Author Archives: ச. குப்பன்

AI / ML இல் காட்சிப்படுத்தலுக்கான பிரபலமான திறமூல கருவிகள்

காட்சிப்படுத்தலின் கருவிகளும் தொழில் நுட்பங்களும் நுண்ணறிவுகளை படமாகவரையவும் AI / ML செயல் ; செயல்திட்டங்களின் போக்குகள் வடிவங்கள் ஆகியவற்றைக் கண்டறியவும் உதவுகின்றன. மூல AI / ML தரவுகளை சக்திவாய்ந்த காட்சிப்படுத்தல்களாக மாற்றுவதற்காக பல்வேறு திற மூல கருவிகள் வசதியான குறைந்த விலை தீர்வுகளாக அமைகின்றன. இந்த கட்டுரை இந்த கருவிகளில் ஒருசிலவற்றை பட்டியலிடுகிறது. AI / ML செயல்திட்டங்களில் தரவுகளை காட்சிப்படுத்தல் முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் எந்தவொரு இயந்திர கற்றல் மாதிரியின் பயன்பாட்டிற்கும்… Read More »

சி ++ எனும் கணினிமொழியில் கோப்புகளை எவ்வாறு படிப்பது எழுதுவது?

சி ++ இல், தாரையோட்ட(stream) இயக்கிகளான >> , << ஆகியவற்றுடன் I/O எனும் தாரை யோட்ட இனத்துடன் இணைத்து கோப்புகளைப் படித்திடுமாறும் எழுதிடுமாறும் செய்யலாம். கோப்புகளைப் படிக்கும்போது அல்லது எழுதும்போது, வன்தட்டில் ஒரு கோப்பைக் குறிக்கும் ஒரு இனத்தின் உதாரணத்திற்கு அந்த இயக்கிகள் பயன்படுத்தி கொள்ளப்படும். இந்த தாரை யோட்டத்தின்(stream) அடிப்படையிலான அணுகுமுறை ஒரு பெரிய நன்மையைக் கொண்டுள்ளது: ஒரு சி ++ கண்ணோட்டத்தில், நாம் எதைப் படிக்கின்றோம் அல்லது எழுதுகின்றோம் என்பது முக்கியமன்று, இது… Read More »

பைத்தான் எனும் கனிணிமொழியில் மாறிகளைக் கண்காணிக்க Watchpointsஎனும் திறமூல கருவியைப் பயன்படுத்திகொள்க

பைத்தான் எனும் கணினிமொழியில் மாறிகளை அதிக கண்காணிப்புடன் பிழைத்திருத்தம் செய்திடும்போது நமக்கு உதவுவதற்காக ஒரு எளிய ஆனால் சக்தி வாய்ந்த கருவியாக Watchpointsஎன்பது அமைந்துள்ளது பைத்தான் எனும் கணினிமொழியில் எழுதப்பட்ட நிரலாக்கங்களை பிழைதிருத்தம் செய்திடும்போது, அக்குறிமுறைவரிகளின் மாறிகள் ஏராளமான வகையில் மாறியமைவதை எதிர்கொள்ளும் சூழலிற்கு நாம் தள்ளப்படுவதை அடிக்கடி காண்போம். எந்தவொரு மேம்பட்ட கருவிகளும் இல்லாமல், மாறிகள் மாறிடும் என நாம் எதிர்பார்க்கும்போது அவற்றை நமக்கு அறிவிப்பதற்காக அச்சிடப்பட்ட அறிக்கைகளைப் பயன்படுத்து வதற்கான வாய்ப்புகூட நமக்கு உள்ளது.… Read More »

