெரிந்த வகையில் 10 கேள்விகளை தயார் செய்திருந்தேன். அந்தக் கேள்விகளை whatsapp வழியாக திரு.புஹாரி அவர்களுக்கு அனுப்பினேன். அவர்களும் ஒவ்வொரு கேள்விக்கும், தனது விலை மதிப்பில்லாத நேரத்தை செலவிட்டு முழு மனதோடு பதில் அளித்திருக்கிறார்கள். முழு மனதோடு கேள்விகளுக்கு பதிலளித்த… Read More »

விக்கிமூலம் மெய்ப்புபார்க்கும் தொடர் நிகழ்வு – 2020 – முதல் அனுபவம்

விக்கிமூலம் – இது ஒரு “பதிப்புரிமையில்லா” விக்கிநூலகத் திட்டமாகும். இதில் நா. வானமாமலை, பண்டிதர் க. அயோத்திதாசர், தொ. மு. சி. ரகுநாதன் உட்பட தமிழின் 91 ஆசிரியர்களின், 2217 நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள் மின்னூல் வடிவிலும், PDF, Doc வடிவிலும் கிடைக்கும். விக்கிபீடியா-வை போல, விக்கிமூலமும் பல்வேறு மொழிகளிலும் உள்ளது. மே மாதம் 1ஆம் தேதி முதல், 10ஆம் தேதிவரை இந்திய மொழிகளுக்கான மெய்ப்புபார்க்கும்(Proofread) தொடர் நிகழ்வு நடைபெற்றது. இதில் அசாமி, பெங்காலி, குஜராதி, தமிழ் உட்பட… Read More »

1000 நூல்களை ஒருங்குறி வடிவில் வாங்க நன்கொடை வேண்டுதல்

கணியம் அறக்கட்டளை   அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப,  தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து அறிவுத் தொகுதிகளும்,  வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலையும் பணி இலக்காகக் கொண்டு கணியம்  அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது. அதற்கிணங்க, இது வரை Kaniyam.com  தளத்தில் கடந்த  7 ஆண்டுகளாக, கட்டற்ற மென்பொருள் சார்ந்த கட்டுரைகளும், மின்னூல்களும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. FreeTamilEbooks.com தளத்தில் 5.5 ஆண்டுகளில் 500 மின்னூல்கள் இது வரை வெளியிடப்பட்டுள்ளன.  தமிழ்கூறு… Read More »