Author Archives: ச. குப்பன்

ஒற்றையான PHP கோப்பின் வாயிலாக Adminer என்பதன் துனையுடன் தரவுதளம் முழுவதையும் நிருவகிக்கமுடியும்

Adminer என்பது GPL 2 அல்லது அப்பாச்சி எனும் அனுமதியின் அடிப்படையில்வெளியிடப்பட்ட MySQL, MariaDB, PostgreSQL, SQLite, MS SQL, Oracle, SimpleDB, Elasticsearch, MongoDB ஆகிய அனைத்து தரவுதளங்களுடன் ஒ த்தியங்ககூடிய PHP இல் உருவாக்கப்பட்ட தரவுதள சேவையாளரை கட்டுபடுத்தி மேலாண்மை செய்வதற்கான ஒரு கட்டற்றபயன்பாடாகும் இதனை நாம் பயன்படுத்திடும்போது எந்தவொரு தரவுதள சேவையாளரையும் பயனாளர் பெயர் கடவுச்சொற்களின் வாயிலாக மட்டுமேஅனுகமுடியும் என்ற சிறந்த பாதுகாப்பினை இது வழங்குகின்றது இதனை பயன்படுத்தி ஏற்கனவே இருக்கும் தரவுதளத்தினை… Read More »

Gpg4win எனும் கட்டற்ற பயன்பாடு ஒருஅறிமுகம்

மின்னனு கையொப்பம் ,மறையாக்கம் ஆகிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் மின்னஞ்சல்களையும் கோப்புகளையும் பாதுகாப்பாக கொண்டுசெல்ல உதவுவதுதான்  Gpg4win எனும் கட்டற்ற கட்டணமற்றபயன் பாடாகும் இதில்மறையாக்க தொழில்நுட்பமானது தேவையற்றவர்களை  குறிப்பிட்ட ஆவணத்தை படித்தறியமுடியாமல் தடுக்கின்றது அவ்வாறே மின்னனு கையொப்பதொழில்நுட்பமானது வேறுயாரும் குறிப்பிட்ட ஆவணத்தினை திருத்தம் செய்யமுடியாதவாறு தடுக்கின்றது இதன்பின்புலத்தில் GnuPG எனும் கருவி மறையாக்கம் செய்திடும் செயலை செயல்படுத்திடுகின்றது  ,மைக்ரோ சாப்ட் அவுட்லுக்கின் கூடுதல் இணைப்புகருவியாக GpgOLஎன்பதும்  விண்டோ எக்ஸ்புளோரரின் கூடுதல் இணைப்புகருவியாக GpgEXஎன்பதும்  மேலும் உரையாடல்பெட்டியான Kleopatra  என்பதற்கு… Read More »

துவக்க நிலையாளர்களுக்கான இயந்திர கற்றல் குறித்துஒரு கையேடு தொடர்ச்சி-3-

பொதுவாக உள்ளீட்டுத் தரவுகளைப் பெறக்கூடிய வழிமுறைகளை உருவாக்குவதும், புதிய தரவுகளை கிடைக்கும்போதும் வெளியீடுகளைப் புதுப்பிக்கும்போது ம்ஒரு வெளியீட்டைக் முன்கணிக்க புள்ளிவிவர பகுப்பாய்வைப் பயன்படுத்துவதும் இயந்திர கற்றலின் அடிப்படைக் கொள்கைகளாகும். அவ்வாறான இவ்வியந்திரக் கற்றலை மூன்று வகையான கணிமுறைகளாக வகைப்படுத்தலாம்: அவை பின்வருமாறு 1. மேற்பார்வையுடைய கற்றல் 2. மேற்பார்வை செய்யப்படாத கற்றல் 3. பலப்படுத்திடும் கற்றல் மேற்பார்வை யுடைய கற்றல் (Supervised learning) இந்த பெயரில் குறிப்பிடுவது போல, இதுஒரு மேற்பார்வையாளர் பயிற்சியாளராக இருப்பதை உள்ளடக்கியதன். அடிப்படையிலான… Read More »

