Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

எழில் மொழி – பங்களிப்பாளர் சந்திப்பு 2018 – சில குறிப்புகள்

எழில் மொழி என்பது, தமிழிலேயே கணினியில் நிரலாக்கம் செய்ய உதவும் ஒரு நிரல் மொழி. இது ஒரு கட்டற்ற மென்பொருள். மூல நிரலுடன், யாவருக்கும் பகிரும், மாற்றங்கள் செய்து வளர்த்தெடுக்கவும் உரிமையோடு தரப்படுகிறது. அமெரிக்காவில் கணினி விஞ்ஞானியாகப் பணிபுரியும், திரு. முத்து அண்ணாமலை அவர்கள் 2012 ஆண்டுகளில், தமிழில் ஒரு நிரல் மொழியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டார். அதை ஒரு கட்டற்ற மென்பொருளாக வெளியிட்டார். அதைக்கண்ட பல கட்டற்ற மென்பொருள் நிரலாளர்கள், இணைந்து பங்களிக்கத்… Read More »

போய் வாருங்கள் கோபி

நேற்று தகடூர் கோபி (higopi) காலமானார். 42 வயதே ஆனவர். மாரடைப்பு வரும் வயதே அல்ல. நான் கணினி கற்க முயன்ற காலத்தில், தமிழையும் ஒருங்குறி எழுத்துருக்களையும் கணினிக்கு அறிமுகம் செய்தவர்களில் இவரும் ஒருவர். பல்வேறு குறிமுறைகள் இருந்த காலத்தில், அவற்றுக்கு ஒருங்குறி மாற்றியைத் தந்தவர். பெரும் கணினிப் பேராசிரியர்களும் நிறுவனங்களும் மட்டுமே தமிழ்க்கணிமைக்குப் பங்களித்த போது, கணினி நிரலாக்கம் கற்ற எவரும் தமிழ்க்கணிமைக்குப் பங்களிக்கலாம் என்ற ஆர்வத்தை உருவாக்கியவர். பட்டாம்பூச்சி விளைவின் படி, எனக்கு தமிழ்க்கணிமையில்… Read More »

கட்டற்ற வரைபடங்களைக் கொண்டாடுவாம் – OpenStreetMaps.org – ஓர் அறிமுகம் – காணொளி

OpenStreetMaps.org என்பது ஒரு கட்டற்ற வரைபடத் தளம் ஆகும்.  OpenStreetMaps.org ல் உலகின் அனைத்து இடங்கள், தெருக்கள், வணிக இடங்கள், கோயில்கள் என அனைத்து இடங்களையும் சேர்க்கலாம். உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் இந்த தரவுகள் சேர்க்கப்படுகின்றன. கூகுள் மேப் போன்ற தனியுரிம வரைபடத் தளங்கள் போலன்றி, இந்த வரைபடங்களை பயன்படுத்துவதற்கு யாதொரு தடையும் இல்லை. கட்டற்ற உரிமத்துடனே வழங்கப் படுவதால், வணிக ரீதியான செயலிகளையும் உருவாக்கிக் கொள்ளலாம். புதுவையைச் சேர்ந்த நண்பர் பிரசன்னா, ( prasmailme@gmail.com )… Read More »

நிகழ்நேரப் பெருந்தரவு – அறிமுகக் காணொளிகள்

ElasticSearch, Logstash, Kibana என்ற மென்பொருட்கள் மூலம் நிகழ்நேரப் பெருந்தரவு ஆய்வுகளைச் (Real Time Bigdata Analysis) செய்தல் பற்றி நமது எழுத்தாளர் நித்யா அவர்களின் காணொளிகள் இங்கே.   உரை வடிவில் இங்கே – www.kaniyam.com/category/elk-stack/     நீங்களும்  இதுபோல கட்டற்ற மென்பொருட்களுக்கு விளக்கக் காணொளிகளை உருவாக்கி அளிக்க வேண்டுகிறோம். நன்றி.

புத்தகங்கள், மொத்தமாய்…

புத்தகப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான பதிவுதான் இது….. இந்த விஞ்ஞான உலகில் புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை  மிகவும் குறைவாக இருப்பது கண்டு வருத்தம் அளிக்கிறது…  எப்பொழுது டி.வி வந்ததோ அப்பொழுதிருந்து மக்களுக்கு புத்தகம் வாசிக்கும்பழக்கம் பாதியாக குறைந்திருந்தது. பிறகு செல்போன், இன்டெர்நெட், பேஸ்புக் வந்ததில் இருந்து மக்களின் புத்தகம்வாசிக்கும் சதவீதத்தின் மதிப்பு சரிந்து போய் இருப்பது இப்பொழுது தெரிகிறது…. புத்தகம் படிப்பதின் அவசியத்தை நான் நன்கு உணர்ந்து வைத்திருக்கின்றேன்….நம் மன உளைச்சலை போக்கும் சக்தி ஒரு புத்தகத்திற்கு உண்டு…. ஒரு… Read More »

