Category Archives: கணியம்

சில்லுவின் கதை 14. மூரின் விதிக்கு மேலும் 25 ஆண்டுகளுக்கு உயிர் கொடுத்தது

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) டிரான்சிஸ்டர்களின் அளவை மிகவும் குறைக்கும்போது கசிவு மின்னோட்டம் பல மடங்கு அதிகரிக்கிறது 0:00 முந்தைய நிகழ்வில் நாம் மீப் புறஊதா (EUV – Extreme ultraviolet) ஒளி பற்றிப் பார்த்தோம். நாம் என்ன செய்ய முயற்சிக்கிறோம்? டிரான்சிஸ்டரின் நீளத்தைக் குறைக்க வேண்டும். ஏன் நாம் அதைச் செய்ய வேண்டும்? ஒரு சதுர… Read More »

USB cable க்குள் என்னதான் இருக்கிறது? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 41

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் பல்வேறு விதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறித்து பார்த்து வருகிறோம். தற்கால கணினி மற்றும் மொபைல் துறையின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது USB (யு.எஸ்.பி)என அழைக்கப்படும் universal serial Bus தொழில்நுட்பம் தான். 1995 ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட்,IBM உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் இணைந்து யு.எஸ்.பி தொழில்நுட்பத்தை வடிவமைக்க தொடங்கியது. இதன் பயனாக, 1996 ஆம் ஆண்டு usb தொழில் நுட்பமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தில் version ஒன்று தொடங்கி இப்பொழுது… Read More »

சில்லுவின் கதை 13. எல்லாம் நாமே தயாரிக்க வேண்டியதில்லை எனும் வெற்றிக் கொள்கை

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) முதன்முதலில் காண்புறு (visible) ஒளியைப் பயன்படுத்தினர் 0:00 ஒளி அரித்தல் (Photolithography) என்பது அடிப்படையில் ஒளியைக் கொண்டு ஒரு சமதளத்தில் தேவையான வடிவமைப்பை அரித்து எடுத்தல் (etching). இதை எளிமையாகப் பார்க்கும்போது, ஒளியை ஒரு கத்தியைப் போல் பயன்படுத்தி வெட்டி எடுக்கிறோம் என்றும் சொல்லலாம். சிலிக்கான் வில்லைப் பரப்பில் ஒளியைப் பயன்படுத்தி… Read More »

எளிய தமிழில் பைத்தான் – 2

வீடியோ எப்போது? ‘உங்க பைத்தான் கட்டுரை அருமையாக இருக்காமே. வீடியோ ஏதாவது தறீங்களா? நித்யாவையும் GenAI வீடியோ போட சொல்றீங்களா?’ என்று நேற்று ஒருவர் கேட்டார். ‘ஏங்க. இப்போதான் முதல் கட்டுரையே எழுதியிருக்கேன். அதைப் படிச்சிட்டீங்களா?’ ‘இல்லீங்க. அதுக்கெல்லாம் நம்மால முடியாதுங்களே?’ ‘ஐயோ. உங்களுக்கு படிக்கத் தெரியாதா?’ ‘அட. காலேஜ் படிச்சிருக்கேன். ஆனா இதையெல்லாம் படிக்க எனக்கு வராதுங்க. தமிழ் படிப்பது கஸ்டம்.’ ‘ஓ. அப்படியா? இந்தாங்க. ஆங்கிலப் புத்தகம் . A byte of Python… Read More »

சில்லுவின் கதை 12. ஒரு நல்ல பொறியாளர் மேலும் இருவரைக் கொண்டு வரட்டும்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) சீன அறிவியலாளர்கள் ஆராய்ச்சியை விட்டு வயல்களில் வேலை செய்யும் கட்டாயம் ஏற்பட்டது 0:00 தைவான் என்பது சீனாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள மிகச் சிறிய தீவு. ஹாங்காங் அதற்கு அருகில் உள்ள இன்னும் சிறிய புள்ளி. இவற்றைப் பார்த்தால் நமக்கு என்ன தெரியவரும்? ஒரு நாட்டின் அளவு முக்கியமல்ல, அங்கு வாழும்… Read More »

