Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

12 ஆம் வகுப்பு புதிய தமிழ் பாடத்தில் மின்னூல் உருவாக்கம் – ஆசிரியர்களுக்கான பயிற்சி – நிகழ்வுக் குறிப்புகள்

தமிழ்நாட்டின் புதிய பாடத்திட்டங்களின் படி, 11 ஆம் வகுப்பில் தமிழ் தட்டச்சு தொடங்கி வலைப்பதிவு உருவாக்கம் வரை கற்கின்றனர். 12ஆம் வகுப்பு, தமிழுக்கான புதுப் பாடத்திட்டத்தில், மின்னூல்கள் உருவாக்கம் பற்றிய அறிமுகம், செய்முறைப் பயிற்சிகளை சேர்க்கலாம் என்று தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பாடநூல் ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதற்காக, நவம்பர் 29, 2018 அன்று சென்னை DPI வளாகத்தில், த.சீனிவாசன், பாடநூல் எழுதும் ஆசிரியர்களுக்கென ஒரு மின்னூல் உருவாக்கம் பயிற்சி அளித்தார்.  மின்னூலின் கட்டமைப்பு, முன்விவரம், பின்விவரம், மேலடி,… Read More »

தமிழும் தொழில்நுட்பமும் – உரை – காரைக்குடி – நிகழ்வுக் குறிப்புகள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் காரைக்குடி கிளையின் நிகழ்வு ஒவ்வொரு மாதமும் 2வது மற்றும் 4 வது சனிக்கிழமை மகரிக்ஷி வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதில் நவம்பர் 10 2018 ல்  நடைபெற்ற நிகழ்வில் ‘தமிழும் தொழில்நுட்பமும்’ என்ற தலைப்பில் உரையாற்ற வாய்ப்புக் கிடைத்தது. கணியம் அறக்கட்டளை சார்பாக லெனின் மற்றும் பாலபாரதி கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர்களுக்கு கணினியில் ஒருங்குறியின் முக்கியத்துவம், தமிழ் விக்கிபீடியா, விக்கிமூலம் மற்றும்… Read More »

விக்கிப்பீடியா:ஆசிய மாதம்

மூலம் – ta.wikipedia.org/s/4r3v விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் ஆசிய விக்கிப்பீடியக் குமுகங்களுக்கிடையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஆசிய மாதம் (Asian Month) என்னும் தொடர்தொகுப்பு நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வை 2018 நவம்பர் மாதத்தில் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பல்வேறு மொழிகளில் அமைந்த விக்கிப்பீடியாக்களிலும் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் பங்குகொள்ளும் விக்கிப்பீடியர்கள் ஆசியா தொடர்பான தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளை உருவாக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். விக்கிப்பீடிய ஆசியக் குமுகத்தினர் தமது நட்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கு அமைந்ததாய் குறைந்தது… Read More »

open-tamil பயிற்சிப் பட்டறை – SRM வள்ளியம்மை பொறியியற் கல்லூரி, சென்னை – நிகழ்வுக் குறிப்புகள்

கணியம் அறக்கட்டளை, மற்றும் கணித்தமிழ்ப் பேரவை சார்பாக, சென்னை வள்ளியம்மை பொறியியற் கல்லூரி, சென்னையில் 16.11.2018 கணித்தமிழ் பயிற்சிப் பட்டறை (Tamil Computing Workshop) நடத்தப்பட்டது. த.சீனிவாசன் இப்பட்டறையை நடத்தினார். கலந்து கொண்ட 30 மாணவர்களும் முதல் ஆண்டு மாணவர்கள். கணினி, இயந்திரவியல், மின்னணுவியல், உயிரி நுட்பவியல் என பல துறை மாணவர்களும் இருந்தனர். முதலாம் ஆண்டு மாணவர்கள் முதல் கணினி மொழியாக, பைதான் கற்று வருகின்றனர். ஏற்கெனவே பைதான் கற்றிருப்பதால், தமிழ்க்கணிமை பற்றிய பயிற்சியை அளிக்க… Read More »

கணியம் அறக்கட்டளை செப்டம்பர், அக்டோபர் 2018 மாத அறிக்கை

  தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். அறக்கட்டளை செய்திகள் கணியம் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது. www.kaniyam.com/kaniyam-foundation-international-day-against-drm/ வங்கிக் கணக்கு உருவாக்கப்பட்டது நிகழ்ச்சிகள் விக்கி மூலம்… Read More »

