Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

இந்தியாவின் மாநில ரீதியிலான கல்வி வரைபடம் வரைவது எப்படி?

  சில நாட்களிற்கு முன்னர் நான் தமிழ்நாடு மாவட்ட ரீதியிலான literacy map ஐ வெளியிட்டிருந்தேன். இதனை நான் எவ்வாறு செய்தேன் என்பதை எழுதும்படி நண்பர் tshrinivasan கேட்டிருந்தார். Write a blog on how to create such maps. — த.சீனிவாசன் (@tshrinivasan) December 29, 2018 இப்போது நாம் இங்கு இந்தியாவின் மாநில ரீதியிலான literacy map ஐ உருவாக்கப போகின்றோம். தேவையானவை   1 – QGIS ஒரு open source… Read More »

open-tamil மூலம் தமிழுக்கான வேர்ச்சொல் காணும் நிரல் வெளியீடு

தமிழில் வேர்ச்சொல் வடிகட்டியை open-tamil பைதான் நிரல் தொகுதி மூலம் வழங்குகிறோம். ஆசிரியர்: முத்தையா அண்ணாமலை <ezhillang@gmail.com> சுருக்கம்: இந்த கட்டுரையில் நான் சமீபத்தில் 2013-இல் வெளியிடப்பட்ட தமிழ் வேர்ச்சொல் பகுப்பாய்வு வடிகட்டியை பொது பயனுக்கு மாற்றியது பற்றி விரிவாக எழுதுகிறேன். இந்த வேலைப்பாடுகள் முழுதுமே திறமூல மென்பொருள் சூழலினால் உருவானது என்பதை மனதில் கொள்வது முக்கியமானதும் கூட. தமிழின் கணிமை ஆய்வின் பொது வளர்ச்சிக்கு இத்தகைய பொதுவெளியில் உள்ள மென்பொருள்கள் தொடர்ந்து உதவும் என்றும், உருமாறி… Read More »

NLP பயிற்சிப் பட்டறை – SRM வள்ளியம்மை பொறியியற் கல்லூரி, சென்னை – நிகழ்வுக் குறிப்புகள்

கணியம் அறக்கட்டளை  சார்பாக, சென்னை வள்ளியம்மை பொறியியற் கல்லூரி, சென்னையில் 05.02.2019 இயல்மொழி ஆய்வுக் கருவிகள்  பயிற்சிப் பட்டறை (Natural Language Processing Workshop) நடத்தப்பட்டது. திரு. இலட்சுமிகாந்தன், இப்பட்டறையை நடத்தினார். கலந்து கொண்ட மாணவர்கள் ஏற்கெனவே பைதான் மொழி கற்றிருந்ததால், நேரடியாக NLTK, SpaCy பைதான் நிரல் தொகுதிகள் வழியே பயிற்சி அளிக்கப்பட்டது. பின்வரும் தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. Natural Language Processing in a nutshell Regular Expression Tokenization Simple topic identification… Read More »

1000 நூல்களை ஒருங்குறி வடிவில் வாங்க நன்கொடை வேண்டுதல்

கணியம் அறக்கட்டளை   அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப,  தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து அறிவுத் தொகுதிகளும்,  வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலையும் பணி இலக்காகக் கொண்டு கணியம்  அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது. அதற்கிணங்க, இது வரை Kaniyam.com  தளத்தில் கடந்த  7 ஆண்டுகளாக, கட்டற்ற மென்பொருள் சார்ந்த கட்டுரைகளும், மின்னூல்களும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. FreeTamilEbooks.com தளத்தில் 5.5 ஆண்டுகளில் 500 மின்னூல்கள் இது வரை வெளியிடப்பட்டுள்ளன.  தமிழ்கூறு… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – அட்டைப்படம் உருவாக்கம்

சங்க இலக்கியங்க மின்னூல்களுக்கான அட்டைப்படம் உருவாக்கம் நிகழ்வு பிப்ரவரி 10, 2019 அன்று நடைபெற்றது. கலந்து கொண்டோர் அன்பரசு அன்வர் தகவல் உழவன் த. சீனிவாசன் கருவெளி இராசேந்திரன் (இணைய வழியில்) லெனின் குருசாமி (இணைய வழியில்) முதலில் GIMP பற்றிய அறிமுகம் தரப்பட்டது. பின் ஒரு உதாரண அட்டைப்பட உருவாக்கிய பின், அனைவரும் அட்டைப்படங்கள் உருவாக்கினர். Git, Github, Issues, Workflow, Labels ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.  மதிய உணவுக்குப் பின்னும் தொடர்ந்த நிகழ்வு 5 மணிக்கு… Read More »

அட்டைப்படம் உருவாக்கலாம் வாங்க!