துவக்க நிலையாளர்களுக்கான இயந்திர கற்றல் குறித்துஒரு கையேடு தொடர்ச்சி-2-

இன்றைய பகுதியில் இயந்திர கற்றலில் பொதுவாக அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்களை பற்றிகாண்போம் கணிமுறை(Algorithm): தரவு செயலாக்கம், கணிதம் அல்லது தானியங்கி பகுத்தறிவு மூலம் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படும் சுய–கட்டுப்பாட்டு விதிகளையே கணிமுறை என அழைக்கப்படும். ஒழுங்கின்மையை கண்டறிதல்(Anomaly detection): அசாதாரண நிகழ்வுகள் அல்லது மதிப்புகளைக் கொடியிடும் சிக்கல்களைக் கண்டறிய உதவும் ஒரு மாதிரியாகும். எடுத்துக்காட்டாக, கடனட்டையில் மோசடி கண்டறிதலின் வாயிலாக அசாதாரண கொள்முதல்கள் தவிர்க்கப்படுதல். வகைப்படுத்தப்பட்ட தரவுகள் (Categorical data): தரவுகளை பல்வேறுவகைகளாக ஒழுங்கமைக்கப்பட்டும் குழுக்களாகவும் பிரித்தல்.… Read More »

துவக்க நிலையாளர்களுக்கான இயந்திர கற்றல் குறித்துஒரு கையேடு-1 ‘

(ML) என சுருக்கமாக அழைக்கப்பெறும் இயந்திர கற்றல் ( Machine learning ) என்பதுவழிமுறைகள் (algorithms), புள்ளிவிவர மாதிரிகள் ஆகியவை பற்றிய அறிவியல் ஆய்வு ஆகும் அதாவது வெளிப்படையான அறிவுரைகள் எதையும் பயன்படுத்தா–மலேயே கைவசமுள்ள கணினி அமைவுகளைமட்டுமே பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட பணியை திறம்படச் செயற்படுத்துவதாகும். ,ஆயினும் இதுவெளிப்படையான அறிவுரைகளுக்குப் பதிலாக வடிவங்களையும் அனுமானங்களையும் சார்ந்துள்ளது. அதைவிட இது செயற்கை நுண்ணறிவின் துணைக்குழுவாகவே பார்க்கப்படுகிறது. ’ என விக்கிபீடியாவானது இயந்திர கற்றல் (ML)குறித்து வரையறுக்கின்றது மேலும் இவ்வியந்திர… Read More »

மெய்நிகர் கணினியை உருவாக்கிடGNOME Boxes எனும் கட்டற்றபயன்பாட்டினை பயன்படுத்தி கொள்க

புதிய சூழலில் நம்முடைய பயன்பாடு எவ்வாறு செயல்படும் என கணினியின் பயன்பாட்டினை உருவாக்கி மேம்படுத்த விழையும் நிரல்தொடராளர்கள் அல்லது புதியவர்கள் அனைவரும் தங்களுடைய அனுபவத்தை வளர்த்து கொள்ளவும் புதிய செயல்திட்டத்தை செயல்டுத்தி வெவ்வேறு சூழல்களில் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் அறிந்து கொள்ளவும் விழைபவர்களுக்கு GNOME Boxes எனும் கட்டற்ற பயன்பாடானது ஒரு சிறந்த கருவியாக விளங்குகின்றது மேஜைக்கணினியில் தங்களுடைய புதிய செயல்திட்டத்தினை modeling, testing, development ஆகிய பணிகளுக்காக இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் தரவுமையத்தில் தங்களுடைய… Read More »

