Category Archives: Open source softwares

குறிமுறைவரிகளை எழுதாமலும் பணம் செலவழிக்காமலும் KDE-ஐ மேம்படுத்துவதற்கான ஏழு வழிமுறைகள்

KDE போன்ற திறமூல மென்பொருட்களானவை, தொழில்நுட்பப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் அனைவராலும் அணுகக்கூடியவைகளாகும். குறிமுறைவரிகளை எழுதுவதன்மூலமும், வடிவமைத்தலின் மூலமும், மொழிபெயர்த்தலின் மூலமும், அல்லது வெறுமனே OS-ஐப் பயன்படுத்துவதன்நமூலமும், அதன் வளர்ச்சிக்கு தீவிரமாகப் பங்களிக்கலாம். முடிந்தவரை KDE-ஐப் பயன்படுத்துக மேசைக்கணினியை இயக்குவது மட்டுமே மேம்படுத்துநர்கள் சூழலமைப்பை மேம்படுத்த உதவுகிறது: தானியங்கியான செயலிழப்பின் அறிக்கைகள்: Dr Konqi போன்ற உள்ளமைக்கப்பட்ட கருவிகள், மேம்படுத்துநர்கள் சிக்கல்களைப் பிழைதிருத்தம் செய்ய உதவும் வகையில், கணினியின் விவரங்களுடன் செயலிழப்பின் அறிக்கைகளைத் தானாகவே அனுப்புகின்றன. தொலைஅளவியின்தரவு:பயன்பாட்டுத் தரவு,… Read More: குறிமுறைவரிகளை எழுதாமலும் பணம் செலவழிக்காமலும் KDE-ஐ மேம்படுத்துவதற்கான ஏழு வழிமுறைகள் »

Kolibri எனும் மீச்சிறு திறமூல (open-source) இயக்கமுறைமை (OS)

இந்த  இயக்கமுறைமையானது (OS) வெறும் 12 MB அளவே கொண்டது; இது Windowsஐ விட வேகமாக இயங்கத் தொடங்குகிறது (boot) .Windows போன்ற நவீன இயக்குமுறைமைகள் பெரும்பாலும் தேவையற்ற மென்பொருட்களாலும் (bloatware), மெதுவான தொடக்க நேரத்தாலும் (slow boot times) மிகமெதுவாக செயல்படுகின்றநிலையை அடைகின்றன. அதற்கு பதிலாகLinuxஆனது இலகுரக மாற்றுகளை வழங்கினாலும், KolibriOS மிகக் குறைந்த வளங்களைப் பயன்படுத்தும் அணுகுமுறையை (minimalism) உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது. இது செயல்படுவதற்காக வெறும் 8 MB முதல் 12 MB… Read More: Kolibri எனும் மீச்சிறு திறமூல (open-source) இயக்கமுறைமை (OS) »

திற மூல மென்பொருளைக் கொண்டு கலப்பின செய்யறிவின் (AI)-குவாண்டம் உள்கட்டமைப்பை உருவாக்குதல்

பெரிய மொழி மாதிரிகள் (LLMs) , குவாண்டம் கணினி ஆகிய இரண்டு தொழில்நுட்பப் புரட்சிகளும் நவீன எண்ணிம உள்கட்டமைப்பை மறுவடிவமைப்பு செய்து வருகின்றன. அதிகப்படியான குளிரூட்டும்வசதியின் தேவை காரணமாக நம்முடைய சாதாரன பயன்பாட்டு வளாகத்தில் குவாண்டம் கணினியை நிறுவுகைசெய்வது என்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்பதால், இந்தத் துறை ஒரு கலப்பின முன்னுதாரணத்தை நோக்கி நகர்கிறது: அதாவது, மேககணினி API-கள் வழியாக, பாரம்பரிய CPU/GPU-க்களை தொலைநிலை குவாண்டம் கணினிசேவையாளர் (QCaaS) தளங்களுடன் இணைந்து செயல்படுவதாகும். திறமூலக் கருவிகள், குறிப்பாக … Read More: திற மூல மென்பொருளைக் கொண்டு கலப்பின செய்யறிவின் (AI)-குவாண்டம் உள்கட்டமைப்பை உருவாக்குதல் »

Windows-ஐ விட்டு Linux-க்கு மாறுகின்றோமா? நமக்குப் பிடித்த செயலிகளுக்குப் பதிலாக இந்த ஐந்து Linux மாற்றுகளைப் பயன்படுத்திகொள்க

