Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

சங்க இலக்கியம் – குறுஞ்செயலி வெளியீட்டு விழா – நிகழ்வுக் குறிப்புகள்

இன்று, சென்னை நந்தனம் அரசினர் கலைக்கல்லூரியில், சங்க இலக்கியம் – குறுஞ்செயலி வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த செயலியில் 1820 முதல் 1950 வரையில் வெளியிடப்பட்ட பல்வேறு சங்க இலக்கிய நூல்களை கைபேசியில் படிக்கும் வகையில் 6 அங்குல PDF கோப்புகளாகப் படிக்கலாம்.     இதுவரை சுமார் 1000 மின்னூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை குட்டி PDF கோப்புகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, செயலி உருவாக்கம் முடிவடைந்து, இன்று வெளியீட்டு விழா நடைபெற்றது. கல்லூரி… Read More »

ஆதாரமா? சேதாரமா? நிகழ்ச்சி – FSFTN உறுப்பினர்களின் கருத்து – காணொளி

தந்தி தொலைக்காட்சியின் “ஆதாரமா? சேதாரமா?” நிகழ்ச்சியில் நம் FSFTN உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். ஆதார் அட்டையின் பிரச்சனைகளையும், அதன் பயன்பாட்டில் உள்ள ஆபத்துகளையும் எடுத்துரைத்தனர். #FSFTN #ThanthiTV #Media #AadhaarFails #News #… -https://peertube.mastodon.host/videos/watch/1357e9ea-5108-4163-a98e-ee6693895d87

கேள்விச் செல்வம்

நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது என் தாத்தா எங்கள் ஊர் அரசு நூலகத்தை அறிமுகப்படுத்தினார் (என் ஊர் ஆற்காடு, வேலூர் மாவட்டம்).  மிகுந்த ஆர்வத்தோடு சிறார் நூல்களை படிக்கத் தொடங்கினேன். புத்தகங்கள் என்னை வெவ்வேறு உலகத்திற்குள் அழைத்து செல்வது எனக்கு வியப்பாகவும் மிக ஆர்வமாகவும் இருந்தது.  தொடர்ந்து பல புத்தகங்களை வாசித்தேன். வயது வளர்ந்தது, புத்தக வாசிப்பும் வகைகளும் அடுத்தடுத்த தளங்களை நோக்கிச் சென்றன. சரியாக நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது, இணையத்தில் இருந்து… Read More »

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! – இரா. அசோகன் – மின்னூல்

மூலம் : opensource.com தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன் மின்னஞ்சல் : ashokramach@gmail.com அட்டை படம் மூலம் : opensource.com மின்னூலாக்கம் : த . தனசேகர் மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : creativecommons.org/licenses/by-sa/3.0/ பக்கத்தில் உள்ள கிரியேடிவ் காமன்ஸ் நெறிகளையொத்து வழங்கப்படுகின்றன. இதன்படி, கணியத்தில் வெளிவரும் கட்டுரைகளை கணியத்திற்கும் படைத்த எழுத்தாளருக்கும் உரிய சான்றளித்து, நகலெடுக்க, விநியோகிக்க, பறைசாற்ற, ஏற்றபடி அமைத்துக் கொள்ள, தொழில் நோக்கில் பயன்படுத்த அனுமதி… Read More »

எளிய தமிழில் Agile/Scrum – மென்பொருள் திட்ட மேலாண்மை – இரா. அசோகன் – மின்னூல்

எளிய தமிழில் Agile/Scrum மென்பொருள் திட்ட மேலாண்மை ஆசிரியர் – இரா. அசோகன் ashokramach@gmail.com மின்னூல் வெளியீடு    : www.kaniyam.com/ அட்டைப்படம், மின்னூலாக்கம் : பிரசன்னா udpmprasanna@gmail.com உரிமை : Creative Commons Attribution – ShareAlike 4.0 International License.   Agile/Scrum – மென்பொருள் திட்ட மேலாண்மை இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது.… Read More »

எளிய தமிழில் Big Data – மின்னூல் – து.நித்யா

  நூல் : எளிய தமிழில் Big Data ஆசிரியர் : து.நித்யா மின்னஞ்சல் : nithyadurai87@gmail.com அட்டைப்படம், மின்னூலாக்கம் : த.சீனிவாசன் tshrinivasan@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : Creative Commons Attribution-ShareAlike 4.0 Unported License உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   முன்னுரை ‘Data is the new Oil’ என்பது புதுமொழி. இணைய தளங்கள், கைபேசி செயலிகள் யாவும் தம் பயனரின் அனைத்து செயல்களையும் தகவல்களையும் சேமித்து… Read More »

17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு – ஜூலை 6,7,8, 2018 – கோவை

உத்தமம் என்ற அமைப்பு நடத்தும் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு ஜூலை 6,7,8, 2018 தேதிகளில் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், தமிழ்க்கணிமை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கின்றனர், மேலும், மக்கள் அரங்கம் என்ற வகையில் கீழ்வரும் செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. (கட்டணம் உண்டு. 600ரூ அரைநாள் பயிற்சி, 900 ரூ முழு நாள் பயிற்சி) தமிழ் விக்கிமூலம் Git – ஒரு அறிமுகம் Python –… Read More »