எழுத்தாளர்களுக்கு உதவிடும் ஆண்ட்ராய்டின் கட்டற்ற பயன்பாடுகள்

வலைபூக்களிலும் ,சமூதாய இணையதளங்களிலும் மின்புத்தகங்களிலும் தத்தமது கருத்துகளை எழுதி வெளியிடுவதற்கு எழுத்தாளர்கள் கணினிக்கு பதிலாக தங்களுடைய கைபேசி வாயிலாகவே எழுதவிரும்புகின்றனர் அவ்வாறு கைபேசி வாயிலாக எழுதுவதற்காக அதிலும் ஆண்ட்ராய்டு சாதனங்களின் வாயிலாக எழுதுவதற்கு உதவிடுவதற்காக பின்வரும் ஆண்ட்ராய்டின் கட்டற்ற பயன்பாடுகள் பேருதவியாய் இருக்கின்றன 1. Markor எனும் ஆண்ட்ராய்டின்கட்டற்ற பயன்பாடானது எளிய நெகிழ்வுதன்மையுடன் கூடிய உரைபதிப்பானாக விளங்குகின்றது இந்த பயன்பாட்டினை செயல்படுத்தியவுடன் தோன்றிடும் திரையில் new document எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்விரியும் புதிய உரைபதிப்பான்… Read More »

JPG உருவப்படங்களை விரைவாக ஒரு படவில்லைகாட்சிபோன்று காண உதவிடும் ImageGlassஎனும் கட்டற்ற பயன்பாடு

விண்டோ 10 இயக்கமுறைமை பயன்படுத்திடும் கணினியிந் கோப்பகத்தில் நாம் சேமித்துவைத்துள்ள JPG வடிவமைப்பிலுள்ள உருவப்படங்களை ஒன்றன்பின் ஒன்றாக படவில்லைகாட்சிபோன்ற காணவிரும்புவோர் Image Glass எனும் கட்டற்ற பயன்பாட்டினை கொண்டு மிகவிரைவாக காணமுடியும் இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக GPL 3.0 எனும்அனுமதியின் அடிப்படையில்வெளியிடப்பட்டுள்ளது இது JPG, GIF, PNG, WEBP, SVG, RAW ஆகிய உருவப்படங்களின் வடிவமைப்புகளை ஆதரிக்கின்றது பயனாளர் விரும்பினால் நாம் விரும்பும் உருவப்படங்களின் வடிமைப்புகளை கூட இந்த பட்டியலில் சேர்த்து கொள்ளமுடியும் இதனை பயன்படுத்தி கொள்வதற்காக… Read More »

Microsoft Access இற்கு மாற்றான கட்டற்ற பயன்பாட்டு மென்பொருட்கள்

  சிறியவியாபாரநிறுவனங்கள் சிறிய குழுவான இயக்கங்கள் ஆகியவை பெரிய நிறுவனங்கள்போன்று அதிக செலவிட்டு தரவுதளங்களை பராமரிக்க இயலாத சூழலில் தங்களுடை தரவுதள பணிகளுக்காக Microsoft Access எனும் தரவுதள பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்வார்கள் ஆயினும் இதுஒரு தனியுடைமை பயன்பாடாக இருப்பதால்இதனை குறிப்பிட்ட கட்டணம் செலுத்திய பிறகே பயன்படுத்தி கொள்ளமுடியும்அவ்வாறான நிறுவனங்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தி கொள்வதற்காக பல கட்டற்ற பயன்பாடுகளும் தற்போது கிடைக்கின்றன அவைகளை பற்றிய ஒரு பறவை பார்வை பின்வருமாறு 1.LibreOffice Base என்பதில் வேறு எந்தவொரு… Read More »

pandocஎனும் கட்டற்றமென்பொருள்ஒரு அறிமுகம்

இது எந்தவொரு வடிவமைப்பிலான உரையையும் எந்தவொரு வடிவமைப்பிற்கும் உருமாற்றிட உதவுகின்றது அதாவது சாதாரண உரையை அல்லது குறிமுறைவரிகளை உரைசெயலிகளில் பயன்படுத்தி–கொள்வதற்காக நகலெடுத்து கொண்டுசென்று ஒட்டி பயன்படுத்திடுவோம் அதற்கு பதிலாக அவ்வுரைகோப்பினை நாம் விரும்பும் வடிவமைப்பில் உருமாற்றம் செய்திட தனியுடமை மென்பொருட்கள் பல தயாராக உள்ளன அதைவிட GPLஎனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள pandoc எனும் கட்டற்ற பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்ளலாமே இது சாதாரண உரைமட்டுமல்லாது Markdown கோப்பு போன்றது மட்டுமல்லாமல் வேறு எந்தவகை கோப்பாக இருந்தாலும் நாம்… Read More »