GIMP-எனும்உருவப்படங்களுக்கான பதிப்பாளரை வித்தியாசமாக பயன்படுத்திடுவோமா

GIMP என்பது ஒரு சிறந்த திறமூல உருவப்படங்களுக்கான பதிப்பாளர்ஆகும். நாமனைவரும் இதனை உருவப்படங்களில் திருத்தம் செய்வதற்காக மட்டுமே இதுவரையில் பயன்படுத்திவருகின்றோம் இருந்தபோதிலும் , அதன் தொகுப்பு செயலாக்க திறன்களையோ அல்லது அதன் Script-Fu எனும் பட்டியையோ ஒருபோதும் பயன்படுத்தி கொள்ளாமல் இருந்துவருகின்றோம் . இந்த கட்டுரையில் அவற்றைபற்றி ஆராய்ந்திடுவோமா. Script-Fu என்றால் என்ன? Script-Fu என்பது GIMP இற்குள் கட்டமைக்கப்பட்ட உரைநிரலாக்க மொழியாகும். இது திட்ட( Scheme) நிரலாக்க மொழியின் செயலியாகும். ஏற்கனவே நாம் ஒருபோதும் இந்த… Read More »

கட்டளை வரியிலிருந்துகூட லிபர்ஆஃபிஸ் பயன்பாடுகளை செயற்படுத்தி பயன்பெறமுடியும்

வரைகலை பயனாளர் இடைமுகப்பிற்கு(GUI) பதிலாக கட்டளை வரியிலிருந்து கூட நாம் நேரடியாக நம்முடைய கோப்புகளை மாற்றியமைத்திடுதல், அச்சிடுதல், சேமித்தல் என்பன போன்ற நாம் விரும்பும் திறனுடைய பல்வேறு பணிகளை செயல்படுத்திடுவதற்கான.வசதிகளையும் வாய்ப்புகளையும் லிபர் ஆபிஸ் ஆனது கொண்டுள்ளது, இது மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் அல்லது Google Suite இற்கான பிரபலமான திறமூல மாற்றாக அமைகிறது. கட்டளை வரியிலிருந்து செயல்படும் திறன் லிபர் ஆஃபிஸின் திறன்களில் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, பல்வேறு கோப்புகளை DOCX இலிருந்து EPUB க்கு LibreOffice உடன்… Read More »

WebAssembly எனும் இணையதொகுப்பில் ‘அனைவருக்கும் வணக்கம்’ எனும் நம்முடைய முதல் பயன்பாட்டை எவ்வாறு உருவாக்குவது

இணையதொகுப்பு(WebAssembly) என்பது ஒரு எண்மிகுறிமுறை வடிவமைப்பாகும், இதன்உதவியுடன் ஒவ்வொரு இணையஉலாவியும் அதன் புரவலர் கணினியில் இயந்திர குறிமுறைவரிகளை தொகுக்க முடியும். JavaScript , WebGL ஆகியவற்றுடன், இணைய உலாவியில் இயங்குதளத்தின்-சுதந்திரமான பயன்பாட்டிற்கான பயன்பாடுகளை புகுதல்(porting)செய்வதற்கான கோரிக்கையை இந்த WebAssembly ஆனது பூர்த்தி செய்கின்றது. சி ++ ,Rust ஆகியகணினிமொழிகளுக்கான தொகுப்புகளின் இலக்காக, இந்த இணையதொகுப்பானது இணைய உலாவிகள் குறிமுறைவரிகளை சுயமாக இயக்க உதவுகிறது. பொதுவாக ஒரு இணைய தொகுப்பிற்கான, பயன்பாடு பற்றி விவாதிக்கும்போது, அதனுடைய மூன்று நிலைகளை… Read More »

விண்டோஇயக்கமுறைமை செயல்படும் கணினிகளில் லினக்ஸ் பயன்பாடுகளை உருவாக்க WSL ஐப் பயன்படுத்துதல்-

தற்போதுநம்மெல்லோருக்கும் விண்டோ இயக்கமுறைமை செயல்படும் கணினியில் லினக்ஸ் மேம்பாட்டு சூழலை நிறுவுகை செய்வது என்பது மிகவும் எளிதான செயலாகும், அவ்வாறான சூழலில் இதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் லினக்ஸிற்கான விண்டோவின் துனைஅமைவு (Windows Subsystem for Linux (WSL)) எனும் வசதி மிகப்பெரும் உதவியாகும். பல்வேறு லினக்ஸ் பயன்பாட்டு மேம்டுத்துநர்கள் விண்டோஇயக்கமுறைமை செயல்படும் கணினிகளைக் கொண்டுள்ளனர் மேலும் SSH இன்(விண்டோவில் PuTTY எனும் மென்பொருளை நிறுவுகைசெய்வது போன்று) வாயிலாக இணைப்பதன் மூலம் தொலைநிலையில் லினக்ஸ் சேவையகங்களைப் பயன்படுத்துகின்றனர்… Read More »