  பழந்தமிழ் சங்க இலக்கியங்கள் நூல்களை அனைவரும் எளிதில் பெறும் வகையில் ‘சங்க இலக்கியம்‘ என்ற ஆன்டிராய்டு செயலியாகவும், ஒரு இணையதளம் வழியாகவும் வழங்க திட்டமிட்டு வருகிறோம். 200-250 PDF கோப்புகளை சேகரித்து வருகிறோம். அவற்றுக்கான அட்டைப்படங்களை உருவாக்கும் ஒரு நிகழ்வை வரும் ஞாயிறு அன்று ஏற்பாடு செய்துள்ளோம். மின்னூல்களுக்கான அட்டைப்படம் உருவாக்கும் ஆர்வமுள்ள அனைவரையும் அழைக்கிறோம். நாள் – பிப்ரவரி 10, 2019 நேரம் – காலை 9.00 முதல் 1.00 வரை இடம் –… Read More »

கணியம் அறக்கட்டளை சனவரி 2019 மாத அறிக்கை

கணியம் அறக்கட்டளை சனவரி 2019 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். நிகழ்ச்சிகள் இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை – TamilChairUK – சென்னையில்… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை – TamilChairUK – சென்னையில் கலந்துரையாடல்

சனவரி 07, 2019 அன்று மாலை, சென்னை சவேரா விடுதியில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்குதல் தொடர்பான ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்து கொண்டோர் 1. சிவா பிள்ளை, இலண்டன் தமிழ்த்துறை ஒருங்கிணைப்புக் குழு 2. மு. கனகலட்சுமி 3. பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ், இணை ஆணையர், சென்னை பெருநகர காவல்துறை 4. அக்னி, ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் பேரவை 5. வாசுகி, தலைமை நிலைய செயற்பாட்டாளர், உலகத் தமிழர் பேரவை 6. சி. பெரியசாமி 7. மு.… Read More »

இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றி – வெளியீடு

  வணக்கம். இன்று tts.kaniyam.com என்ற இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றியை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இது ஒரு கட்டற்ற மென்பொருள். மூலநிரல் – github.com/KaniyamFoundation/tts-web Ubuntu/Linux, Python, Django, Celery, MySQL, ஆகியவை கொண்டு உருவாக்கப்பட்டது. அறிமுகம் இந்த மென்பொருள் உங்கள் தமிழ் உரைக்கோப்புகளை (text file) ஒலிக்கோப்புகளாக (MP3) மாற்ற உதவுகிறது. (TTS Text-To-Speech) எப்படி மாற்றுவது? இதில், நீங்கள் ஒரு கணக்கு உருவாக்கவும். tts.kaniyam.com/signup/ உங்கள் மின்னஞ்சலுக்கு, புது கணக்கை… Read More »

Arduino One Pixel Camera எனும் படபிடிப்பு கருவியை கொண்டு அனைத்துபடங்களயும் திரையில் காட்சியாக தோன்றசெய்து காணலாம்

தற்போது நாம் வாழும் இந்த 21 ஆம்நூற்றான்டில் படபிடிப்பு செய்வது எனும் பணியானது மிகவும் எளிதாகிவிட்டது இதற்காகவென தனியாக படபிடிப்பு கருவியெதையும் நாம் வாங்கத் தேவையில்லை நம்முடைய கையிலிருக்கும திறன்பேசி அல்லது கைபேசியே படப்பிடிப்பு செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் தயாராக இருக்கும் போது நாம் மிகவும் எளிதாக படபிடிப்பு செய்யலாம் அல்லவா எனவே எந்தவிடத்திலும் எந்தநேரத்திலும் புகைப்படம் எடுக்கும் கருவி நம்முடைய கைவசமுள்ள இந்த காலத்தில், மிக மெதுவான மிக குறைந்த தெளிவுத்திறன் கொண்ட பழங்காலத்திய… Read More »