தமிழ் உரை-ஒலி மாற்றி – கட்டற்ற மென்பொருள் – IITM – SSN கல்லூரி – நிறுவுதல்

IITM மற்றும் SSN பொறியியல் கல்லூரி இணைந்து தமிழுக்கு ஒரு சிறந்த உரை ஒலி மாற்றியை கட்டற்ற மென்பொருளாக, மூல நிரலுடன், வெளியிட்டுள்ளன. www.iitm.ac.in/donlab/tts/voices.php அந்நிரலை இன்று வெற்றிகரமாக உபுண்டு கணினியில் நிறுவினேன். அதன் சோதனை ஓட்டத்தை இங்கே கேட்கலாம் – soundcloud.com/shrinivasan/tamil-tts-demo நிறுவுதலுக்கான விரிவான விளக்கம் இங்கே – goinggnu.wordpress.com/2017/09/20/how-to-compile-tamil-tts-engine-from-source/ ஒரே கட்டளையில் எளிதாக நிறுவ, ஒரு நிரல் எழுதினேன். அது இங்கே github.com/tshrinivasan/tamil-tts-install தற்போதைக்கு ஒரு பத்திக்கு மட்டுமே உரையை ஒலியாக மாற்றுகிறது. விரைவில்… Read More »

Big Data – ஓர் அறிமுகம்

source – commons.wikimedia.org/wiki/File:BigData_2267x1146_white.png நமது ஊரில் உள்ள பழக்கப்பட்ட மளிகைக் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கும்போது, அந்தக் கடைக்காரருக்கு நம்மைப் பற்றிய விவரம் முழுவதும் தெரிந்திருக்கும். மேலும் அவர் நம்முடன் கொண்ட பழக்கத்தினால் நமக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதை சற்று கணித்து வைத்திருப்பார். எனவே நமது ரசனைக்கேற்ப அவரிடம் ஏதேனும் புது சரக்குகள் வந்து இறங்கியிருப்பின், அதனை நம்மிடம் காட்டி ‘இது உங்களுக்கு மிகவும் பிடிக்கும். பயன்படுத்தித்தான் பாருங்களேன்” என்பார். நாமும் “சரி! வாங்கித்தான்… Read More »

சென்னை விக்கி நிரல் திருவிழா, சூலை 23 2017

வரும் ஞாயிறு அன்று சென்னை லினக்சு பயனர் குழு நடத்தும் விக்கி நிரல் திருவிழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். இடம் Hexolabs Interactive Tech Pvt Ltd, Type II/17, Dr.VSI Estate, திருவான்மியூர், சென்னை 41. தொலைபேசி – 044 42169699 NIFT அருகில், Origin Towers எதிரில். நேரம் ஞாயிறு 23.07.2017 காலை 10.00 முதல் மாலை 5 வரை.   அவசியமானவை மடிக்கணினி கொண்டுவருதல் அவசியம். குறைவான இணைய இணைப்பே இருப்பதால்,… Read More »

தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா – ஏப்ரல் 23 – சென்னை

நீங்கள் கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கத்தில் பங்கு பெற விரும்புகிறீர்களா? தமிழுக்கு உங்கள் நிரலாக்கத் திறன் மூலம் ஏதேனும் பங்களிக்க ஆர்வமுண்டா? பிற கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்களை சந்திக்க வேண்டுமா? இதோ ஒரு வாய்ப்பு. தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா நாள் – ஏப்ரல் 23, 2017, ஞாயிறு நேரம் – காலை 10.00 – மாலை 5.00 இடம் – மணவை முஸ்தபா நினைவகம், அறிவியல் தமிழாய்வு அரங்கு, A E 103, 6வது… Read More »

ராஸ்பெர்ரி பை – கையடக்கக் கணிப்பொறி

Image : commons.wikimedia.org/wiki/File:Pre-release_Raspberry_Pi.jpg CC-By-SA ராஸ்பெர்ரி பை என்பது ஒரு மினி கையடக்கக் கணிப்பொறியாகும், இது முக்கியமாக மாணவர்கள் எளிதாக கணினி அறிவியலை கற்றுக் கொள்ளும் பொருட்டு லண்டனில் உள்ள ஒரு நிறுவனம் உருவாக்கியது. விலையும் மலிவாக இருப்பதால் வாங்கி உபயோகிப்பதற்கு எளிதாக இருக்கிறது(2800 ரூபாய்), நாம் சாதாரண கணினிகளில் செய்யக் கூடிய வேலைகளை இதிலும் செய்ய முடிகிறது, இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இக்கணினியின் மூலம் நம்முடைய வீட்டிலிருக்கும் எலக்ரிக்கல் மற்றும் எலக்ரானிக்ஸ் பொருட்களை இயக்கவும் நிறுத்தவும்… Read More »