ஜாவாவுடன் தரவுகளைஉள்ளிடுதலும் வெளியிடுதலும்

இந்த கட்டுரையில் ஜாவா எனும் கணினிமொழியானது தரவுகளை எவ்வாறுபடிப்பதையும் எழுதுவதையும் கையாளுகின்றது என்பதை அறிந்து கொள்ளமுடியும். பொதுவாக எந்தவொரு நிரலாளரும் தாம் உருவாக்கிடுகின்ற எந்தவொருபுதியபயன்பாட்டிற்கான நிரலாக்கத்தினை எழுதும்போதும், அந்த பயன்பாடானது பயனாளரின் கணினியில் சேமிக்கப்பட்ட கோப்புகளிலிருந்து தரவுகளை எவ்வாறு படிப்பதற்காகவும் எழுதுவதற்காகவும் செயல்படச்செய்யவேண்டும் என்பதே அடிப்படை தேவையாகும். உள்ளமைவு விருப்பங்களை பதிவேற்ற அல்லது சேமிக்க விரும்பும் சூழ்நிலைகளில் இது பொதுவான செயலாகும், ஆயினும் தரவுகளை பதிவுசெய்திடும் கோப்புகளை உருவாக்குதல் அல்லது பின்னர் பயனாளர் ஒருவர் தாம் செய்த… Read More »

இணைய வழி கல்விகற்பதை ஊக்குவிப்பதற்கான கூடுதல்வசதிவாய்ப்புகள்

உலகெங்கிலும் கொரானா பரவியுள்ள தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் எவரும் எங்கிருந்தும் கல்விகற்பதற்கான மிகவும் வசதியான சூழலை வழங்குவதில் ஒரு நல்ல இணையவழிகற்றல் தளமானதுமிக முக்கிய பங்காற்றுகின்றது. கல்வி கற்பிப்பதற்காக நேரடியாக வகுப்புகளை நடத்தஇயலாத தற்போதைய சூழலில் ஆசிரியர்களுக்கு அவ்வாறான வகுப்புகள் நடத்துவதற்கான ஒரு வழி தேவையாகும், கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு அவ்வாறான கற்றலை எளிதாக்க நட்புடன்கூடிய ஒரு பயனாளர் இடைமுகம் தேவையாகும் , மேலும் நிர்வாகிகள் இந்த கல்வி முறையின் செயல்திறனைக் கண்காணித்து வழிநடத்தி செல்வதற்கான… Read More »

சேவையகத்தை உருவாக்குவதற்கான Go எனும் கணினி மொழி

Goஎன்பது ஒரு கட்டற்ற நிரலாக்க (கணினி)மொழியாகும், இது மிகவும் எளிய, நம்பகமான திறனுடைய மென்பொருட்களை (பயன்பாடுகளை) உருவாக்குவதை எளிதாக்குகிறது. இது மிகவும் செயல்திறன் மிக்க, எளிதாக தொகுக்கப்படக்கூடிய, சிறிய, பொருள் சார்ந்த, நிலையானவகை கணினி மெழியாகும். எளிய ஆனால் மிகத் திறனுடைய இணைய சேவையகங்களை உருவாக்குவதே இதனுடைய குறைந்தபட்ச குறிக்கோளாகும், இந்த கணினி மொழி வாயிலாக அவ்வாறான சேவையகங்களை நாம் ஒருசில நிமிடங்களிலேயே உருவாக்கி செயல்படுத்திடத் துவங்கலாம். மற்ற அனைத்து கணினி மொழிகளுடன் ஒப்பிடும்போது இதனுடைய செயல்திட்டங்களின்… Read More »