பொதுவாக நாமனைவரும் Linux-க்கு மாறும்போது, ​​சில செயலிகளுக்கு Linux-இற்கான நேரடிப் பதிப்பு (native version) இல்லை என்பதை கவனித்திருக்கலாம். அப்போது, பொருந்தக்கூடிய தன்மையை ஏற்படுத்தும் மென்பொருளின் இணக்க அடுக்கின் (​​’compatibility layer’) மூலம் அந்தச் செயலியை இயக்க வேண்டியிருக்கும் என்று நமக்குச் சொல்லப்படலாம். ஆனால், அந்தச் சிக்கலான வழிமுறைக்குள் நுழைவதற்கு முன், அந்தச் செயலிக்கு இணையான ஒரு  திறமூல(‘open-source’) மாற்றைத் தேடுவது நல்லது. Phone Link-க்கு பதிலாக KDE Connect இது Android , iOS ஆகிய… Read More: Windows-ஐ விட்டு Linux-க்கு மாறுகின்றோமா? நமக்குப் பிடித்த செயலிகளுக்குப் பதிலாக இந்த ஐந்து… »

செய்யறிவின்(AI) நுழைவுவாயில்களுக்கு திறமூலம் ஏன் முக்கியமானது

Portkey, Helicone, Cloudflareஎன்பனபோன்றநிர்வகிக்கப்பட்ட செய்யறிவின்(AI) நுழைவுவாயில்கள் பல்வேறு வசதிவாய்ப்புகளை வழங்குகின்றன, ஆனால் அதனோடு கூடவே அதன் அளவு, இணக்கம் ஆகியவை சவால்களையும் கொண்டு வருகின்றன. திறமூல நுழைவுவாயில்கள் அவற்றின் மூன்று முக்கிய நன்மைகளின் மூலம் இவற்றைத் தீர்வுசெய்கின்றன: தரவு இறையாண்மை: நம்முடைய சொந்த VPC-க்குள் நினைவூட்டத் தூண்டல்(prompt ) தரவின் மீது முழுமையான கட்டுப்பாட்டினை கொண்டுள்ளது. செலவுத் திறன்: ஒரு கோரிக்கை அல்லது ஒரு இருக்கைக்கான கட்டணத்தை அறவேநீக்கம்செய்கிறது, மூலக் கணக்கீட்டிற்கு மட்டுமே செலவாகும். தனிப்பயனாக்கம்: தனிப்பயன்… Read More: செய்யறிவின்(AI) நுழைவுவாயில்களுக்கு திறமூலம் ஏன் முக்கியமானது »

மைக்ரோசாஃப்டின் பெரும் மாற்றம்: Azure Linux 4.0 ஓர்அறிமுகம்-

வட அமெரிக்காவில் நடைபெற்ற திறமூல உச்சி மாநாட்டில் , மைக்ரோசாஃப்ட் ஆனது தனது முதல் பொது-நோக்கு சேவையாளர் லினக்ஸ் விநியோகமான Azure Linux  4.0-என்பதை வெளியிடுவதாக அறிவித்தது. ஒரு காலத்தில் லினக்ஸை “ஒரு புற்றுநோய்” என்று முத்திரை குத்திய ஒரு நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரிக்கு இது ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றத்தைக் குறிக்கிறது. இன்று, மைக்ரோசாஃப்ட் ஆனது மேசைக்கணினியின் தளத்திற்கு வெளியே ஒரு லினக்ஸ்-மைய நிறுவனமாக திறம்பட செயல்படுகிறது, மேலும் அஸூர் வாடிக்கையாளர் உள்ளகங்களில் மூன்றில் இரண்டு… Read More: மைக்ரோசாஃப்டின் பெரும் மாற்றம்: Azure Linux 4.0 ஓர்அறிமுகம்- »

நம்மை அறியாமலேயே நாம் பயன்படுத்திடுகின்றமென்பொருட்களுக்கு ஆற்றல்வழங்குகின்ற திறமூலக் கருவிகள்

“திறமூலம்(open-source)” என்ற சொல் 1990-களின் பிற்பகுதியில் தான் புழக்கத்திற்கு வந்தது என்றாலும், 1950-கள் , 1960-களில் மென்பொருளின்நிரலாக்கம் பெரும் வளர்ச்சி கண்ட காலத்திலிருந்தே இந்தக் கொள்கை இருந்து வருகிறது. தொடக்ககால உருவாக்குநர்கள் தங்கள் குறிமுறைவரிகளையும் நெறிமுறை வடிவமைப்புகளையும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர்; 1969-ல் இணையத்தின் வருகையுடன் இந்த செயல்முறை மேலும் விரிவடைந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது திறமூல மென்பொருள் எங்கெங்கும் பரவியுள்ளது; அது வெளிப்படையாகத் தெரிந்தாலும் மறைந்திருக்கிறது, அதே சமயம் திரைக்குப் பின்னால் ஒரு புகழ்பெறாத (பிரபலமாகாத) கதாநாயகனாகவும்… Read More: நம்மை அறியாமலேயே நாம் பயன்படுத்திடுகின்றமென்பொருட்களுக்கு ஆற்றல்வழங்குகின்ற திறமூலக் கருவிகள் »