எளிய தமிழில் JavaScript – மின்னூல் – து.நித்யா

அழகான, பல்வேறு வசதிகள் கொண்ட இணைய தளங்களை உருவாக்க HTML, CSS, JavaScript, Jquery ஆகிய நுட்பங்களை அடிப்படை. இவை பற்றி நான் கற்றவற்றை கணியம் இதழில் தொடராக எழுதினேன். அவை மின்னூலாகவும் வெளிவருவது மகிழ்ச்சி. எங்கள் திருமண நாளான இன்று இந்த மின்னூல் வெளிவருவது கூடுதல் மகிழ்ச்சி. தமிழில் கணிணி நுட்பங்களைப் பகிர, ஒரு களமாக உள்ள ‘கணியம்’ தளத்தில், இதுவரை வெளியான எனது மின்னூல்களுக்கு வாசகர்கள் தரும் ஆதரவு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. “தேமதுரத் தமிழோசை… Read More »

மென்பொருள் சுதந்திர தின விழா – 2018 – நிகழ்வுக் குறிப்புகள்

அக்டோபர் 27, 2018 அன்று கணியம் அறக்கட்டளை சார்பாக மென்பொருள் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. 15 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், உரையாடல்களும், கேள்விகளும், பதில்களும் நிரம்பியது.   பாரதி கண்ணன் நிகழ்வின் அறிமுகம் செய்தார். இராமன் கட்டற்ற மென்பொருள் அறிமுகம், அவற்றின் அவசியம், வரலாறு, தற்போதைய வளர்ச்சி நிலைகள், லினக்சு பயனர் குழுக்கள், சென்னை குழு பற்றி பேசினார். பாஸ்கர், RaspberryPi/LibreElec கருவியை விளக்கினார். கட்டற்ற மென்பொருள், கட்டற்ற வனெபொருளின் அவசியத்தை வலியுறுத்தினார். சீனிவாசன் பல்வேறு… Read More »

விக்கிப்பீடியா – பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018 – நேரடி சந்திப்பு – திருச்சி, அக்டோபர் 28 2018

ta.wikipedia.org/s/7dn8 பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018 பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, இந்திய விக்கி அறிவியல் மாதம் 2018ஐ முன்னிட்டு பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). இதன் நோக்கம் பெண் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதும், பெண்கள் நலன் சார்ந்த கட்டுரைகளைச் செம்மைப்படுத்துவதும் ஆகும். பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018 தொடர்தொகுப்பு நிகழ்வின் ஒரு பகுதியாக அக்டோபர் மாதம் 28ஆம் திகதி ஞாயிறு அன்று நேரடி சந்திப்பு நடைபெறவுள்ளது.… Read More »

மென்பொருள் சுதந்திர தின விழா – 2018 – தாம்பரம், சென்னை – அக்டோபர் 27 – முழுநாள்

  உங்கள் கணினியில் உள்ள மென்பொருட்கள் உங்களுடையவைதானா? மென்பொருட்களை ஏன் பகிர வேண்டும்? உங்கள் கணினிகளில் வைரஸை நிரந்தரமாக ஒழிக்கலாமா? இலவசமாக, முழு உரிமைகளுடன் பல்லாயிரம் மென்பொருட்கள் கிடைப்பது தெரியுமா? அறிவோம் வாருங்கள். நிகழ்ச்சி நிரல் 10.00 – 11.00 – கட்டற்ற மென்பொருள் – ஒரு அறிமுகம் 11.00 – 12.00 – பல்வேறு கட்டற்ற மென்பொருட்களின் அறிமுகம் 12.00 – 1.00 – காப்புரிமை, கிரியேட்டிவ் காமன்ஸ், விக்கிப்பீடியா – ஒரு அறிமுகம் 1.00… Read More »

மென்பொருள் சுதந்திர தினம்- 2018 – விழுப்புரம் – அக்டோபர் 14 2018

மென்பொருள் சுதந்திர தினம்- 2018 விழுப்புரம் அனைவருக்கும் வணக்கம், விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம், இந்த வருடம் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி மென்பொருள் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. சுதந்திர மென்பொருள் தினமானது உலகெங்கிளும் உள்ள கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் ஒன்றாக கூடி, சுதந்திர மென்பொருள், சுதந்திர கலாச்சாரம், சுதந்திர வன்பொருள், கருவிகள் பற்றி விவாதித்து, உரையாடி, பயன்படுத்தி காட்டும் நாள். இங்கு 15-20 நிலையகங்கள் (Stalls) வைக்கப்படும்.… Read More »