சில்லுவின் கதை 11. இடைவிடாத தொழில்நுட்ப மேம்பாடுதான் உயிர்மூச்சு

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) சில்லுகளைத் தொகுப்பதோடு நிற்காமல் உயர் தொழில்நுட்பத்தில் ஈடுபடத் தைவான் இலட்சியம் 0:00 புனைவு ஆலை இல்லாத (fabless) முறையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள நிகழ்காலத்திற்கு ஒரு சிறிய பயணம் மேற்கொண்டோம். வடிவமைப்பு நிறுவனங்கள் உற்பத்தி வசதிகளில் பெரும் முதலீடு செய்வதற்குப் பதிலாகத் தயாரிப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்தப் புனைவு ஆலை இல்லாத முறை… Read More »

எளிய தமிழில் பைத்தான் – 1

அனைவரும் தாய் மொழி, ஆங்கிலம், கூடவே மூன்றாவது மொழியாக பைத்தான் ( லினக்சுடன் ) கற்றுக் கொண்டால், இந்த உலகம் இன்னும் இனிமையானதாகும். மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வழி ஏற்படும். அந்தப் பொற்காலம் விரைவில் வரட்டும்.

என்று கூறியபோது, மகன் வியன் வியந்து போனான்.

‘அம்மா உனது பிறந்தநாளுக்கு என்ன பரிசு தந்தார்?’
‘GenAI பற்றிய ஒரு தொடர் இன்று இணையத்தில் எழுதத் தொடங்கியுள்ளார். அதுவே சிறந்த பரிசு.’
‘அம்மா எழுத்தாளரா?’
‘ஆமா. திருமணமாகி 14 ஆண்டுகளில், 14 நூல்கள் எழுதியுள்ளார்.’
‘ஆ. நான் பெரியவனாகி அவற்றை எல்லாம் படிப்பேன்.’
‘நீயும் எழுத வேண்டும்’
‘எழுதுவேன் எழுதுவேன். நீங்கள் எத்தனை புத்தகம் எழுதியுள்ளீர்கள்?’

பைத்தான் கற்க ஒரு சிறந்த வாய்ப்பு

பைத்தான் கற்பதற்கு பல்வேறு மாணவர்களும் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களும் ஆர்வமாக காத்துக் கொண்டிருப்பீர்கள். பல்வேறு இணைய வாய்ப்புகளின் மூலமாகவும், பயிற்சி நிறுவனங்களின் மூலமாகவும் கற்றுக் கொள்ள முடிந்தாலும் தெளிவாக புரிந்து கொள்வதில் சிரமங்கள் நீடிக்கும். மேலும், பொருளாதார சூழல்களால் சரியாக வாய்ப்பு அமையாமல் கற்றுக்கொள்ள முடியாது போனவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தற்கால செயற்கை நுண்ணறிவு யுகத்தில் பைத்தான் போன்ற கணினி மொழிகளை கற்பது இன்றியமையாதது. நீங்கள் எந்த துறையில் இயங்கிக் கொண்டு இருந்தாலும், பைத்தான் போன்ற கணினி… Read More »

C மொழியின் சில முக்கியமான குறிச்சொற்கள் | எளிய தமிழில் சி

எளிய தமிழில் சி மொழி தொடர்பான கட்டுரைகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது சில முக்கியமான சீன் மொழியின் குறிச்சொற்கள் (keywords) குறித்துதான். இந்த குறி சொற்களை கவனமாக படித்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் அடுத்தடுத்து பார்க்கப் போகிற நிரல் ஆக்கங்களுக்கு இத்தகைய குறிச்சொற்கள் முக்கியமானது. மொத்தமாக சீ மொழியில் 32 குறிச்சொற்கள் இருக்கிறது. இந்த அனைத்து குறிச்சொற்களையும் முதலிலேயே கற்று வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை போகப் போக ஒவ்வொரு… Read More »

சில்லுவின் கதை 10. சொந்தப் புனைவு ஆலை இல்லாதத் தயாரிப்பு நிறுவனங்கள்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) சில்லு தயாரிக்கும் செயல்முறை உயர்நிலைக் கண்ணோட்டம்  0:30 ஏன் சொந்தப் புனைவு ஆலை இல்லாத (Fabless) தயாரிப்பு நிறுவனம் அவசியம்? இதற்குப் பதில் கிடைக்க, சில்லுகள் தயாரிக்கப்படும் செயல்முறையை முதலில் பார்ப்போம். IC வடிவமைப்பாளர்கள் கேடன்ஸ் (Cadence), மென்டர் கிராபிக்ஸ் (Mentor Graphics), சினாப்சிஸ் (Synopsis) ஆகியவற்றின் EDA – Electronic… Read More »