எல்லா காலத்திலும் எல்லாஇடத்திலும் பயன்படுத்திகொள்ளக்கூடிய மேசைக்கணினியின் மிக முக்கியமான மூன்று திறமூல பயன்பாடுகள்

இங்கு “மிக முக்கியமானது” என்று கூறுவது, GitHub இல் மிகவும் பிரபலமான, சக்திவாய்ந்த பயனர்களால் மிகவும் விரும்பப்படும் அல்லது அதிக சத்தமாக விவாதத்திற்கான சமூகத்தைக் கொண்ட செயல்திட்டத்தை குறிக்கவில்லை. கணினிமயமாக்கலின் திசையை அளவிடக்கூடிய வகையில் மாற்றிய மென்பொருளை குறிப்பிடப்படுகின்றது. பயனர் நடத்தையை அளவில் மாற்றிய கருவிகள், பில்லியன் டாலர் நிறுவனங்களை பதிலளிக்க கட்டாயப்படுத்தியது, தொழில்நுட்ப தரங்களை மாற்றியது அல்லது பொதுமக்கள் தங்கள் சாதனங்களிலிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை மறுவரையறை செய்தது. இந்த சூழலில், முக்கியத்துவம் என்பது அதிர்வுகள்… Read More: எல்லா காலத்திலும் எல்லாஇடத்திலும் பயன்படுத்திகொள்ளக்கூடிய மேசைக்கணினியின் மிக முக்கியமான மூன்று திறமூல பயன்பாடுகள் »

லினக்ஸ் அல்லாத திறமூல இயக்க முறைமைகள்

“திறமூலம்(open-source)” என்ற சொல்லை கேட்டால், உடன் லினக்ஸைப் பற்றிய நினைவே நம்மனைவருக்கும் வரும். இருப்பினும், லினக்ஸ் விநியோகங்கள் மட்டுமே திறமூல இயக்க முறைமைகள் அன்று. தற்போது லினக்ஸைத் தவிர ஏராளமான திறமூலஇயக்கமுறைமைகள் பயன்பாட்டில் உள்ளன. வேறு சில லினக்ஸ் பயன்பாட்டிற்குவருவதற்கு முன்பிருந்தே செயலில் இருந்துவருகின்றன அவ்வாறானவை பின்வருமாறு. Plan 9 From Bell Labs sci-fi B எனும் அறிவியல் புனைகதைதிரைப்படத்திற்கான செயல்திட்டம் 9 எனும் வான்வெளி என்பதற்கு பிறகு Plan 9 From Bell Labs(https://plan9.io/plan9/)எனும்… Read More: லினக்ஸ் அல்லாத திறமூல இயக்க முறைமைகள் »

சிறந்த ஐந்து திற மூல செய்யறிவு(AI)மாதிரி API வழங்குநர்கள்

அறிமுகம் Open‑weight எனும் மாதிரிகள்ஆனவை செய்யறிவின்(AI) பொருளாதாரத்தையே மாற்றி அமைத்துள்ளன. இன்றைய,மேம்படுத்துநர்கள் Kimi, DeepSeek, Qwen, MiniMax , GPT-OSS போன்ற சக்திவாய்ந்த மாதிரிகளைத் தங்களின் சொந்த உள்கட்டமைப்பில் முழுமையாக இயக்கி, தங்கள் அமைப்புகளின் மீது முழுமையான கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொண்டு, அவற்றை வளாகத்தில் பயன்படுத்த முடியும். இருப்பினும், இந்தச் சுதந்திரம் ஒரு குறிப்பிடத்தக்க சமரசத்துடன் வருகிறது. அதிநவீன Open‑weight எனும்மாதிரிகளை இயக்குவதற்கு பொதுவாக மிகப்பெரிய வன்பொருள் வளங்கள் தேவைப்படுகின்றன; பெரும்பாலும் நூற்றுக்கணக்கான ஜிகாபைட் அளவுகளுடானான GPU எனும்நினைவகம்… Read More: சிறந்த ஐந்து திற மூல செய்யறிவு(AI)மாதிரி API வழங்குநர்கள் »