Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

தமிழில் பைதான் நிரல் மொழி – செய்முறைப் பயிற்சி – மார்ச்சு 24 2019 – தாம்பரம், சென்னை

பைதான் நிரல் மொழி, கற்க எளிதானது. எல்லாத் துறைகளுக்குமான நிரல்கள் எழுதும் திறன்கள் கொண்டது. கணியம் அறக்கட்டளையின் மூலமாக பல்வேறு தொடர் பயிற்சி வகுப்புகளை நிகழ்த்த உள்ளோம். முதல் பயிற்சியாக பைதான் மொழி. இப்பயிற்சிக்கு பைதான் மொழி கற்கும் ஆர்வமுள்ள அனைவரையும் அழைக்கிறோம். நாள் – மார்ச்சு 24, 2019 ஞாயிறு நேரம் – காலை 9.00 முதல் 4.00 வரை இடம் – தரைதளம் 4, சுபிக்‌ஷா அடுக்ககம், 42, வியாசர் தெரு, கிழக்கு தாம்பரம்,… Read More »

தமிழின் அனைத்து பெயர்ச்சொற்கள் தொகுப்பு திட்டம்

வணக்கம், சொற்பிழைத்திருத்தி, இலக்கணப் பிழைத்திருத்தி, வேர்ச்சொல் காணல் போன்ற பலவகை இயல்மொழி ஆய்வுகளுக்கு அடிப்படையான தேவையாக இருப்பது பெயர்ச்சொற்கள் தொகுப்பு. தமிழில் அனைத்து பெயர்ச்சொற்களையும் ஓரிடத்தில் தொகுத்தல் மிகவும் பயன்தரும். இதுவரை தமிழின் பெயர்ச்சொற்கள் பொதுப் பயன்பாட்டு உரிமையில் எங்கும் பகிரப்படவில்லை. ஆங்காங்கே சில தனியுரிம தொகுப்புகள் மட்டுமே உண்டு. எனவே பெயர்ச்சொற்களைத் தொகுப்பதை செய்ய வேண்டிய பெரும் தேவை உள்ளது. github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues/18 இங்கு ஏற்கெனவே கிடைக்கும் பெயர்ச்சொற்களின் இணைப்புகளை எழுதி வருகிறோம். அங்குள்ள பெயர்களை எடுத்து… Read More »

தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைக்கான அழைப்பு

தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார். 2018 ஆம் ஆண்டுக்கான விருதுக்கான… Read More »

கணியம் அறக்கட்டளை பெப்ரவரி 2019 மாத அறிக்கை

Report in Tamil Report in English கணியம் அறக்கட்டளை பெப்ரவரி 2019 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். நிகழ்ச்சிகள் NLP… Read More »

இந்தியாவின் மாநில ரீதியிலான கல்வி வரைபடம் வரைவது எப்படி?

  சில நாட்களிற்கு முன்னர் நான் தமிழ்நாடு மாவட்ட ரீதியிலான literacy map ஐ வெளியிட்டிருந்தேன். இதனை நான் எவ்வாறு செய்தேன் என்பதை எழுதும்படி நண்பர் tshrinivasan கேட்டிருந்தார். Write a blog on how to create such maps. — த.சீனிவாசன் (@tshrinivasan) December 29, 2018 இப்போது நாம் இங்கு இந்தியாவின் மாநில ரீதியிலான literacy map ஐ உருவாக்கப போகின்றோம். தேவையானவை   1 – QGIS ஒரு open source… Read More »